Published:Updated:

திருச்சி கோயில்கள் - 25: தமிழையும் தமிழரையும் செழிக்க வைத்த காவேரி அம்மன் ஆலய மகிமைகள்!

காவேரி அம்மன் கோயில்
News
காவேரி அம்மன் கோயில்

திருச்சியின் புண்ணிய அடையாளமான அம்மா மண்டபத்தில் அமைந்துள்ளது காவேரி அம்மன் கோயில். இங்குதான் கீழ் இரு கரங்களில் புனித கலசம் தாங்கி, மேலிரு கரங்களில் அக்கமாலையும் மலர்ச் செண்டும் தாங்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள் காவேரி அன்னை.

'நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு'

நேற்று இருந்தவர், இன்று இல்லை என்ற நிலையாமையைப் பெருமையாகக் கொண்டது இவ்வுலகம் என்கிறது வான்புகழ் வள்ளுவம். எவர் இல்லை என்றாலும் இந்த உலகம் நடந்தபடியேதான் இருக்கும். தமிழகமும் அப்படியே. ஆனால் இது இல்லை என்றால், இது மட்டும் வளம் கொழிக்க நம்மிடையே உலவாமல் போய் இருந்தால், தமிழும் தமிழரும் இத்தனை வளங்களை, வசதிகளைப் பெற்று இருப்போமா என்றால், இல்லவே இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லலாம்.

அம்மா மண்டபம்
அம்மா மண்டபம்
DIXITH

காவிரி! ஆம், நம் மொழியையும் வாழ்வையும் வளமாக்கிய காவிரி எந்நாளும் போற்றப்பட வேண்டியவள் என்பதால்தான் பல நூற்றாண்டுகளாக அவளை அன்னையாக, தெய்வமாக தமிழ்கூறும் நல்லுலகம் வணங்கி வருகிறது. அதிலும் காவிரியால் செழித்து வாழும் திருச்சி மாநகரம் அவளை மறக்கவே இல்லை எனலாம். 30 லட்சம் ஏக்கர் நிலங்களை செழிப்பாக்கும் காவிரி, பல நகரங்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. சீன, சுமேரிய, எகிப்து நாகரீகங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டது காவிரி நாகரீகம். பட்டினப்பாலை, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, தேவாரம் உள்ளிட்ட பழந்தமிழ் காவியங்கள் யாவும் போற்றிய புண்ணிய நதி இது. தலைக்காவிரியில் ஜனித்து, தமிழகத்தில் பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவியாக ஆர்ப்பரிக்கும் காவிரி அன்னைக்கு அங்கு தொடங்கி, கடலில் சங்கமிக்கும் காவிரிப்பூம்பட்டினம் வரை கரையெங்கும் பல கோயில்கள் உண்டு என்றாலும், திருச்சி மாநகர காவேரி அம்மன் கோயில் மிக விசேஷமானது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

'கங்கையிற் புனித மாய: காவிரி' என்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார். அரங்கனின் மாலையாகத் தழுவும் பெருமைக்கு உரிய காவிரியை திருமழிசை ஆழ்வாரும் போற்றிப் பரவுகிறார். அகத்தியரால் கொண்டு வரப்பட்டு, காக வடிவிலான விநாயகப்பெருமானால் விடுவிக்கப்பட்டு தென்னகம் செழிக்க ஓடிவருபவள் காவிரி. இவளைக் காவேரி அம்மனாக, கஷ்டங்கள் தீர்க்கும் கண்கண்ட தெய்வமாக வணங்கி வருகிறார்கள் திருச்சி வாசிகள்.

காவேரி அம்மன் கோயில்
காவேரி அம்மன் கோயில்
DIXITH
திருச்சியின் புண்ணிய அடையாளமான அம்மா மண்டபத்தில் அமைந்துள்ளது காவேரி அம்மன் கோயில். இங்குதான் கீழ் இரு கரங்களில் புனித கலசம் தாங்கி, மேலிரு கரங்களில் அக்கமாலையும் மலர்ச் செண்டும் தாங்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள் காவேரி அன்னை.

தனித்த சிறிய கோயிலில் வீற்றிருக்கும் இந்த அன்னை வளத்தின் அடையாளமாக விளங்குகிறாள். இந்த கோயிலின் கோபுரத்தில் அகத்தியர், காகம் விரிக்கும் காவிரி போன்ற சுதை சிற்பங்கள் அமைந்துள்ளன. இவளுக்கு ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா, ஆடி மாத செவ்வாய், வெள்ளி நாள்கள், ஆடிப்பூரம் போன்றவை விசேஷ நாள்களாகக் கருதப்பட்டு விமரிசையான விழாக்கள் நடத்தப்படுகின்றன. விளைச்சல் பெருகவும், நீர் வளம் பெருகவும், கிணறு அமைக்கவும், தோட்டம், வயல் போன்ற வேளாண்மை இடங்கள் வாங்கவும், செல்வவளம் சேரவும் புது வஸ்திரம் சாத்தி இவளை வேண்டிக்கொண்டால் அவை நிறைவேறுகின்றன என்பது விசேஷம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோடை காலத்தில் திருச்சி மாநகரில் தண்ணீர் பற்றாக்குறை உண்டானால் காவேரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வேண்ட, நல்ல மழை பெய்து காவேரியில் நீர் கரைபுரண்டு என்கிறார்கள் திருச்சி மக்கள். இங்கு காலை 7 மணிக்கும் மாலை 6 மணிக்கும் என இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. கரிகாலச் சோழன் காலத்தில், கரைபுரண்டு ஓடி வந்த காவிரியில் மிதந்து வந்தவளாம் இந்த அன்னை. காவிரியை நம்பி வாழும் உழவர் பெருமக்களின் குலதெய்வமாக இந்த அன்னை விளங்கி வருகிறாள். இன்னமும் அவர்கள் குடும்பத்தில் காவேரி, பொன்னி, காவேரியப்பன் என்ற பெயர்கள் இந்த அன்னையை மகிழ்விக்கும் வண்ணமாய் வைக்கப்படுகின்றன.

காவேரி அன்னை
காவேரி அன்னை
DIXITH

ரங்கநாதரின் தங்கையாகக் கருதப்படும் காவேரி அன்னைக்கு, ஆடி பதினெட்டாம் பெருக்கின் போது ஸ்ரீரங்கம் பெருமாள் சீர்வரிசை வழங்குவது வழக்கம். அப்போது அம்மா மண்டபத்துக்கு எழுந்தருளும் ஸ்ரீரங்கநாதர் மலர் மாலை, புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் போன்ற சீர்வரிசைகளை காவேரி அன்னைக்கு வழங்குவார். இந்த ஐதீக விழாவைக் காண்பது பெரும் புண்ணிய காரியம் எனப்படுகிறது. திருமணத் தடைகளால் கஷ்டப்படும் அன்பர்கள் இந்த நாளில் காவேரி சீர் வாங்கும் திருக்கோலத்தை தரிசித்தால் அருமையான திருமண வாழ்வைப் பெறுவார்கள் என்பதும் நம்பிக்கை.

நீராய் உருவெடுத்து, மண்ணை வளமாக்கி, பொன்னாய் விளைய வைத்து எல்லோரையும் காக்கும் காவேரி அன்னை, தமிழகத்தின் ஆதார சக்தியாக விளங்குபவள். இவளை வணங்க வளங்கள் கொழிக்கும் என்பது திருச்சி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பாவங்களைப் போக்குபவள், விரும்பியவற்றை அருள்பவள், 66 கோடி தீர்த்த பாவ-சாப விமோசனியாக விளங்குபவள், பசுமையைக் காப்பவள், பவித்ரமானவள், 51 உபநதிகளைக் கொண்டவள், தண்தமிழ் பாவையானவள், நதிகளின் நாயகியானவள் காவேரி!

காவேரி
காவேரி
DIXITH
மனிதர்கள் போடும் கட்டுக்காவல்களை எல்லாம் உடைத்து, என்றும் எப்போதும் தன்னை துதிப்பவர்களுக்குக் காவலாய் நிற்பவள் காவேரி தாய். இவளைத் தொழுது வணங்கி, தென்னகம் எங்கும் செழிக்க வேண்டுவோம்.