Published:Updated:

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா - வரலாற்றில் 2ம் முறையாக மக்கள் பங்கேற்பின்றி நடந்த கொடியேற்றம்!

பனிமய அன்னை பேராலயம்
பனிமய அன்னை பேராலயம்

உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 439-வது திருவிழா, கொடியேற்றம் வரலாற்றில் இரண்டாம் முறையாகப் பொது மக்கள் பங்கேற்பின்றி நடந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடியின் முக்கிய அடையாளங்களில் ஒன்று ’பனிமய மாதா’ எனப்படும் ‘திவ்விய சந்திமரிய தஸ்நேவிஸ் மாதா’ பேராலயம். தமிழகத்தின் பல கிறிஸ்தவ தேவாலயங்களில் ’மறையுரை’ என்பது காலையில் மட்டும்தான் நடைபெறும். ஆனால், உலகிலேயே மதியம் மறையுரை நடக்கக்கூடிய ஒரே ஆலயம், இந்தப் பனிமய மாதா பேராலயம் மட்டும்தான்.

அதேபோல, ஆசியாவிலேயே தினமும் 8 திருப்பலிகள் நடைபெறுவது இங்கு மட்டும்தான். கிறிஸ்தவர்களுக்கு அடுத்தபடியாக இந்துக்களும், முஸ்லீம்களும் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு, தங்கள் பிரார்த்தனை நிறைவேற மெழுகுவத்தி ஏந்தி பனிமய அன்னையை வழிபடுவது கூடுதல் சிறப்பாகும்.

மக்கள் பங்கேற்பின்றி நடந்த கொடியேற்றம்
மக்கள் பங்கேற்பின்றி நடந்த கொடியேற்றம்

ஆண்டு தோறும், ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை பேராலயத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழா நாள்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவ மாணவிகள் கல்விமேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என, அனைத்து தரப்பினருக்கான விசேஷ சிறப்புத் திருப்பலிகள் நடைபெறும்.

திருவிழாவின் 10-ம் நாள் விழாவில் மாநகர வீதிகளில் பனிமய அன்னையின் ’திருவுருவ தேர்ப்பவனி’ நடைபெறும். இத்திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மாதாவை தரிசிக்க தூத்துக்குடிக்கு பக்தர்கள் வருவார்கள். கடந்தாண்டைப் போலவே, இந்த ஆண்டும், கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் பங்கேற்பின்றித் திருவிழா நடைபெறும் எனவும், கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் மக்கள் வீடுகளில் இருந்தே மாதாவை மனதில் நினைத்து பிரார்த்தனைகள் செய்யும் படியும் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அறிவித்திருந்தார்.

கொடியேற்றம்
கொடியேற்றம்

அதன்படி, பேராலய வரலாற்றில் இரண்டாவது முறையாக பக்தர்கள் பங்கேற்பின்றி பனிமய மாதா ஆலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. கூட்டுத்திருப்பலிக்குப் பிறகு ஆலயத்தின் முன்உள்ள கொடிக்கம்பத்தில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் பங்கு தந்தை குமார் ராஜா மற்றும் முக்கிய பங்கு நிர்வாகிகள் முன்னிலையில் பனிமய அன்னை திருவிழா கொடியேற்றப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருவெண்காடு: 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்க என்ன வழி?

சமாதானத்தை எண்ணிப் புறாக்களும் பறக்கவிடப்பட்டன. தொடர்ந்து, பனிமய அன்னைக்கு தங்கக்கிரீடம் அணிவிக்கப்பட்டது. இத்திருவிழா, இன்று துவங்கி வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சி முதல் சிறப்புத் திருப்பலிகள் வரை திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் மக்கள் வீட்டில் இருந்தே பார்ப்பதற்கு வசதியாக உள்ளூர் தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஆலய பங்கு சபை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்த கொடியேற்றம்
பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்த கொடியேற்றம்

ஊரடங்கு அமலில் இருப்பதால், இந்தாண்டும் சப்பர பவனி, தேர்பவனி நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருவிழாவின் மற்ற நாள்களில் குறிப்பிட்ட அளவு பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து தரிசித்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திருவிழாவையொட்டி, ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், இரண்டு காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் 400 காவலர்கள் ஆலயத்தைச் சுற்றிப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு