திருமலை திருப்பதிக்குப் பயணம் போகிறவர்கள் அனைவரும் கீழ்த்திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாளையும் திருச்சானூரில் அலர்மேலு மங்கையையும் தரிசித்துவிட்டுச் செல்வது வழக்கம்.

இதற்கு வசதியாக சீனிவாசம் காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாஸம் காம்ப்ளக்ஸ் போன்று பல தங்கும் விடுதிகள் திருமலை திருப்பதி தேஸ்தானம் சார்பில் கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில் திருச்சானூரில் 74.7 கோடி ரூபாயில் பத்மாவதி நிலையம் என்னும் புதிய தங்கும் விடுதி கட்டப்பட்டு பக்தர்கள் தங்கி தாயாரை தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. பத்மாவதி நிலையம் தங்கும் விடுதி 4.26 லட்சம் சதுர அடியில் 200 அறைகளுடன் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இவற்றில் 80 குளிர் சாதன அறைகள், 120 சாதாரண அறைகள் உள்ளன. கிட்டத்தட்ட 1,800 பக்தர்கள் இதில் தங்கி சுவாமி தரிசனம் செய்யலாம். 8 அடுக்கு மாடிகளுடன்கூடிய இந்த காம்ப்ளக்ஸில் ஆன்மிக நூல்கள் அடங்கிய மிகப்பெரிய நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
திருமலையில் மேல்திருப்பதியில் மாத்ருஶ்ரீ வகுளமாதா ரெஸ்ட் ஹவுஸ் 42.86 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது. இதில் 1,400 பக்தர்கள் தங்கும் விதமாக 54 அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய தங்கும் விடுதிகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.