Published:Updated:

திருச்சி கோயில்கள் - 26: மனம் வருந்தி மன்னிப்புக் கோருபவர்களுக்கு சாபவிமோசனம் தரும் ஆம்ரவனேஸ்வரர்!

ஆம்ரவனேஸ்வரர்
News
ஆம்ரவனேஸ்வரர்

1800 ஆண்டுகள் கடந்த இந்த ஆலயம் பல சோழர்களின் கல்வெட்டுகளைத் தாங்கி உள்ளது. கோச்செங்கணான் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

சொர்க்கம் நிறைந்து இருப்பது என்பது, ஈசன் கருணையோடு சகலரையும் மன்னிக்கிறார் என்பதன் அர்த்தமே என்று ஆன்மிகம் கூறும். தவறு செய்யாத ஆன்மாக்களே இருக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அப்படி தெரிந்தோ தெரியாமலோ ஒரு ஜீவன் தவறு செய்து, அதற்கு உண்மையிலேயே வருந்தி மன்னிப்பு கேட்டால், அதற்கான பாவ மன்னிப்பை அருளக்கூடிய ஈசன் திருச்சிக்கு அருகில் மாந்துறையில் எழுந்தருளி இருக்கிறார். அவர்தான் ஆம்ரவனேஸ்வரர்!
மாந்துறை
மாந்துறை

மாமரத்தின் அடியில் ஈசன் சுயம்புவாய் எழுந்து அருளிய தலங்கள் அநேகம் உண்டு. காஞ்சியில் ஒற்றை மாமரத்தின் அடியில் எழுந்தருளிய ஈசனை அன்னை காமாட்சி 32 விதமான அறங்கள் செய்து வழிபட்டு அடைந்தாள் என்கிறது காஞ்சி புராணம். அதனால் இன்றும் காஞ்சியில் மாவடி சேவை நடைபெறுகின்றது. அதைப்போலவே திருச்சியிலும் ஒரு தலம் மாமரத்தின் பெயரைக் கொண்டு விளங்கி வருகிறது. அதுவே மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் ஆலயம். ஆம்ரம் என்றால் மாமரம். இது வடகரை மாந்துறை எனப்படுகிறது. திருப்பனந்தாள் அருகே ஒரு மாந்துறை இருப்பதால், வேறுபடுத்திக் காட்ட இது வடகரை மாந்துறை எனப்படுகிறது. திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி வழிபட்ட தேவாரத் திருத்தலம் இது. காவிரி வடகரைத் தலங்களில் இது 58-வது திருத்தலம். திருச்சி உள்ள பஞ்ச சிவாலயங்களில் இதுவும் ஒன்று. சேரமான் பெருமாள் நாயனார், சேக்கிழார், அர்ஜுனன், சூரியன், சந்திரன், இந்திரன், மருதவாணர், மிருகண்டு முனிவர் போன்றோர் வழிபட்ட தலம் இது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஈசனின் முடியைக் கண்டுவிட்டதாக பொய் கூறிய நான்முகனின் சாபத்தை நீக்கிய தலங்களுள் இதுவும் ஒன்று. மார்க்கண்டேயன் மரண பயத்தை நீக்கிக்கொள்ள தவம் இருந்த தலமிது. பரிகாரத் தலங்களில் இது மூலம் நட்சரத்திற்குரிய ஆலயம். சூரியனின் மனைவி சமுக்யாதேவி, தன் கணவனின் உக்கிரமான உஷ்ணத்தைப் பெறுத்துக்கொள்ள தவம் இருந்து சக்தியைப் பெற்ற தலம். கெளதம ரிஷியின் மனைவி அகலிகையைத் தீண்டிய இந்திரன், தன்னுடைய சாபத்தைத் தீர்த்துக்கொண்ட ஆலயம் இது. ஈசனை ஒதுக்கி தட்சன் செய்த யாகத்தில் கலந்துகொண்ட சூரியன், சாபவிமோசனம் பெற வழிபட்டு பயன் பெற்ற தலமும் இதுவே. தாய்-தந்தையை இழந்த மானுக்கு ஈசனும் சக்தியும் மான் வடிவில் வந்து பசி தீர்த்த தலமும் இது. மானுக்கு அருள்புரிந்த தலம் என்பதால் இது மான் துறை என்றாகி, மாந்துறை என்றானது. இப்படி ஏகப்பட்ட அருள் விளையாடல்கள் நடைபெற்ற திருத்தலம் மாந்துறை. ஆதிசங்கரரும், மிருகண்டு முனிவரும் வழிபட்டு ஈசனிடம் உபதேசம் பெற்ற தலம் எனப்படுகிறது.

வடகரை மாந்துறை
வடகரை மாந்துறை
1800 ஆண்டுகள் கடந்த இந்த ஆலயம் பல சோழர்களின் கல்வெட்டுகளைத் தாங்கி உள்ளது. கோச்செங்கணான் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிழக்கு நோக்கிய கோபுரத்தைக் கடந்து சென்றால், ஈசனை மிருகண்டு ரிஷி வழிடும் சித்திரங்களைக் காணலாம். அதையும் கடந்தால் பிராகாரத்தில் தல விருட்சமான மாமரம், கணபதி, முருகப்பெருமான், கஜலட்சுமி, நவக்கிரக சந்நிதி, பைரவர் மூர்த்தங்களை தரிசிக்கலாம். ஆலய கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சாந்த துர்க்கை (காலுக்கு கீழே மகிஷாசுரனும் இல்லை, தேவியின் முகத்தில் கோபமும் இல்லை) மூர்த்தங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள நால்வர் திருமேனியில், சுந்தரர் கைத்தடியேந்தி நிற்பது சிறப்பு. சத்தியத்தை மீறி, திருவொற்றியூர் தாண்டிய சுந்தரர் கண்ணிழந்த நிலையில் இங்கு வடிக்கப்பட்டுள்ளார். சூரியனும் அவன் மனைவியும் அருள்பெற்ற தலம் என்பதால் நவக்கிரக சந்நிதியில் சூரியன் தனது மனைவிகளுடன் காட்சி தருகிறார். காவிரியே இங்கு தீர்த்தமாக உள்ளது.

ஆம்ரவனேஸ்வரர், பாலாம்பிகை
ஆம்ரவனேஸ்வரர், பாலாம்பிகை

சுயம்பு மூர்த்தியாக, ஆம்ரவனேஸ்வரர் எனும் மிருகண்டீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பங்குனி மாதத்தின் முதல் 3 நாள்களில் சூரிய பகவான் ஈசனைத் தழுவி ஆராதிக்கிறார். அந்த நாள்களில் இங்கு சூரிய பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தோஷங்கள், பாவங்கள், சாபங்கள் உள்ளவர்கள் இவரை வணங்க தீரும் என்கிறார்கள். இங்கு உறையும் சக்தி அழகம்மை எனும் பாலாம்பிகை தெற்கு நோக்கி அருள்கிறாள். மங்கல வாழ்வு தரும் மந்திர நாயகி என்று இவள் போற்றப்படுகிறாள். இவளை வணங்க திருமண யோகமும், நிலைத்த மாங்கல்ய பலமும் கிட்டும் என்கிறார்கள். பாலாம்பிகைக்கு பாலால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரதோஷம், செவ்வாய்க்கிழமை சதுர்த்தி, சித்திரை முதல் நாள், ஆடிவெள்ளி, நவராத்திரி, அன்னாபிஷேகம், கார்த்திகைச் சோமவாரங்கள், திருவாதிரை, தீபம், சிவராத்திரி போன்ற நாள்களில் இங்கு விசேஷமாக ஆராதனை செய்யப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.

5 அடி உயர வடிவில் இங்குள்ள முருகப்பெருமான் கம்பீரமாக, 4 திருக்கரங்களுடனும் கிழக்கு பார்த்து நின்ற நிலையில் அருளுகிறார். திருப்புகழால் அருணகிரிநாதரால் பாடப்பட்ட இவரை வணங்க துணிவும் தெளிவும் உண்டாகும் என்கிறார்கள்.
முருகப்பெருமான்
முருகப்பெருமான்

மூல நட்சத்திரம் கொண்ட அன்பர்கள் இங்கு வந்து நெய் விளக்கு ஏற்றி ஈசனை அர்ச்சித்து வழிபட்டால் அவர்கள் விருப்பங்கள் நிறைவேறும் என்கிறார்கள். மேலும் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்துவிடுவார்கள், மனம் திருந்தி இங்கு வந்து வழிபட்டால் மன்னிப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

இருப்பிடம் - திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியில் லால்குடிக்கு 3 கி.மீ. முன்னால் திருமாந்துறை அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் கோயில் உள்ளது. ஆலயம் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்திருக்கும்.

திருமாந்துறை
திருமாந்துறை

மன்னிப்பு வேண்டும் அன்பர்கள், மறவாது இங்கு செல்லுங்கள்...

"வரைவ ளங்கவர் காவிரி

வடகரை மாந்துறை யுறைவானைச்

சிரபு ரம்பதியு டையவன்

கவுணியன் செழுமறை நிறைநாவன்

அரவெ னும்பணி வல்லவன்

ஞானசம் பந்தன்அன் புறுமாலை

பரவி டுந்தொழில் வல்லவர்

அல்லலும் பாவமும் இலர்தாமே."

- திருஞானசம்பந்தர்