திருமலை திருப்பதி சிறப்பு தரிசனம் - சேவைக்கான ஆன்லைன் முன்பதிவு இணையதள முகவரி மாற்றம் #Tirupati

திருமலையில் அறை எடுத்துத் தங்குவது, 300 ரூபாய் சிறப்பு தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகளில் பங்கேற்பது போன்றவற்றுக்கு ஆன்லைனிலேயே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது வழக்கம்.
திருப்பதி வேங்கடேசப் பெருமாளைத் தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்கள் மிகுந்த திட்டமிடலுடன் செல்வது வழக்கம். திருமலையில் அறை எடுத்துத் தங்குவது, 300 ரூபாய் சிறப்பு தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகளில் பங்கேற்பது போன்றவற்றுக்கு ஆன்லைனிலேயே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது வழக்கம்.

தற்சமயம் ஊரடங்கு நடப்பில் இருப்பதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது கடந்த 60 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் மட்டுமாவது கிடைக்கும் வகையில் சில ஏற்பாடுகளைச் செய்து வருகிறது தேவஸ்தானம்.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் https:/ttdsevaonline.com என்று இருந்த இணையதள முகவரியை https:/tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்துக்கு மாற்றம் செய்துள்ளது. ஊரடங்கு எப்போது வேண்டுமானாலும் தளர்த்தபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு பக்தர்கள் மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டால், புதிய இணையதளத்தில் தங்களுக்கான முன்பதிவுகளைப் பதிவு செய்துகொள்ளும்படித் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. புதிய இணையதளம் முன்பிருந்ததைவிட மிகவும் எளிமையான முறையில் பதிவு செய்யும்விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.