Published:Updated:

`மூலவர் சந்நிதிக்குச் செல்லமுடியாது!'- அத்திவரதர் தரிசன நேரத்தில் மாற்றம்

அத்திவரதர்
News
அத்திவரதர்

அத்திவரதர் தரிசனம் தொடங்கி இன்றோடு 19 நாள்கள் ஆன நிலையில், நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இதையொட்டி அத்திவரதர் தரிசன நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

``அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்த பிறகு மேற்குக் கோபுரம் வழியாக வெளியே அனுப்பப்படுவார்கள். அவர்கள் மூலவர் சந்நிதிக்குச் செல்லமுடியாது. விஐபி தரிசனம் மாலை 6 மணிக்கு மூடப்படும். மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை ஆன்லைன் டிக்கெட் (ரூ.300 டிக்கெட்) உள்ளவர்கள் விரைவு தரிசனம் மூலமாக அனுப்பப்படுவார்கள்.

அத்திவரதர்
அத்திவரதர்

ஆன்லைன் மூலமாக விரைவு தரிசனத்திற்கு ஒரு நாளைக்கு 500 பேர் மட்டுமே அனுப்பப்படுவார்கள்" என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மேலும் அவர் பொதுமக்களுக்கு விடுத்த கோரிக்கையில், ``சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிக அளவு கூட்டம் வரும். எனவே, இந்த நாள்களில் கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அதிக அளவில் வருவதைத் தவிர்க்கலாம்.

அத்திவரதர் தரிசனம்
அத்திவரதர் தரிசனம்

அவர்களுக்காக தனி வரிசை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். ஆனாலும், எண்ணிக்கை அதிகமாகும்போது அவர்களுக்கும் தரிசனம் செய்வதற்கு நேரமாகும்'' என்று கூறியிருக்கிறார். இன்றும் அத்திவரதரை தரிசிக்க ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். வரும் சனி மற்றும் ஞாயிறு தினத்தன்று பக்தர்கள் வருகை இன்னும் அதிகமாகலாம். எனவே, அத்திவரதரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், மேற்கண்ட தரிசன நேரங்களையும் ஆலோசனைகளையும் மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.