Published:Updated:

கொரோனா எதிரொலி - திருப்பதியில் முன்பதிவு செய்யப்பட்ட ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் ரத்து! #Tirupati

திருப்பதி
திருப்பதி

திருப்பதி வேங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், சளி, இருமல், காய்ச்சல் போன்ற உடல் நலப் பாதிப்புகளிருந்தால், திருமலைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளும்விதமாக முக்கியமான பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே திருப்பதி வேங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சளி, இருமல், காய்ச்சல் போன்ற உடல் நலப் பாதிப்புகளிருந்தால் திருமலைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

Tirumala
Tirumala

இந்த நிலையில் ஆர்ஜித சேவைகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தையும் ரத்து செய்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

திருமலைக்கு வரும் பக்தர்களின் நலனுக்காகவும் வசதிக்காகவும் பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மருத்துவ உதவிகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது

Tirupaty
Tirupaty

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்களை திருமலை அடிவாரத்திலிருக்கும் அலிபிரி டோல்கேட், அலிபிரியிலிருந்து படிக்கட்டுகள் வழியாக மலையேறுபவர்கள் புறப்படும் இடம், ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்கள் மூன்று அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மாஸ்க் அணிவது பற்றியும் அதன் பாதிப்புகள் அறிகுறிகள், செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை பற்றியும் பக்தர்களுக்கு விளக்கிக் கூறப்படுகிறது.

Alipiri
Alipiri
B Sridhar Raju

இதுதொடர்பான அறிவிப்புகள், விளம்பரங்கள், போஸ்டர்கள் நோட்டீட்ஸ்களாக வழங்கப்படுவதுடன், எஸ்.வி.பி.சி சேனலில் இந்த விழிப்புணர்வு பிரசாரமும் தொடர்ந்து ஒளிபரப்பப்படும்.

பக்தர்கள் அனைவரும் ஸ்க்ரீன் டெஸ்ட் செய்த பிறகுதான், திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஸ்கிரீன் டெஸ்ட் மையங்கள் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரண்டு இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

Tirupaty
Tirupaty

முன்பதிவு சேவா டிக்கெட்டுகள் ரத்து!

300 ரூபாய் சிறப்பு தரிசனம், அறைகள் ஒதுக்கீடு கல்யாணோத்சவம், வசந்தோத்சவம் போன்ற ஆர்ஜித சேவாக்களில் பங்குபெற முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்களும் வருகிற மே மாதம் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் இதற்கேற்பத் தங்களின் பயணங்களை வகுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். முன்பதிவுக் கட்டணத் தொகை அவர்களின் வங்கிக் கணக்குக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Alipiri
Alipiri
PN Jaya Sekhar

இதுதொடர்பாக பக்தர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை dyeotemple@gmail.com எனும் ஆன்லைனில் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு