Published:Updated:

திருச்சி கோயில்கள் - 16: சொந்த வீடு, சொத்துகள் சேர வரமருளும் மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோயில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி திருக்கோயில்
மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி திருக்கோயில்

2000 ஆண்டுகளைத் தாண்டிய திருத்தலம் என்று இது குறிப்பிடப்படுகிறது. மண் அரக்கநல்லூர் என்ற வரலாற்றுப் புகழ் கொண்ட ஊர் மருவி மண்ணச்சநல்லூர் என்றானதாகக் கூறப்படுகிறது.

சொத்து இருந்தாலும் பிரச்னை, இல்லாவிட்டாலும் பிரச்னை என்பதுதான் நிதர்சனமான உண்மை. 'எத்தனை ஓடி ஓடி சம்பாதித்தாலும் ஒரு சொந்த வீடு கூட அமையவில்லையே' என்பது பலரது கவலையாக இருக்கும். 'வாங்கிய சொந்த வீட்டில் இத்தனை பிரச்னைகளா' என்றும், 'வாங்கிய மனை, தோட்டம் எதிலும் பிரச்னைகளா' என்று கலங்குபவர்களும் உண்டு.
மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி திருக்கோயில்
மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி திருக்கோயில்
DIXITH

சொத்தில் பிரச்னை என்றால் வாஸ்து தோஷம், பித்ரு தோஷம், ஜாதகத்தில் கிரகங்களின் தோஷம், கவனமில்லாமல் செய்யும் சட்டத் தவறுகள், எதிரிகளின் சூழ்ச்சி, பங்காளிகளின் பகைமை என ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். இதை எல்லாம் சரி செய்யும் ஒரு இடம் திருச்சியில் உண்டு. அதுதான் மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி திருக்கோயில்.

நெருப்பு, நீர், காற்று, ஆகாயம், மண் என ஐந்து பூதங்களுக்கும் தலைவன் ஈசன். ஒவ்வொரு பூதத்துக்கும் தலைவனாக இவன் அருளும் பஞ்சபூத தலங்களும் தமிழகத்தில் அநேகம் உண்டு. இதில் மண்ணுக்குரிய தலமாக காஞ்சியும், திருவாரூரும் முக்கிய தலமாக இருக்கின்றன. திருச்சியில் இந்த மண்ணச்சநல்லூர் உள்ளது. ஈசனே இங்கு பூமிக்குரிய நாயகனாக இருப்பதால் மண் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைகளுக்கும் இங்கு வந்தால் கட்டாயம் தீர்வு உண்டு என்கிறார்கள் திருச்சி மக்கள்.

மண்ணச்சநல்லூர் திருத்தலம்
மண்ணச்சநல்லூர் திருத்தலம்
DIXITH

ஸ்ரீதர்மசம்வர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகியோடு எழுந்தருளி இருக்கும் பூமிநாத சுவாமி 16 விதமான தோஷங்களை விலக்கி நலம் அருள்பவர் என்று அகத்திய மாமுனிவர் தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார். 2000 ஆண்டுகளைத் தாண்டிய திருத்தலம் என்று இது குறிப்பிடப்படுகிறது. மண் அரக்கநல்லூர் என்ற வரலாற்றுப் புகழ் கொண்ட ஊர் மருவி மண்ணச்சநல்லூர் என்றானதாகக் கூறப்படுகிறது.

திருச்சி – ஊறும் வரலாறு 13:  உறைந்த இசை... `திருச்சியின் மகன்' எம்.கே.டி.பாகவதர் வரலாறு!

குறைகள் தீர்க்கும் இந்த ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம், கொடிமர விநாயகர், நந்தி, கொடிமரம், பலிபீடம் காணப்படுகிறது. கொடிமர வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் உள்ளன. இங்கு ராகு - கேது கிரகங்கள் மனித உருவத்தில் அருள்பாலிப்பது அபூர்வ அமைப்பு என்கிறார்கள். மகாமண்டபம் தாண்டி உள்ளே சென்றால் வலது புறம் அன்னை அறம் வளர்த்த நாயகி தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருள்கிறார். அன்னையின் முன்பு ஸ்ரீமகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பூமிநாதசுவாமி
பூமிநாதசுவாமி
DIXITH

அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் பூமிநாதசுவாமி, லிங்கத் திருமேனியராக கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். சுயம்புவாய், உளிபடாத மூர்த்தமாய், சற்றுச் சாய்ந்த கோலத்தில் எழிலார்ந்து விளங்குகிறார். பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்பது போன்ற அழகியத் திருமேனி இவருடையது. இவரை வணங்கியே பூமாதேவி சகலரையும் தாங்கும் சக்தி கொண்டாளாம். அகத்தியர் சாபம் பெற்ற இந்திரன், இத்தல ஈசனை ஆராதித்து பாவ விமோசனம் பெற்றான் என்று தலவரலாறு கூறுகிறது. வில்வம், வன்னி இங்கு தல விருட்சமாக உள்ளன. இரண்டுமே பூமிக்கு நன்மை விளைவிக்கும் மரங்கள் எனப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட், வேளாண்மை மற்றும் தோட்டத் தொழில் சிறக்க, கிணறு தோண்ட, வீடு வாங்க, விற்க, வாஸ்து தோஷம் நீங்க, சொத்து பாகப் பிரச்னைகள் தீர... என பூமி சம்பந்தமான குறைகள் நீங்க இது பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது. இதனால் பிரச்னைகள் தீர அநேக பக்தர்களும் இங்கு வந்து குவிகிறார்கள் என்பதும் உண்மை. இங்கு பரிகார பூஜை என்ற பெயரில் நடக்கும் வழிபாடுதான் அதிசயமானது.

பரிகார பூஜை
பரிகார பூஜை
DIXITH

நாம் வாங்க அல்லது விற்க நினைக்கும் மனையின் வடகிழக்கு மூலை மண்ணை ஒரு நல்ல நாளில் புதன் ஹோரையில் எடுத்து மஞ்சள் நிறத் துணியில் கட்டி கோயிலுக்கு எடுத்து வரவேண்டும். கொடி மரத்து விநாயகருக்கு விளக்கேற்றி, பிறகு அம்பிகைக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். அடுத்து பூமிநாத சுவாமிக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி, கொண்டு வந்திருக்கும் மண்ணை பூமிநாத சுவாமி மீது வைத்து அர்ச்சனை செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். பிறகு கோயிலை ஒருமுறை வலம் வந்து அந்த மண்ணை வில்வ மரத்தடியில் போடவேண்டும்.

திருச்சி ஊர்ப்பெருமை: ராணி மங்கம்மாள் கட்டிய மண்டபப் படித்துறை... இது அனைவருக்குமான பிக்னிக் ஸ்பாட்!

கோயிலை இரண்டாவது முறை வலம் வந்து, வன்னி மரத்தடி மண்ணை எடுத்து மஞ்சள் துணியில் கட்டிக்கொள்ள வேண்டும். மூன்றாவது முறையும் கோயிலைச் சுற்றி வந்து வணங்க வேண்டும். அடுத்த நாள் காலை, புதன் ஹோரை நேரத்தில், நம் நிலத்தில் மண் எடுத்த இடத்தில் கோயிலில் இருந்து கொண்டு வந்த மண்ணைப் போட்டு தூப தீபம் ஏற்றி வணங்க வேண்டும். பிறகு மண் எடுத்து வந்த துணியில் ஒரு நாணயத்தை முடிந்து, பூஜை அறையில் வைக்க வேண்டும். என்ன வேண்டினோமோ அது நிறைவேறியதும், பூமிநாத சுவாமிக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனை செய்து முடிந்து வைத்த நாணயத்தை சுவாமிக்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்பது இங்கு கடைப்பிடிக்கப்படும் ஒரு வேண்டுதல்.

பரிகாரத் தலம்
பரிகாரத் தலம்
DIXITH

இந்த வேண்டுதலால் பூமி சம்மந்தமான எல்லா பிரச்னைகளும் நீங்கி விடுகின்றன என்பது இங்கு வந்து வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் நம்பிக்கை. நம்பிக்கையின் அடிப்படையில்தானே நாமும் நம்முடைய ஆன்மிக வாழ்வும் நடைபோடுகின்றன. எனவே சொத்துக்கள் சேர வேண்டும், விற்க வேண்டும் என்று விரும்பும் அன்பர்கள் இங்கு நம்பிக்கையோடு சென்று வாருங்கள்! நல்ல தீர்வு உங்களுக்கு கிடைக்கும்.

இங்கு காமிகாகம முறைப்படி தினமும் நான்கு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன. வைகாசி மாத தேரோட்டம் இங்கு முக்கியத் திருவிழாவாக நடைபெறுகிறது.

அமைவிடம்: திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் தாண்டி 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு