Election bannerElection banner
Published:Updated:

இந்தப் புரட்டாசிக்குத் திருப்பதி போறீங்களா? - பயனுள்ள சில பயணக் குறிப்புகள் உங்களுக்காக!

Tirupati
Tirupati

திருப்பதி வேங்கடேசப் பெருமாளைத் தரிசிக்க தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பக்தர்கள் இந்த மாதம் முழுவதும் பெருந்திரளாக வந்து, சுவாமி தரிசனம் செய்வார்கள்.

திருப்பதி வேங்கடேசப் பெருமாள் பிறந்த மாதமான புரட்டாசி மாதம் இன்று பிறக்கிறது. திருப்பதி உள்ளிட்ட வைணவக் கோயில்களிலெல்லாம் கோவிந்தன் புகழைப் பாடும் பாடல்கள், அலங்காரங்கள், ஆராதனைகள் என விழாக்கள் சிறப்பாக நடக்கத் தொடங்கும்.

Tirumala
Tirumala

திருப்பதி வேங்கடேசப் பெருமாளைத் தரிசிக்க தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பக்தர்கள் இந்த மாதம் முழுவதும் பெருந்திரளாக வந்து, சுவாமி தரிசனம் செய்வார்கள்.

தங்களுக்குள் குழுக்களை உருவாக்கி, பாத யாத்திரையாக வருபவர்களும் உண்டு. இவர்களைத் தவிர கீழ்த்திருப்பதி வரை பஸ்சிலோ ரயிலிலோ வந்து திருமலை அடிவாரத்தில் இருந்து நடந்து சென்று மலையப்பசுவாமியைத் தரிசிப்பவர்களுமுண்டு.

பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய, இங்கே சில முக்கிய குறிப்புகளை வழங்குகிறோம்.

Tirumala
Tirumala

* கீழ்த்திருப்பதியிலிருந்து மேல் திருப்பதிக்குச் செல்ல இரண்டுவிதமான மலைப்பாதைகள் இருக்கின்றன. அலிபிரி டோல்கேட்டிலிருந்து காளி கோபுரம் வழியாகச் செல்வது ஒரு வழி. மற்றொன்று சீனிவாசமங்காபுரத்துக்கு அருகில் உள்ள ஶ்ரீவாரிமெட்டு வழி. அலிபிரியிலிருந்து 'ஆனந்த நிலையம்' என்னும் சந்நிதானத்துக்கு 11 கிலோ மீட்டர். 3,800 படிக்கட்டுகள். முதல் 2,400 படிக்கட்டுகள் தொடர்ச்சியாகப் படிக்கட்டுகளாக இருக்கும். அடுத்துள்ள படிக்கட்டுகள் நடைபாதையுடன் இருக்கும்.

* இந்த வழியாக வரும் பக்தர்களுக்கு 'காலி கட்டம்' என்னும் இடத்தில் இலவச சர்வ தரிசனத்துக்கான (திவ்ய தரிசனம்) டோக்கன் வழங்கப்படுகிறது. அதிகாலை 4 மணி முதல், நாளொன்றுக்கு 14,000 தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

Devotees
Devotees

* வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில் கூட்டம் அதிகமிருந்தால், இந்த திவ்ய தரிசன டோக்கன்கள் காலை 6 மணிக்குள்ளாகவே தீர்ந்துவிடும். அதனால், அதிகாலை 4 மணிக்கு முன்பாகவே காலி கோபுரத்தில் இருக்குமாறு பயணத்திட்டத்தை வகுத்துக்கொள்வது நல்லது.

* திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் டோக்கன்கள் தீரும் வரை கொடுப்பார்கள். சில நாள்களில் நாள்முழுவதும் கொடுப்பார்கள்.

* அலிபிரியில் நம்முடைய லக்கேஜ் பைகளை சிறிய பூட்டு போட்டு தேவஸ்தான அலுவலகத்தில் கொடுத்து விட்டால், அவற்றை மலையில் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

Tirumala
Tirumala

* அலிபிரியிலிருந்து காலி கோபுரம் வரை 2,400 படிக்கட்டுகள். கிட்டதட்ட இது 2 கிலோமீட்டர். இதன் பிறகு 1,400 படிக்கட்டுகள். படிக்கட்டுகளாக இல்லாமல் நடைபாதையைப் போலிருக்கும். இதன் தூரம் 9 கிலோ மீட்டர்.

Alipiri
Alipiri

* ஶ்ரீவாரி மெட்டுப் பாதையில் முழுவதும் படிக்கட்டுகள்தான் இருக்கும். நடைபாதை இருக்காது. ஆனால் அலிபிரி வழியைவிட குறைவான தூரம் என்பதால், விரைவில் திருமலையை அடையலாம். இங்கு 6,000 சர்வ தரிசன டிக்கெட்டுகள் மட்டுமே அதிகாலை 4 மணி முதல் வழங்கப்படுகின்றன.

* திருமலையில் காலைக்கடன்களை முடிக்கவும், குளிப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டிருக்கும். நம் லக்கேஜ்களை இலவச லாக்கரில் வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்யச் செல்லலாம்.

* மலைப்பாதை முழுவதும் விளக்குகள் போடப்பட்டிருப்பதாலும் 24 மணிநேரமும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாலும் பக்தர்கள் இரவில் பயமின்றி நடந்து செல்லலாம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மற்றும் டாய்லெட் வசதிகள் உண்டு. ஆங்காங்கே சின்னச்சின்ன பெட்டிக்கடைகளும் உண்டு.

* புரட்டாசி மாதம் முழுவதுமே கூட்டம் அதிகமிருக்கும் என்பதால், ஆன்லைன் மூலமாக 300 ரூபாய் சிறப்பு தரிசனத்துக்கு முன்பே புக் செய்து கொள்வது நல்லது.

Tirumala
Tirumala

* திருமலையில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 750 முதல் 1000 வரை மட்டுமே வழங்கப்படுகின்றன. எனவே அதை எதிர்பார்த்து வந்து சிரமப்படுவதைத் தவிர்ப்பது நல்லது.

* ஆதார் கார்டை காண்பித்துப் பெறும் நேர ஒதுக்கீட்டு சர்வ தரிசன டிக்கெட்டுகளை கீழ்திருப்பதியிலேயே பெற்றுவிடுங்கள்.

* செப்டம்பர் 30-ம் தேதி தொடங்கி அக்டோபர் 7 -ம் தேதி பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. குறிப்பாக அக்டோபர் 4-ம் தேதி கருட சேவை நடைபெறும் நாளில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள். புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை (அக்டோபர் 5-ம் தேதி) கட்டுக்கடங்காத கூட்டம் இருக்குமென்பதை மனத்தில் கொண்டு அதற்கேற்ப உங்களின் பயணத் திட்டங்களை வகுத்துக்கொள்ளுங்கள்.

Tirumala
Tirumala

உங்கள் திருமலை யாத்திரையை விடுமுறை அல்லாத நாள்களில் தொடர்வது நல்லது. திருமலைக்குச் செல்லும் முன்பே ரயில் மற்றும் பேருந்து டிக்கெட்டுகள், தங்கும் வசதிகள் மற்றும் சேவை டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு