Published:Updated:

`திருப்பணி எங்கள் கொடுப்பினை!'

பள்ளியறை வெள்ளிக்கதவு
பிரீமியம் ஸ்டோரி
பள்ளியறை வெள்ளிக்கதவு

காளிகாம்பாள் கோயிலில் பள்ளியறை வெள்ளிக்கதவு

`திருப்பணி எங்கள் கொடுப்பினை!'

காளிகாம்பாள் கோயிலில் பள்ளியறை வெள்ளிக்கதவு

Published:Updated:
பள்ளியறை வெள்ளிக்கதவு
பிரீமியம் ஸ்டோரி
பள்ளியறை வெள்ளிக்கதவு

இறைவன் பிறவான் இறவான். அவனுக்குப் பசியுமில்லை உறக்கமுமில்லை. அநாதிகாலமாக உண்மைப் பொருளாக விளங்கும் அந்த இறைவனுக்குநாம் அபிஷேகம் செய்கிறோம், நிவேதனங்கள் படைக்கிறோம், உறங்கவைக்கத் தாலாட்டுபாடுகிறோம், விழிக்க வைக்கத் திருப்பள்ளி எழுச்சி இசைக்கிறோம். இவை எல்லாம் ஏன்?

பரமாத்மா மீது ஆத்மாக்கள் கொண்ட அன்பின் வெளிப்பாடுகளே இவை என்பார்கள் பெரியோர்கள்.

இறை மூர்த்தங்களின் மீது நாம் காட்டும் பாசம் அந்த மூர்த்தியின் மீதே காட்டும் பாசமாகும். காளத்தியில் லிங்கத்தின் மீது அளவற்ற அன்பு செலுத்திய திண்ணன், ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தாலும் கிடைக்காத அந்த ஈசனின் தரிசனத்தை ஆறே நாளில் பெற்று கண்ணப்பனானார்.

இதுவே மூர்த்தங்களுக்குச் செய்யும் சேவையின் மேன்மையை விளக்கும். இறைவனுக்கான சேவை களில் ஒன்றுதான் பள்ளியறை சேவை.

பெரும்பாலான சிவாலயங்களில் பள்ளியறை ஒன்று இருக்கும். இரவு அர்த்தஜாம பூஜை முடிந்ததும் இறைவனின் திருமேனி அல்லது திருப்பாதத்தை அலங்கரித்து அதைப் பல்லக்கில் ஏற்றிச் சுமந்து சென்று பள்ளி யறையில் சேர்ப்பர்.

இந்த வழிபாட்டுக்குத் தத்துவார்த்தமாக பல விளக்கங்கள் சொல்லியுள்ள பெரியோர், லௌகீகமாகவும் அதற்குக் கிடைக்கும் பலன்களையும் சொல்லியுள்ளனர்.

`திருப்பணி எங்கள் கொடுப்பினை!'

பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டால் இல்லறம் சிறக்கும். திருமணம் ஆகாத இளைஞர்கள் விரைவில் திருமண யோகம் பெறுவர்.

பள்ளியறைக்குச் சுவாமியை யும் அம்பாளையும் சுமந்து வரும்போது, உரிய மங்கல வாத்தியங்களை இசைக்கும் அன்பர் களுக்கு, சிவ லோகத் தில் இசைக்கருவிகள் வாசிக்கும் கணங்களாகும் பாக்கி யம் வாய்க்கும்

பள்ளியறை பூஜைக்கு சுவாமி யைப் பல்லக்கில் சுமந்துவரும் பாக்கியம் பெறும் நபர்கள், மறுபிறவியில் செல்வந்தர்களாகவும் ஞானவான்களாகவும் பிறப்பார்கள் என்கிறார்கள்.

பள்ளியறையை அலங்கரிக்கும் பூக்கள், அந்த வேளையில் இறை வனுக்கான நிவேதனம் ஆகியவற்றை வழங்கும் அன்பர் களுக்கு இந்த உலகில் ஈடு இணையற்ற செல்வம் வாய்க்கும்.

நன்மக்கட் பேறு வேண்டு பவர்கள், பள்ளியறை பூஜைக்குத் தேவையான பசும்பாலை அளித்தால் போதும் என்கின்றன ஞானநூல்கள்.

இவ்வளவு சிறப்புவாய்ந்த பள்ளியறையை ஆலயத்தில் அழகு மிளிரும் இடமாக அலங்கரிக்கும் வழக்கம் நம்மிடையே உண்டு.

சென்னை, பாரிமுனை தம்புச் செட்டித் தெருவில் இருக்கிறது அருள்மிகு காளிகாம்பாள் திருக் கோயில். சென்னை மாநகரின் காவல் தெய்வமாய், வேண்டும் அன்பர்களுக்கு விரும்பும் வரங்களை வாரிவழங்கும் கற்பக விருட்சமாய் அருள்கிறாள் இந்த அன்னை.

நவகிரகங்களும் போற்றி வணங்கும் நாயகியாம் ஶ்ரீகாளிகாம் பாளை தரிசித்து வழிபட்டால், அன்னையை வேண்டிக் கொண்டால் சகல காரியங்களிலும் வெற்றிகிட்டும் என்பது பல்லாயிரம் ஆண்டு நம்பிக்கை. மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி இங்கு வந்து அன்னையை வழிபட்டுச் சென்றார் என்ற தகவலும் உண்டு.

இத்தகைய சிறப்பு மிக்க ஆலயத்தின் பள்ளியறைக்கு அண்மையில் வெள்ளிக் கதவுகள் பொறுத்தப்பட்டன. இந்தத் திருப்பணியைப் பொன்னமராவதியைச் சேர்ந்த சுப்புசுந்தரம் செட்டியார் - அன்னபூரணி தம்பதியர் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறார்கள்.

`திருப்பணி எங்கள் கொடுப்பினை!'

ஆன்மிக உலகில் சுப்புசுந்தரம் அனைவராலும் அறியப்பட்டவரே. 238 ஆண்டுகளாகக் குடமுழுக்கு காணாமல் இருந்த காசி அருள்மிகு காசிவிஸ்வநாதர் ஆலயத்துக்குக் குடமுழுக்கு செய்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. காளிகாம்பாள் கோயில் திருப்பணி குறித்து அவரிடம் பேசினோம்.

“அன்னை ஶ்ரீகாளிகாம்பாளின் தீவிர பக்தன் நான். அவளின் திருவருளில் திளைப்பவன். அன்னையின் கோயிலுக்கு ஏதேனும் திருப்பணி செய்யவேண்டும் என்பது என்னுடைய பலநாள் விருப்பம். அதுகுறித்து அன்னையிடமும் பிரார்த்தித்து வந்தேன்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஆலயத்தின் புதிய அறங்காவலராக சர்வேஸ்வரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கோயிலுக்கு நான் சென்றிருந்தபோது, அன்னை என் மனத்தில் `பள்ளியறைக்கு வெள்ளிக் கதவு பொருத்தலாம்' என்ற சிந்தனையைத் தந்தாள்.

அதுகுறித்து நான் அறங்காவலருடனும் கோயில் அர்ச்சகர் காளிதாஸுடனும் பகிர்ந்தேன். இருவரும் அதை வரவேற்றனர். அன்றே அதற்கான பணிகளைத் தொடங்கினோம். செட்டிநாட்டில் திறமை மிகுந்த பொற்கலைஞர்கள் உண்டு. அவர்களைக் கொண்டு கதவுகள் அமைக்கும் பணி தொடங்கியது.

மூன்றே மாதங்களில் பணி நிறைவு பெற்றது. எல்லாம் அம்பாளின் அருள். இந்த வாழ்க்கை அவள் தந்தது.அதிலிருந்து அவளுக்கு திருப்பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தால், அது நமக்கான கொடுப்பினை அல்லவா?'' என்று நெகிழ்வுடன் சொல்லி முடித்தார் சுப்பு சுந்தரம்.

வெள்ளிக்கதவுகள் பொருத்தப்பட்டு, 29.1.21 அன்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு சிறப்பு பூஜை கள் கோலாகலமாக நடந்தேறின. அழகு மிளிரும் வெள்ளிக்கதவுகளுடன் மிளிர்கிறது அன்னையின் பள்ளியறை.

நீங்களும் ஒருமுறை அன்னை காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்று வாருங்கள். அங்கே பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டு, அந்த ஜகன்மாதாவின் கருணை கடாட்சத்தை வரமாகப் பெற்று மகிழுங்கள்!

`திருப்பணி எங்கள் கொடுப்பினை!'

முதல்வனை வணங்கும் முதல் பாடல்!

ஊற்றெ டுத்துவன் போலிடு மும்மதத்(து)
ஆற்றொ ழுக்கின் அருவியம் சாரல்வாய்
ஏற்று கைக்கும் இறைவர்க்கு முந்திய
மாற்றி லாக்களி யானையை வாழ்த்துவாம்


கருத்து: மலை நிலத்தில் உள்ள மத யானைகள் மதநீரைப் பெய் கின்றன. அதை உண்டு வண்டுகள் ஆரவாரம் செய்கின்றன. அருவிநீர் பெருகும் அந்த மலைச்சாரலில், ஆண் மயிலின்மீது ஏறிச் செலுத்துகிறான் முருகன். அப்பெருமானுக்கு மூத்தவனான மாறில் லாத ஆனந்தமான யானைமுகக் கடவுளை வாழ்த்துவோம்.

899 பாடல்களைக் கொண்ட திருச்செந்தூர் தலபுராணத்தின் முதல் பாடல் இதுதான். அடுத்தமுறை திருச்செந்தூருக்குச் செல்லும்போது அவசியம் இந்தப் பாடலைப் படித்து, பிள்ளையாரை வழிபட்டுவிட்டு செந்திலாண்டவனை தரிசிக்கச் செல்லுங்கள்.

- சி.வரலக்ஷ்மி, மேலூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism