Published:Updated:

`லட்டு பிரசாதம் 4 மாநிலத் தலைநகரங்களில் கிடைக்க ஏற்பாடு; முதல் பெண் அதிகாரி!’ - திருப்பதி அப்டேட்

திருப்பதி லட்டு
திருப்பதி லட்டு

`வழக்கம்போல் 50 ரூபாய் மதிப்புள்ள 175 கிராம் லட்டு சலுகை விலையில் 25 ரூபாய்க்கு வழங்கப்படும்’.

திருமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயில், கடந்த 60 நாள்களுக்கும் மேலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் வேங்கடேசப் பெருமாளுக்கு தினந்தோறும் நடைபெறும் பூஜைகள் எந்தவிதத் தடையுமின்றி நடைபெற்று வருகின்றன.

திருப்பதி
திருப்பதி

ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிக் குழந்தைகளுக்கு விடுமுறைக் காலம் என்பதால், எப்போதும் பக்தர்களின் கூட்டம் திருமலையில் நிரம்பி வழிவது வழக்கம். இதனால் உண்டியல் காணிக்கையும் அதிகமாக அந்த மாதத்தில் செலுத்தப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது. 2019 - ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1.79 கோடி ரூபாயை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் இந்த ஊரடங்கு நேரத்தில் பக்தர்கள் கோயிலுக்கு வர முடியாவிட்டாலும், இ - உண்டியல் மூலமாக ஆன்லைனில் காணிக்கைகளைச் செலுத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1.97 கோடி ரூபாயை ஆன்லைனில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

S.Pargavi
S.Pargavi
TTD PHOTO

முதல் பெண் அதிகாரி!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் துணை நிர்வாக இயக்குநராக எஸ்.பார்கவி ஐ.ஏ.எஸ் பணிப் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்தப் பதவிக்குப் பெண் ஒருவர் பணிப்பொறுப்பை ஏற்பது இதுவே முதல் முறை.

திருப்பதி என்றாலே, நம் நினைவில் வருவது ஏழுமலையானும் லட்டு பிரசாதமும்தான். ஊரடங்கு நேரத்தில் பெருமாள் தரிசனமும் லட்டு பிரசாதமும் கிடைக்காமல் பக்தர்கள் பலரும் வாடி வருகின்றனர். இதைப் போக்குவதற்காக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா தலைநகரங்களில் லட்டு விநியோகம் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

Tirupaty
Tirupaty
TTD PHOTO

வழக்கம்போல் 50 ரூபாய் மதிப்புள்ள 175 கிராம் லட்டு சலுகை விலையில் 25 ரூபாய்க்கு வழங்கப்படும். அதிக அளவில் லட்டு தேவைப்படுபவர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபங்களிலும் தேவஸ்தான அலுவலகங்களிலும் லட்டுகள் டெலிவரி செய்யப்படும்.

தேவைப்படுபவர்கள் திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரியின் தொடர்பு எண்: 98495-75952 கோயில் பேஷ்கார் எண்: 97010-92777 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தங்களுக்குத் தேவையான அளவு லட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு