Published:Updated:

கடன் பிரச்னைகளில் இருந்து விடுபட உதவும் மைத்ர முகூர்த்தம் இன்று!

சைலபதி

ஒவ்வொரு மாதமும் வரும் அசுவினி நட்சத்திர தினத்தில் மேஷ லக்னம் வரும் நேரமே மைத்ர முகூர்த்தம்.

Goddess Mahalakshmi
Goddess Mahalakshmi

தீராத கடன் பிரச்னைகளிலிருந்து விடுபட ஜோதிட ரீதியாகப் பல்வேறு பரிகாரங்கள் சொல்லப்பட்டாலும், கடைப்பிடிக்க எளிதானது மைத்ர முகூர்த்தம். இது ஒரு மாதத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் வரும்.

loan
loan

அது என்ன மைத்ர முகூர்த்தம்?

ஒவ்வொரு மாதமும் வரும் அஸ்வினி நட்சத்திர தினத்தில் மேஷ லக்னம் வரும் நேரமே மைத்ர முகூர்த்தம். அதேபோல அனுஷ நட்சத்திர தினத்தில் வரும் விருச்சிக லக்னமும் மைத்ர முகூர்த்தமாகும்.

மைத்ர முகூர்த்த நேரத்தில் குறிப்பிட்ட பரிகாரத்தைச் செய்து கடன் தொல்லையிலிருந்து இறையருளால் விடுபடலாம் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.

money
money

என்ன செய்ய வேண்டும்?

குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் கடனில் ஒரு சிறு பகுதியை இந்த நேரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும். நேரடியாகவோ, வங்கிக் கணக்கு மூலமோ அதைத் திருப்பிச் செலுத்தலாம்.

அப்படியும் இயலாதவர்கள், கடன் அளித்தவரின் பெயரை ஒரு கவரில் எழுதி அதில் அந்தத் தொகையை இட்டு சுவாமியிடம் வைத்துவிடலாம். இப்படிச் செய்துவர விரைவில் கடன் அடையும் என்பது ஐதிகம். கடனைத் திரும்பச் செலுத்த வேண்டும் என்கிற மனோபாவம் இதன் மூலம் வளரும் என்பது இதன் உள்ளார்ந்த பொருள்.

goddess mahalakshmi
goddess mahalakshmi
இன்று காலை 10.48 முதல் 12.48 வரை மைத்ர முகூர்த்த நேரம்.
மைத்ர முகூர்த்தம்

இன்று (5.9.19) காலை 10.48 முதல் 12.48 வரை மைத்ர முகூர்த்த நேரம். இந்த நேரத்தில் இறைவனை வணங்கி மேற்கண்ட பரிகாரத்தைச் செய்து கடன் தொல்லையிலிருந்து விடுபடுவோம்.