Published:Updated:

கோபுரம் எழும்ப கைகொடுப்போம்

உவரி ஶ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயில்
பிரீமியம் ஸ்டோரி
உவரி ஶ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயில்

உவரி ஶ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயில்

கோபுரம் எழும்ப கைகொடுப்போம்

உவரி ஶ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயில்

Published:Updated:
உவரி ஶ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயில்
பிரீமியம் ஸ்டோரி
உவரி ஶ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயில்

கோயிலின் பேரழகு கோபுரங்களில் தெரியும். வானளாவ எழுந்து நிற்கும் கோபுரங்கள், தொலைவிலிருந்தே இறை தரிசன சாந்நித்தியத்தை - இறைவனை தரிசித்த திருப்தியை அருள்வதாலேயே `கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்கிற வழக்கு உருவானது. அந்தக் காலத்தில் மன்னர்கள் எழுப்பிய ராஜ கோபுரங்கள் இன்றும் எழிலுடன் நிற்பதைக் காண்கிறோம். அவற்றுக்கு இணையான பெரும் திருப்பணி உவரி ஶ்ரீசுயம்புலிங்க சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வருகிறது. முழுவதும் கருங்கற்களால் ஆன 108 அடி உயர பிரமாண்ட கோபுரம் எழும்பி வருகிறது.

உவரி ஶ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயில்
உவரி ஶ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயில்

இந்தத் திருப்பணி குறித்து 2017 செப்டம்பர் 25-ம் தேதி சக்தி விகடனில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அப்போது 22 அடி ஆழ அஸ்திவாரப் பணி முடிந்திருந்தது. இப்போது அந்தத் திருப்பணி எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய உவரிக்குச் சென்றோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இறைவன் லிங்கோத்பவ அம்சத்துடன் அருளும் இந்த அற்புத க்ஷேத்திரத்தில் அம்பிகை மனோன்மணியாக அருள்பாலிக்கிறாள். கடம்ப மரத்தைத் தலவிருட்சமாகக்கொண்ட இந்த க்ஷேத்திரத்தில் மார்கழி மாதம் 30 நாள்களும் சூரியபகவான் தன் ஒளிக்கற்றைகளால் சிவனாரைத் தழுவி வழிபடுவது, கண்கொள்ளா காட்சியாகும். இங்கு நடைபெறும் தை மாத பிரம்மோற்சவம் பிரசித்திபெற்றது. குறிப்பாக 10-ம் நாள் தெப்போற்சவம் அற்புத நிகழ்ச்சியாகக் கருதப் படுகிறது. இந்த உற்சவத்தில் சுவாமியும் அம்பாளும் தெப்பத்தில் உலாவரும்போது அவர்களுக்கு முன் சுமார் 3 அடி நீளத்தில் விலாங்கு மீன் ஒன்று துள்ளிச் செல்லுமாம். ஆனால், மற்ற நாள்களில் இந்த மீனைக் காண முடியாதாம். இந்த அதிசயத்தைக் காணவே ஏராளமான மக்கள் இங்கு கூடுவார்களாம்!

உவரி ஶ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயில்
உவரி ஶ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயில்

வேண்டும் வரம் அருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இந்தத் தலத்தின் ராஜகோபுரம் பேரெழிலோடு திகழ வேண்டும் என்னும் பெருவிருப்பத்துடன் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தத் திருப்பணியைச் செய்துவரும் சந்தான கிருஷ்ண ஸ்தபதி, அவருக்கு உதவியாகத் திகழும் உமையொருபாகன் ஆகியோரிடம் பேசினோம். “இக்கோபுரத்தின் உயரம் தரைத்தளத்தி லிருந்து 108 அடி. அஸ்திவாரத்தின் நீளம் 65 அடி, அகலம் 42 அடி, ஆழம் 22 அடிகள். இந்த ராஜகோபுரம் ஒன்பது நிலைகளைக் கொண்டது. அடி முதல் உச்சிக் கலசம் வரையிலும் முழுவதுமே கல்தான். 108 அடி உயரத்தில் 32 அடி உயரம் கல்காரம் (வாசல்கால்). அதற்குமேல்தான் ஒன்பது நிலை கோபுரம் அமைக்கப்படுகிறது.

108 அடி உயரத்தில், கீழிருந்து மேலாக முறையே உபபீடம், உபபீட பத்மம், உபபீட பட்டிகை, கால்வரி, பலகை வரி, போதிகை, உத்ரம், கபோதகம், வியாழம் வரையிலுமான பகுதி கல்காரம் (32 அடி வரை) ஆகும். இதில் கால்வரி வரையிலுமான (24 அடி உயர)வேலைப்பாடுகள் நிறைவடைந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேற்கொண்டு கல்காரத்தின் பணிகள் நிறைவுற்றதும், அதன் மீது ஒன்பது நிலைகள் எழுப்பப்பட உள்ளன. நிலைக்கால் உயரம் 24 அடி. இது ஒரே கல்லால் செய்யப்பட்டது.

ஒன்பது நிலைகளில் இருபுற வாசலிலும் முன்புறம் இருவர் பின்புறம் இருவர் எனும் விதமாக 36 துவார பாலகர்களின் சிலைகள், 6 திசா விக்ரகங்கள், திசைக்கு இரண்டாக 8 ரிஷபங்கள், வடக்கிலும் தெற்கிலுமாக 4 சிவமூர்த்தங்கள் என மொத்தம் 54 சிலைகள் இடம்பெறுகின்றன. கோபுரத்தின் உள்பகுதியில் நான்கு இசைத்தூண்களும், நான்கு மூலைகளிலும் 10 அடி உயரத்தில் கற்சங்கிலியும் தொங்கவிடப்படவுள்ளன.

கன்னியாகுமரி விவேகானந்தர் மணிமண்ட பம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட கற்களைப் போன்று உப்புக்காற்றால் பாதிக்கப் படாத கற்கள் கொண்டுதான் இந்தத் திருப்பணி நடைபெற்று வருகிறது. எனவே கோபுரம் பல காலம் பாதிப்பு ஏற்படாமலும், பொலிவு இழக்காமலும் இருக்கும். தஞ்சைப் பெரிய கோயிலில் 216 அடி உயரத்தில் கருங்கல் விமானத்தை ராஜராஜ சோழன் கட்டினார். அதேபோல் இன்னும்பல தலங்களில் முழுவதும் கற்களாலான கோபுரத்தை அமைத்திருக்கிறார்கள் நம் மன்னர் பெருமக்கள். சமீப காலத்தில் கருகற்களாலான கோபுரப் பணி மிகவும் அரிது. அவ்வகையில் இந்தத் திருப்பணி மகத்தானது” என்கின்றனர் ஸ்தபதிகள்.

இந்த பிரமாண்டத் திருப்பணியை மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளார் கள். இந்தத் திருப்பணி விரைவாக நடந்தேற நாமும் தோள் கொடுப்போம்; நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம். விரைவில் பணி முழுமையடைந்து திருக்கோயில் குடமுழுக்கு காண, அருள்மிகு சுயம்புலிங்கநாதரை வேண்டிக்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism