Published:Updated:

திருச்சி கோயில்கள் - 9 - ஊட்டத்தூர்: ராஜராஜ சோழனின் நோயைத் தீர்த்த அதிசயக் கோயிலின் சிறப்புகள்!

ஊட்டத்தூர்

ஈசனுக்கு பிரம்மா அபிஷேகம் செய்யவென்றுத் தோன்றியதே இந்த பிரம்ம தீர்த்தம். இதில்தான் சகல தீர்த்தங்களும் ஊறின என்கிறது தலவரலாறு. இன்றும் பிரம்ம தீர்த்தத்தில் இருந்து எடுக்கும் நீரால்தான் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

திருச்சி கோயில்கள் - 9 - ஊட்டத்தூர்: ராஜராஜ சோழனின் நோயைத் தீர்த்த அதிசயக் கோயிலின் சிறப்புகள்!

ஈசனுக்கு பிரம்மா அபிஷேகம் செய்யவென்றுத் தோன்றியதே இந்த பிரம்ம தீர்த்தம். இதில்தான் சகல தீர்த்தங்களும் ஊறின என்கிறது தலவரலாறு. இன்றும் பிரம்ம தீர்த்தத்தில் இருந்து எடுக்கும் நீரால்தான் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

Published:Updated:
ஊட்டத்தூர்
அறிவியலால் விடை சொல்ல முடியாத பல அதிசயங்களைக் கொண்டிருக்கும் ஆலயங்கள் பல உண்டு. அதில் விசேஷமானது ஊட்டத்தூர் சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோயில். இங்கு பல அதிசயங்களும் ஆன்மிகத் தகவல்களும் கொட்டிக் கிடக்கின்றன எனலாம்.
சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோயில்
சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோயில்

பூவுலகின் சகல புண்ணிய தீர்த்தங்களும் இங்கு பொங்கிப் பெருகி ஊறிய காரணத்தால் இந்த ஊர் ஊற்றத்தூர் என்றாகி இப்போது ஊட்டத்தூர் என்றாகி உள்ளதாம். ஐந்து மங்கலங்களும் சிறந்து விளங்கும் திருத்தலம் 'பஞ்ச மங்கல க்ஷேத்திரம்' என்பார்கள். அந்த வகையில் ஊட்டத்தூரிலும் வனம் - வில்வாரண்யம், நதி - நந்தியாறு. தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம். ஊர் - ஊற்றத்தூர். மலை - சோழீஸ்வரர் மலை என்ற ஐந்து சிறப்பும் தொன்மையாக இருப்பதால் பஞ்ச மங்கல க்ஷேத்திரம் என்றானது.

இங்குள்ள ஈசன், சுத்த ரத்னேஸ்வரர், மாசிலாமணி, தூய மாமணி, துகுமாமணி, சிந்தாமணீஸ்வரர் என்றல்லாம் போற்றப்படுகிறார். இவர் இந்த பகுதிக்கு எழுந்தருளிய புராணத் தகவல் அற்புதமானது. யார் பெரியவர் என்று திருமாலும் பிரம்மனும் சண்டையிட்டுக் கொண்ட காலத்தில், தாழம்பூவை பொய்சாட்சி சொல்ல வைத்து, ஈசனின் திருமுடியைக் கண்டதாகப் பொய் சொன்னார் பிரம்மா. இந்த தவறுக்கு சாபம் பெற்ற பிரம்மனுக்கு இங்கே ஈசன் காட்சி அளித்து அவரின் சாபத்தை நிவர்த்தி செய்தார். பிரம்மனின் வாட்டத்தை நீக்கி ஊட்டம் அளித்த ஊர் என்றானதாம். இங்குள்ள ஈசனை வணங்க சகல தோஷங்களும் நீங்கி நன்மை அடைவார்கள் என்பது நம்பிக்கை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுத்த ரத்னேஸ்வரர்
சுத்த ரத்னேஸ்வரர்

ஈசனுக்கு பிரம்மா அபிஷேகம் செய்யவென்றுத் தோன்றியதே இந்த பிரம்ம தீர்த்தம். இதில்தான் சகல தீர்த்தங்களும் ஊறின என்கிறது தலவரலாறு. இன்றும் பிரம்ம தீர்த்தத்தில் இருந்து எடுக்கும் நீரால்தான் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்த நீரே நோய்கள் தீர்க்கும் அதிசய மருந்தாக உள்ளது எனப் பலரும் நம்பிக்கையுடன் பேசுகிறார்கள். ராஜராஜ சோழன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது, இந்த பிரம்ம தீர்த்த நீரே அவன் நோயைப் போக்கியதாம். அதேபோல, சிறுநீரகப் பிரச்னைகளுக்கு இன்றுவரை அருமருந்தாக விளங்குவது இந்த பிரம்ம தீர்த்த நீரே என்கிறார்கள். இன்றுவரை எப்போதுமே வற்றாத அதிசயமும் இந்தத் தீர்த்தத்துக்கு உண்டு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இங்குள்ள மற்றொரு அதிசயமான பஞ்சநதன நடராஜருக்கு வெட்டிவேர் மாலை சார்த்தி, பிரம்ம தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, அதை தினமும் பருகி வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் தீர்கின்றன என்பது பெரும் நம்பிக்கை!

