திருப்பதி - திருச்சானூர் பிரம்மோற்சவம் 23 -ம் தேதி தொடங்குகிறது! #Tirupati

திருமலையில் நடப்பதைப் போன்றே திருச்சானூர் எனப்படும் அலர்மேலு மங்காபுரத்தில் கோயில்கொண்டிருக்கும் பத்மாவதி தாயார் கார்த்திகை மாதத்தில் பிறந்ததையொட்டி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.
திருமலை திருப்பதியில் கோயில்கொண்டிருக்கும் வேங்கடேசப் பெருமாள், புரட்டாசி மாதத்தில் பிறந்ததால் அந்த மாதத்தில் பிரம்மோற்சவ விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.

திருமலையில் நடப்பதைப் போன்றே திருச்சானூர் எனப்படும் அலர்மேலு மங்காபுரத்தில் கோயில்கொண்டிருக்கும் பத்மாவதி தாயார், கார்த்திகை மாதத்தில் பிறந்ததையொட்டி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.
இந்த ஆண்டு திருச்சானூர் பிரம்மோற்சவ விழா 23-ம் தேதி தொடங்கி, டிசம்பர் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. நம் பிரார்த்தனையைப் பெருமாளிடம் வைக்க வேண்டுமானால், முதலில் தாயாரிடம் விண்ணப்பத்தை வைத்து வணங்கிய பின்னரே மலையப்பசுவாமியைத் தரிசிக்கச் செல்வார்கள்.

திருச்சானூரில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவிலும் திரளான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
திருச்சானூர் பிரம்மோறஸவ விழா விவரம்:
பிரம்மோற்சவத்தையொட்டி அலர்மேலு மங்காபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நாளை காலை 8 மணி முதல் குங்கும அர்ச்சனையும் மாலையில் அங்குரார்ப்பண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

23.11.2019, துவஜாரோகணம், சிறிய சேஷ வாகனம்.
24.11.2019 பெரிய சேஷ வாகனம்.
25.11.2019 முத்துப்பந்தல், சிம்ம வாகனம்.
26.11.2019 கற்பக விருட்ச வாகனம், அனுமந்த வாகனம்.
27.11.2019 முத்துப் பல்லக்கு, கஜ வாகனம்.
28.11.2019 சர்வ பூபால வாகனம், கருட சேவை.
29.11.2019 சூரியபிரபை வாகனம், சந்திரபிரபை வாகனம்.
30.11.2019 திருத்தேர், குதிரைவாகனம்.
1.12.2019 சக்கரஸ்நானம்.
2.12.2019 புஷ்பாஞ்சலி.