Published:Updated:

`வேத பாடசாலை, மருத்துவமனை; 100 ஏக்கர்!' - ஜம்முவில் அமையும் திருப்பதி கோயில் #Tirupati

திருப்பதி
திருப்பதி

திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் இந்தியாவில் மும்பை, வாரணாசி மற்றும் ஜம்மு காஷ்மீரில் தேவஸ்தானத்தின் கோயில்கள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகப் பிரசித்திபெற்ற திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயில் இந்தியாவின் பிரபலமான கோயில்களில் ஒன்று. ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்யும் இந்தியாவின் புகழ்மிக்க கோயிலாகும்.

திருப்பதி
திருப்பதி

இந்தியாவின் பல பகுதிகளிலும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பெருமாள் கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் சென்னை, மதுரை, வேலூர், நெய்வேலி நகரங்களிலும் இந்தியாவில் பல மாநிலங்களிலும் 100-க்கும் மேற்பட்ட திருப்பதிக் கோயில்களை தேவஸ்தானம் எழுப்பி வருகிறது. இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் 100 ஏக்கர் பரப்பளவில் ஜம்மு-கட்றா நெடுஞ்சாலைப் பகுதியில் வேத பாடசாலை மற்றும் மருத்துவமனையுடன் கூடிய திருப்பதி வேங்கடாசலபதி கோயிலைக் கட்ட இருப்பதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முன்னதாகக் கடந்த டிசம்பர் மாதம் திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் இந்தியாவில் மும்பை, வாரணாசி மற்றும் ஜம்மு காஷ்மீரில் தேவஸ்தானத்தின் கோயில்கள் கட்ட திட்டமிடப்பட்டது.

சிறப்புகள் வாய்ந்த திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயில் தெப்போற்சவ விழா! #Tirupati

இதுதொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமார் சிங்கால்,``ஜம்மு காஷ்மீரில் திருப்பதி கோயில் கட்டுவதற்கு அம்மாநில அரசு முழு ஒத்துழைப்பும் தர தயாராக இருக்கிறது. வேங்கடேசப் பெருமாளின் கோயிலுக்கு அம்மாநிலத்தில் ஏழு இடங்களை ஒதுக்கிப் பார்வையிட அழைத்திருந்தனர்.

திருப்பதி
திருப்பதி

தேவஸ்தானத்தின் சார்பில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டதன் பேரில், கோயில் அமைக்க ஏதுவாக 4 இடங்களைத் தேர்வு செய்தோம். அந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு இடங்களில் இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவை ஜம்முவின் தும்மி மற்றும் மஜின் பகுதிகளாகும். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் மேற்பார்வையில் திருப்பதி தேவஸ்தான கமிட்டியின் ஆலோசனைப்படி கோயில் அமைக்கப்படும்.

ஜம்மு காஷ்மீரில் தற்போது அமைதி நிலவி வருவதால், இன்னும் சிறிது காலத்தில் கட்டுமான வேலைகளைத் தொடங்கவுள்ளோம். இரண்டு ஆண்டுகளில் ஆலயப்பணிகள் நிறைவுபெறும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு