Published:Updated:

தென்னாட்டு திருப்பதிகள்

தென்னாட்டு திருப்பதிகள்
பிரீமியம் ஸ்டோரி
தென்னாட்டு திருப்பதிகள்

பகவான் கிருஷ்ணர் தமால விருட்சத்தின் அடியில் நின்றுகொண்டுதான் புல்லாங்குழல் இசைத்ததாகவும், அந்த இசையில் ராதை லயித்ததாகவும் சொல்லப்படுகிறது.

தென்னாட்டு திருப்பதிகள்

பகவான் கிருஷ்ணர் தமால விருட்சத்தின் அடியில் நின்றுகொண்டுதான் புல்லாங்குழல் இசைத்ததாகவும், அந்த இசையில் ராதை லயித்ததாகவும் சொல்லப்படுகிறது.

Published:Updated:
தென்னாட்டு திருப்பதிகள்
பிரீமியம் ஸ்டோரி
தென்னாட்டு திருப்பதிகள்

தமால விருட்சம்... திருக்கல்யாண உற்சவம்!

காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது தென்னாங்கூர் ஞானானந்தகிரி பீடம். இந்தப் பீடத்தின் கோபுர தரிசனம், பூரி திருத்தல தரிசனப் புண்ணியத்தையும் அருள்மிகு ரகுமாயி சமேதராகக் காட்சி தரும் பாண்டுரங்கன் தரிசனம் நமக்குப் பண்டரிபுரம் சென்ற புண்ணியத்தையும் ஒருசேரத் தருகின்றன. இங்கு சனிக்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் திருப்பதி யைப் போலவே திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகின்றது.

தென்னாட்டு திருப்பதிகள்

இந்தத்தலத்தின் தலவிருட்சமாக தமால விருட்சம் உள்ளது. பகவான் கிருஷ்ணர் தமால விருட்சத்தின் அடியில் நின்றுகொண்டுதான் புல்லாங்குழல் இசைத்ததாகவும், அந்த இசையில் ராதை லயித்ததாகவும் சொல்லப்படுகிறது. பொதுவாக வட இந்தியப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் தமால விருட்சம் இங்கே இருப்பது தனிச் சிறப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தென்னாட்டு திருப்பதிகள்

பாதாள ஸ்ரீநிவாசன்

கும்பகோணத்தின் மையத்தில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது அருள்மிகு சார்ங்கபாணி திருக்கோயில். இங்கு பாதாளஸ்ரீநிவாஸருக்குத் தனிச் சந்நிதி ஒன்று உள்ளது. தன் கணவர் மகா விஷ்ணுவை பிருகு முனிவர் உதைத்தும் முனிவரை தண்டிக்காததால் கோபமுற்றாள் மகாலட்சுமி. எனவே, அவள் விஷ்ணுவை விட்டு விலகி, கொல்லாபுரம் சென்று தங்கினாள்.

அதன் பிறகு ஸ்ரீநிவாஸன் என்ற பெயரில் பூவுலகில் மகா விஷ்ணு, பத்மாவதியை திருமணம் செய்து கொண்டதைக் கேள்விப்பட்ட மகாலட்சுமி மேலும் கோபமடைந்தார். எனவே, திருமாலைத் தேடி திருமலைக்கு வந்தார் லட்சுமி. இதை அறிந்த மகாவிஷ்ணு கும்பகோணம் வந்து பாதாளத்தில் ஒளிந்து கொண்டார். அதனால் அவருக்கு ‘பாதாள ஸ்ரீநிவாசன்’ என்ற பெயர் ஏற்பட்டதாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தென்னாட்டு திருப்பதிகள்

கூர்ம அவதாரப் பெருமாள்!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி செல்லும் பாதையில், சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள ஊர் சோனகன் விளை. அங்கிருந்து வலப்புறமாகச் செல்லும் பாதையில் ஒன்றரை கி.மீ. தூரம் பயணித்தால், கூர்ந்தான்விளை எனும் ஊர் வருகிறது. இங்கே ஏரிக்கரையில் ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். தோற்றத்தில் திருப்பதி ஏழுமலையானைப் போன்றே காட்சி தரும் இவர் சந்நிதியில், கூர்ம அவதாரப் பெருமாளையும் தரிசிக்கலாம். நடுகல் திருமேனி போன்று காட்சிதரும் இந்த ஸ்வாமிக்குக் கவசம் சாத்தியுள்ளனர். கவசத்தை அகற்றினால் ஸ்வாமியின் மார்பும், தூக்கிய பொற் பாதங்களும், திருமேனியின் திருவடியில் உள்ள தாமரையும் தெளிவாகத் தெரியுமாம். நடுகல் திருமேனியின் பின்புறம் கைகளால் ஸ்பரிசித்தால், ஆமையின் ஓடு போன்று மேடாக இருப்பதை அறியலாம் என்கிறார்கள்.

நெல்லைச் சீமையில் உள்ள தசாவதார தலங்களில் இது கூர்ம அவதாரத்துக்கான தலம் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism