Published:Updated:

சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி கோயில் நடை சாத்தப்படுகிறது!#Tirupati

அன்னதானக்கூடமும் இயங்காது என்பதால் பக்தர்கள் இதற்கேற்ப தங்களின் பயணத்திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.

திருப்பதி
திருப்பதி

சூரிய கிரகணம் நாளை டிசம்பர் 26-ம் தேதி காலை 8.08 மணி முதல் பகல் 11.30 மணி வரை ஏற்படுவதையொட்டி திருப்பதி கோயில் 13 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது.

சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி கோயில் நடை சாத்தப்படுகிறது!#Tirupati

இன்று டிசம்பர் 25-ம் தேதி இரவு 11 மணி முதல் மறுநாள் 26-ம் தேதி பகல் 12 மணி வரை கோயிலின் நடை சாத்தப்படுகிறது. பிற்பகல் 2 மணிக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இதையொட்டி கல்யாணோத்சவம், ஊஞ்சல் சேவா, ஆர்ஜித பிரம்மோத்சவம், வசந்தோத்சவம் ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tirupaty
Tirupaty
B Sridhar Raju

அன்னதானக்கூடமும் இயங்காது என்பதால் பக்தர்கள் இதற்கேற்ப தங்களின் பயணத்திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி கோயிலைச் சுத்தப்படுத்துவதற்காக 'கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி' டிசம்பர் 31-ம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது.

Tirupaty
Tirupaty
PN Jaya Sekhar

இதனால், அன்றைய தினத்துக்குரிய ஆர்ஜித சேவைகள் யாவும் ரத்து செய்யப்படுகின்றன எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.