Published:Updated:

திருப்பம் தரும் திருச்சி கோயில்கள் - 8: பூரண முக்தி அருளும் வாரணத் திருத்தலம் திருவானைக்கா!

திருவானைக்கா

திருச்சியின் தொன்மைக்குச் சான்றாக மலைக்கோட்டை இருப்பதைப்போல இந்த திருவானைக்காவல் ஆலயமும் உள்ளது. இந்த ஆலயத்தில் கிடைத்துள்ள 156 கல்வெட்டுகளில் பராந்தக சோழன் காலத்திய கல்வெட்டு இந்த ஆலயத்தின் தொன்மையைக் கூறுகிறது.

திருப்பம் தரும் திருச்சி கோயில்கள் - 8: பூரண முக்தி அருளும் வாரணத் திருத்தலம் திருவானைக்கா!

திருச்சியின் தொன்மைக்குச் சான்றாக மலைக்கோட்டை இருப்பதைப்போல இந்த திருவானைக்காவல் ஆலயமும் உள்ளது. இந்த ஆலயத்தில் கிடைத்துள்ள 156 கல்வெட்டுகளில் பராந்தக சோழன் காலத்திய கல்வெட்டு இந்த ஆலயத்தின் தொன்மையைக் கூறுகிறது.

Published:Updated:
திருவானைக்கா

வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்

தேனைக்காவில் இன்மொழித் தேவிபாக மாயினான்

ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்

ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதும்ஏதம் இல்லையே.

- திருஞான சம்பந்தர்.

அகன்று விரிந்து பரந்திருந்த இந்த இந்திய தீபகற்பத்தின் வேத காலப் பெயர் நாவலந்தீவு. நாவல் மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த இந்த பகுதியில்தான் ஈசன் ஜம்பு (நாவல்) மரத்தின் கீழ் குடி கொள்ள வந்தார். அதனால் அவர் வெண்நாவல் ஈசன் என்று தமிழிலும் ஜம்புகேஸ்வரர் என்று வடமொழியிலும் வழிபட ஆரம்பித்தோம். ஒருமுறை கயிலையில் வாழ்ந்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்பவர்களுக்குள் ஈசனுக்கு பூசை செய்வதில் சண்டை உருவானது. இதனால் கோபமடைந்த ஈசன் அவர்களை பூமிக்கு செல்ல ஆணையிட்டார்.

ஜம்புகேஸ்வரர்
ஜம்புகேஸ்வரர்

அதன்படி யானையாகவும் சிலந்தியாகவும் பிறப்பெடுத்த அவர்கள், இந்த நாவல் மரத்தடிக்கு வந்து வழிபட்டு வந்தனர். சிலந்தி வலை பின்னி சுவாமிக்கு பந்தல் போல அமைத்து வழிபட, அதை யானை துடைத்து எறிந்து நீரும் பூவும் சமர்ப்பித்து வழிபட்டது. இறுதியில் இரண்டும் மீண்டும் சண்டையிட்டு மடிந்தன. யானை சிவலோகம் சென்றது.யானையிடம் சண்டையிட்டு மடிந்த சிலந்தி மறுபிறப்பில் சோழ அரசன் கோச்செங்கண்ணனாகப் பிறந்து இந்த ஆலயத்தை யானை புக முடியாத மாடக்கோயிலாகக் கட்டினான் என்கிறது தலவரலாறு. யானை காவல் காத்த தலம் என்பதால் இந்த புண்ணிய க்ஷேத்திரம் யானைக்காவல் என்றானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருச்சியின் தொன்மைக்குச் சான்றாக மலைக்கோட்டை இருப்பதைப்போல இந்த திருவானைக்காவல் ஆலயமும் உள்ளது. இந்த ஆலயத்தில் கிடைத்துள்ள 156 கல்வெட்டுகளில் பராந்தக சோழன் காலத்திய கல்வெட்டு இந்த ஆலயத்தின் தொன்மையைக் கூறுகிறது. திருவரங்கத்துக்கு இணையான பிரமாண்ட ஆலயமாக இது உள்ளது. 18 ஏக்கர் பரப்பளவும் வான் முட்டும் கோபுரங்களும், உயரமான மதில்களும், ஐந்து பிராகாரங்களும் என இந்த கோயில் தமிழகத்தின் பெரிய கோயில்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பஞ்ச பூத தலங்களில் இது நீருக்கான தலம். இதை எப்போதும் மெய்ப்பிக்க இன்றும் ஈசனைச் சுற்றியும் நீர் ஊறியபடியே உள்ளது.

அகிலாண்டேஸ்வரி
அகிலாண்டேஸ்வரி

அம்பிகை இங்கு வந்து வழிபட்டு இன்னமும் நித்ய கன்னியாக அகிலாண்டேஸ்வரியாக வழிபடப்படுகிறாள் என்பது அதிசயம். ஈசனைப் பிரிந்து வந்த சக்தி இங்கு ஜம்பு முனிவரின் ஆலோசனைப்படி காவிரி நீரெடுத்து நாவல் மரத்தடியே நீரால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டாள். தன்னை ஏற்றுக்கொள்ளும்படி அன்னை அனுதினமும் வழிபட்டும் வந்தாள். இந்த வேண்டுதல் அம்பிகைக்குப் பிடித்துப்போக இன்றும் அம்பிகை உச்சி காலத்தில் ஈசனைப் பூசிப்பதாக ஐதீகம். அதற்கு ஏற்ப உச்சி வேளையில் ஆலய குருக்கள் ஒருவர் அம்பாளாக உருமாறி, சிவப்புப் பட்டு உடுத்தி, ஆபரணங்களும் ருத்ராட்சமும் மாலைகளும் தாங்கி, ஈசனுக்கு பூஜை செய்வார். பிறகு கோ பூஜை செய்வார்.

இந்தப் பூஜைகள் யாவும் அம்பிகை தனது கணவரான ஈசனை அடைய வேண்டும் என்பதாக ஐதீகம். ஈசனிடம் யோகம் பயிலும் மாணவியாக அம்பிகை இருப்பதால் இங்கு சிவ - பார்வதி திருமணம் நடைபெறுவதில்லை என்பது ஐதீகம். அம்பிகைக்கு திருமணம் நடைபெறுவதில்லை என்றாலும் தினமும் இங்கு நடைபெறும் உச்சி கால அம்பிகை பூஜையை காண்போருக்கு நிச்சயம் திருமணம் நடைபெறும் என்பது அதிசயமான நிகழ்வு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அம்பிகையின் திருச்செவிகளில் காணப்படும் தாடங்கங்கள் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரங்கள். இந்த புனித ஸ்ரீசக்கரங்களை தரிசித்தால் அச்சம் விலகும் என்பதும் நம்பிக்கை. கற்றறியாத மடப்பள்ளி ஊழியன் வரதனை அனுகிரகம் செய்து கவி காளமேகம் என்றாக்கிய அன்னை என்பதால் இவளை வணங்கினால் சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம் என்பதும் புராணம் கூறும் செய்தி. சிற்ப அழகுக்குப் பெயர் போன தலங்களில் இதுவும் ஒன்று எனலாம். மூன்று கால் முனிவர் சிலையும், ஏகநாதர் சிலையும், மங்கையர் சிற்பமும் இங்கு விசேஷமான கலைப்பொக்கிஷம் எனலாம்.

அம்பிகை
அம்பிகை

இங்குள்ள விபூதி பிராகாரத்து மதிலை திருநீற்றுச் சுந்தரபாண்டியன் கட்டினான் என்றாலும் ஈசனே விபூதியைக் கூலியாகக் கொடுத்து வேலை வாங்கினான் என்று தலபுராணம் சொல்கிறது. ஆறு ஆதாரத் தலங்களில் இது சுவாதிஷ்டானத் திருத்தலம். இங்கு திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் பாடிப் பணிந்த ஆலயமிது. இங்கு வந்து ஜம்புகேஸ்வரனைத் துதித்தால் உங்களின் துன்பமும் துயரமும் நீங்கி நலமே உண்டாகும் என தாண்டக வேந்தர் திருநாவுக்கரச பெருமான் உறுதியாகக் கூறி உள்ளார்.

அமைவிடம்

திருச்சி மாநகரின் மத்தியில் காவிரி மற்றும் கொள்ளிட ஆற்றுக்கு இடைப்பட்ட மத்தியில் ஆலயம் அமைந்துள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் ஆலயம் திறந்து இருக்கும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism