Published:Updated:

ஜூலை 16-ம் தேதி இரவு சந்திர கிரகணம் - திருப்பதியில் 12 மணிநேரம் சுவாமி தரிசனம் ரத்து! #Tirupati

`திருமலை திருப்பதிக் கோயிலில் 16-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைசாத்தப்படும். மீண்டும் 17-ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு மேல்தான் பக்தர்கள் சர்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்' என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி
திருப்பதி

வருகிற 16-ம் தேதி நள்ளிரவில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தச் சந்திர கிரகணம், சம்பூர்ண கிரகணம் என்பதால், 17-ம் தேதி அதிகாலை 1.31 முதல் 4.29 வரை நீடிக்கிறது. இதையொட்டி திருமலை திருப்பதி கோயிலில் 6 மணி நேரத்துக்கு முன்பாகவே, அதாவது 16-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைசாத்தப்படுகிறது.

திருப்பதி
திருப்பதி

இதையொட்டி வருகிற 16-ம் தேதி மாலை 4.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரை வழக்கம்போல் நடைபெறும் ஆர்ஜித சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. சர்வ தரிசனம், திவ்ய தரிசன டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளது. கிரகணத்தினபோது வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸிலும் பக்தர்கள் தங்கவைக்கப்பட மாட்டார்கள். அன்னதான நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்குள் முடித்துக் கொள்ளப்படும்.

மீண்டும் 17-ம் தேதி காலையில் கோயிலில் புண்ணியதானம் ஆலய சுத்திக்குப் பிறகு சிறப்பு பூஜைகளான சுப்ரபாதம், தோமாலா சேவா, அர்ச்சனா ஆகிய சேவைகள் நடைபெறும். இதைத் தொடந்து `ஆனி வார அஸ்தனம்' எனும் வருடாந்திர கோயில் நிகழ்ச்சிகளுக்கான பட்ஜெட் காலை 7 மணிக்கு சமர்ப்பிக்கப்படும். பிறகு 17-ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு சர்வ தரிசனம் மூலமாக சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்

அன்னதானம்
அன்னதானம்
TTD

பிறகு 17-ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு சர்வ தரிசனம் மூலமாக சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்

ஆனிவார அஸ்தனம் காரணமாக, கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவா, ஆர்ஜித பிரமோத்ஸவம், வசந்தோத்ஸவம், சகஸ்ரதீபலங்காரம் ஆகிய சேவைகள் ஜூலை 17-ம் தேதி ரத்து செய்யப்படுகின்றன.

திருமலை
திருமலை

பக்தர்கள் இதற்கேற்ப தங்கள் பயணத்திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தத் தகவலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.