Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

கஜபிருஷ்ட விமானம்
கேசாவரம் சிவாலயம்
பிரீமியம் ஸ்டோரி
News
கஜபிருஷ்ட விமானம் கேசாவரம் சிவாலயம்

வாசகர்களின் ஆன்மிகத் தகவல் பகிர்வுகள்!

ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த ஆன்மிகத் தகவல்கள் மற்றும் வாசகர்களின் சந்தேகங்களுக்கு வாசகர்களே தகவல் பகிரும் பகுதி இது. ஆன்மிகம் தொடர்பான உங்களின் சந்தேகங்கள், தேவைப்படும் தகவல்களை நீங்கள் கேள்வியாகக் கேட்கலாம். அத்துடன் இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு, துல்லிய விவரங்களை - பதில்களை நீங்கள் அறிந்திருந்தால் அவற்றையும் பகிரலாம்.

உதவலாம் வாருங்கள்!

டக்குப் பார்த்த காளியம்மனை வணங்கினால் நல்லது என்று எங்கள் ஜோதிடர் பரிகாரமாகக் கூறியுள்ளார். நாங்கள் சோழிங்கநல்லூரில் இருக்கிறோம். எங்கள் பகுதிக்கு அருகில், வடக்கு நோக்கி அருளும் காளியம்மன் ஆலயம் உள்ளதா. விவரம் அறிந்தவர்கள், தகவல் பகிருங்களேன்.

- கே.சுதாராஜன், சென்னை

ந்தசஷ்டி விரதம் இருக்க ஆசைப்படுகிறேன். ஆறு நாளும் கடுமையான விரதம் இருக்கவேண்டும் என்றால் கோயிலில்தான் விரதம் இருக்க வேண்டுமா? வீட்டில் விரதம் கடைப்பிடிக்க வழிகாட்டும் `சஷ்டி விரத நியதிகள்' குறித்த புத்தகம் ஏதேனும் உள்ளதா? எங்கு கிடைக்கும்?

- தி.சுப்பிரமணியம், வேலூர்

த்தரட்டாதி நட்சத்திரக்காரர்கள் போற்றி வணங்கவேண்டிய சித்தர் வழிபாடு பற்றிய விவரங்கள் எனக்குத் தேவை. இந்த நட்சத்திரத்துக்கான சித்தர்களின் ஜீவசமாதி ஆலயங்கள் அமைந்திருக்கும் தகவலைப் பகிர்ந்துகொண்டால், பயனுள்ளதாக இருக்கும்.

- வி.பரணிகுமார், சிதம்பரம்

ன் கணவர் உடல் நலம் தேறி குணம் அடையவேண்டும் எனில் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார்கள். பல தலைமுறையாக எங்களின் குலதெய்வத்தை அறியமுடியாத நிலை. சமீபத்தில் `ஆற்றங்கரையில் இருக்கும் அம்மன் கோயிலில் அருளும் வீரபத்திரரே எங்கள் குலதெய்வம்' என்று, உறவுக்காரப் பெரியவர் ஒருவர் மூலம் அறிந்தோம். நெல்லை மாவட்டத்தில் மேற்காணும் அமைப்பில் வீரபத்திரர் அருளும் அம்மன் ஆலயம் எங்குள்ளது. விவரம் அறிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

- கே.சுமித்ரா, பெங்களூரு

கான் பாடகச்சேரி சுவாமிகளின் சரிதத்தை விளக்கும் புத்தகம் எங்கு கிடைக்கும் என்ற விவரம் தேவை. எவரிடமேனும் புத்தகம் இருந்தால், நகல் எடுத்து அனுப்பிவையுங்களேன்.

- எம்.அன்னபூரணி, சேலம்.கஜ பிருஷ்ட விமானம்!

கஜ பிருஷ்ட விமானம்

க்தி விகடன் 27.7.21 தேதியிட்ட இதழில், `கஜபிருஷ்ட விமானம் குறித்த தகவல் சேகரிப்பில் உள்ளேன். தென்னாட்டில் இவ்வகை விமானத்துடன் கூடிய கோயில் குறித்த தகவல்கள் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்' என்று சாத்தூர் வாசகர் கே.பிரசன்னா கேட்டிருந்தார்.

அவருக்குக் கீழ்க்காணும் விவரங்களை திருவாரூர் வாசகர் எம்.மூர்த்தி அளித்துள்ளார்:

விமானம் எனப்படுவது, இறைவனின் கருவறை மூர்த்தம் வைக்கப்படும் இடத்துக்கு நேர் மேலே அமைக்கப்படும் கட்டட அமைப்பு. இது சிகரம் என்றும் சொல்லப்படும்.

பொதுவாக கோயில் கட்டட அமைப்புகளில் ஏழு விதமான விமானங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் ஆலக் கோயில் எனப்படும் யானைக் கோயில் அமைப்பும் ஒன்று.

யானையின் பின்புறத்தைப் போல வடிவம் கொண்ட விமானங்கள் கஜபிருஷ்ட விமானம் எனப்படுகிறது. கஜபிருஷ்ட அமைப்பைச் `சேதிய கிருஹம்' என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. பிராகிருத மொழியில் இது `சேதியகர' என்று கூறப்படுகிறது. தமிழில் `யானைக் கோயில்' என்று கூறப்படுகிறது.

சிற்ப சாஸ்திர நூல்கள் இந்தக் கட்டடங்களை கஜபிருஷ்டம், ஹஸ்தி பிருஷ்டம், குஞ்சர பிருஷ்டம் என்றெல்லாம் விவரிக்கின்றன. கஜம், ஹஸ்தி, குஞ்சரம் என்னும் சொற்களின் பொருள் யானை என்பதாகும். மணிமேகலைக் காவியத்தில் `குச்சரக் குடிகை' என்று சொல்லப் படுகிறது. பூம்புகாரில் இருந்த சம்பாபதிக் கோயில் இந்த அமைப்பாக இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பெளத்தர்கள் காலம் தொட்டு சைத்தியாலம் அதாவது சைத்தியக் கிருஹம் என்னும் கோயில்களை அமைத்தார்கள் என்றும் அவை கஜபிருஷ்டக் கோயில்கள் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. பௌத்தர் கால யானைக் கோயில் அமைப்புகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் அமைக்கப்பட்டன என்றும் வரலாறு கூறுகின்றது. கஜபிருஷ்ட விமானம் கொண்ட கோயில்கள் தொண்டை மண்டலத்தில்தான் அதிகம் இருக்கின்றன.

சோழ நாட்டில் வெகுசில திருக்கோயில்களே கஜபிருஷ்ட விமானத்துடன் திகழ்கின்றன.பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் கஜபிருஷ்ட விமானக் கோயில்கள் இல்லை என்பதே ஆய்வாளர்களின் முடிவு. தெற்குக் கர்நாடகத் தில் சில கோயில்கள் கஜபிருஷ்ட அமைப்பில் உள்ளன.

மேலும் கஜபிருஷ்ட விமானம் குறித்த அரிய விளக்கங்களைப் பெற `யானைக் கோவில்' (மயிலை சீனி.வேங்கடசாமி எழுதியது) என்ற புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம்.