இந்தக் கோயிலின் மகா மண்டபத்தின் மேற்கூரையில் 27 நட்சத்திரங்கள், 15 திதிகள், 12 ராசிகள் போன்றவை சதுர வடிவில் கற்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இதுவும் வேறெங்கும் இல்லாத அதிசயம். மேலும் ஆண்டுதோறும், மாசி மாதம் 12, 13, 14 தேதிகளில் சூரிய பகவானின் கதிர்கள், கருவறை தாண்டி மூலவர் சுத்த ரத்னேஸ்வரர் மீது விழுந்து பூஜிக்கும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது.

பஞ்சநதன நடராஜர்
பஞ்சநதன நடராஜர்

இரண்டாவது பிராகாரத்தில் ஒரு தனிக்கோயிலாகவே அமைந்திருக்கிறது அகிலாண்டேஸ்வரி சந்நிதி. நான்கு திருக்கரங்கள், இரண்டு செவிகளிலும் தாடங்கம் அணிந்து அம்பிகை நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறாள். இவளை வணங்கினால் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை.

ஈசனுக்கு அருகிலேயே தனி சந்நிதியில் எழுந்தருளி இருக்கிறார் இன்னொரு அதிசயமான பஞ்சநதன நடராஜர். பஞ்சநதனம்’ என்னும் கல்லால் ஆன இந்த நடராஜர் ஆசியாவிலேயே இங்கு மட்டுமே வீற்றிருக்கிறார். சூரியனின் கதிர்களிலிருந்து ஆற்றலை ஈர்க்கும் திறன் இந்த கல்லுக்கு உண்டு. எனவே இங்கு பிரார்த்திக்கும் எந்தவொரு வேண்டுதலும் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை. பதவி யோகம் வேண்டுவோர் இந்த நடராஜரை வழிபடலாம். இந்திரன் இவரை வழிபட்டே இழந்த பதவியைப் பெற்றான் என்கிறது கோயில் வரலாறு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பஞ்சநதன நடராஜர் சந்நிதியின் இடதுபுறத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி அன்னை எழுந்தருளி இருக்கிறார். தன் திருமுகத்தை லேசாகச் சாய்த்து, தனக்கு வலப்புறத்தே இருக்கும் ஈசனைப் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற அமைப்பில் அம்மை நின்றிருக்கும் அழகே அழகு எனலாம்.

பிரம்மா, இந்திரன், சூரியன் போன்றோரின் குறைகளைத் தீர்த்தது இந்தக் கோயில். புராண காலத்தில் சிறந்து விளங்கிய இந்த கோயிலை முதலாம் ராஜராஜ சோழன் எடுத்துக் கட்டினான் என்றும், அவன் நோயை இந்த தலத்து ஈசன் குணப்படுத்தினார் என்றும் கோயில் கல்வெட்டுகள் சொல்கின்றன.
ஊட்டத்தூர் சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோயில்
ஊட்டத்தூர் சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோயில்

எல்லாவகையிலும் சிறப்புற்று விளங்கும் இந்தக் கோயிலுக்கு தனது குறைகளைத் தீர்த்துக் கொள்ள இன்றும் வெளிநாட்டினர் உட்பட பலரும் இங்கு வருகை தருகிறார்கள். முக்கியமாக இங்கு தரும் தீர்த்த நீரைப் பெற்றுக் கொள்ள வருபவர்கள் இங்கு அநேகம். அப்பர் பெருமான் தனது தேவாரத்தில் இந்தத் தலத்தை வைத்துப் பாடியதால் இது தேவார வைப்புத் தலம் என்ற பெருமையும் கொண்டுள்ளது. அப்பர் சுவாமி ஊட்டத்தூரை நினைத்து நின்று பாடிய ஊரே பாடாலூர் என்றானது.

நோய் தீர்க்கும் தலமாக மட்டுமின்றி இது திருமண வரம் அருளும் தலமாகவும் உள்ளது. இங்குள்ள ஸ்ரீபஞ்சநதன நடராஜருக்குச் சம்மேளன அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு, நல்ல வரன் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. காசிக்கு நிகரான பெருமைகளைக் கொண்ட தலம் என்று ஆன்றோர்கள் கொண்டாடும் இந்த தலத்துக்கு வாய்ப்பு கிடைத்தவர்கள் சென்று தரிசித்துப் பேரருளைப் பெறலாம்.

அமைவிடம்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சிக்கு 40 கி.மீ முன்பே உள்ளது பாடாலூர். இங்கிருந்து இடதுபுறம் பிரியும் சாலையில் 5 கி.மீ தொலைவில் சென்றால் ஊட்டத்துரை அடையலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism