Published:Updated:

`சூரிய கிரகணம், ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி!’- திருப்பதியில் டிச. 26, 31 தேதிகளில் தரிசன நேர விவரம்

வருகிற டிசம்பர் 26-ம் தேதி சூரிய கிரகணம் காலை 8.08 மணி முதல் பகல் 11.30 மணி வரை ஏற்படுவதையொட்டி திருப்பதி கோயில் 13 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது.

திருப்பதி
திருப்பதி

திருமலை திருப்பதியில் பனி படர்ந்த விடியற்காலை 3 மணிக்கு ஒலிபரப்பாகும் சுப்ரபாதம் மிகவும் விசேஷம். ஆனால், சுப்ரபாத சேவைக்குப் பதிலாக மார்கழி மாதம் முழுவதும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாளின் திருப்பாவைப் பாசுரங்களையே பாடுகின்றனர்.

Tirupaty
Tirupaty

திருமலை திருப்பதிக்கும் நம் தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்பை அளிக்கும் உயரிய மரியாதையாக இது பார்க்கப்படுகிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பூமிதேவியின் அம்சமாகப் பெண்ணாகப் பிறந்தவர்.

திருப்பதி மலையில் சி.ஆர்.ஓ ஆபீஸ், கருடாத்ரி, லெபாக்ஸி, வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ், வராகசாமி கெஸ்ட் அவுஸ் எனப் பல இடங்களுக்கும் செல்ல 'தர்ம ரதம்' என்னும் இலவசபஸ்கள் 10 நிமிடங்களுக்கு ஒன்று எனும் விதமாக இயங்கி வந்தன.

Tirupaty
Tirupaty

ஆரஞ்சு நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த தர்ம ரத பஸ்களில் இலவசமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் பயணிக்கலாம். பக்தர்களின் வசதிக்காக இந்த பஸ்களின் எண்ணிக்கையும் அதன் நடைகளும் (டிரிப்புகள்) தற்போது அதிகமாக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் எளிதாக இந்த வசதியைப் பெறலாம்.

வருகிற டிசம்பர் 26-ம் தேதி சூரிய கிரகணம் காலை 8.08 மணி முதல் பகல் 11.30 மணி வரை ஏற்படுவதையொட்டி திருப்பதிக் கோயில் 13 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது. டிசம்பர் 25-ம் தேதி இரவு 11 மணி முதல் மறுநாள் 26-ம் தேதி பகல் 12 மணி வரை கோயிலின் நடை சாத்தப்படுகின்றது.

Temple
Temple

பிற்பகல் 2 மணிக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி கல்யாணோத்சவம்தூஞ்சல் சேவா, ஆர்ஜித பிரம்மோத்சவம், வசந்தோத்சவம் ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அன்னதானக்கூடமும் இயங்காதென்பதால் பக்தர்கள் இதற்கேற்ப தங்களின் பயணத்திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.

Tirupaty
Tirupaty

திருப்பதியில் ஜனவரி 6-ம் தேதி வைகுண்ட ஏகாதசி அனுசரிக்கப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். இதையொட்டி கோயிலை சுத்திகரிக்கும்விதமாக 'கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி' டிசம்பர் 31-ம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறுவதால், அன்றையதினத்துக்குரிய ஆர்ஜித சேவைகள் யாவும் ரத்து செய்யப்படுகின்றது எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.