Published:Updated:

சித்தர்கள் அளித்த பாதரசக் கொலுசு!

வல்லம் குடைவரை அற்புதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
வல்லம் குடைவரை அற்புதங்கள்

பல்லவன் கண்ட வல்லம் குடைவரை அற்புதங்கள்

சித்தர்கள் அளித்த பாதரசக் கொலுசு!

பல்லவன் கண்ட வல்லம் குடைவரை அற்புதங்கள்

Published:Updated:
வல்லம் குடைவரை அற்புதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
வல்லம் குடைவரை அற்புதங்கள்
கல்லிலே கலைவண்ணம் கண்டவர்கள் பல்லவர்கள். குடைவரைக் கோயில்கள் அவர்களுடைய கலைப்பணிக்குச் சான்று. அவ்வகையில், பல ஆச்சரியங்களைத் தன்னுள் பொதிந்து திகழ்கிறது, மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக் குடைவரைக் கோயில் ஒன்று.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லம் எனும் கிராமம். இயற்கை எழிலார்ந்த இந்தக் கிராமத்தில்தான் அமைந்திருக்கிறது, அதிசயங்கள் நிறைந்த அந்தக் குடைவரை.

ஆதிகாலத்தில் முறையான படிக் கட்டுகள் இல்லை எனினும், மிகச் சமீப காலத்தில் படிகள் அமைத்துள்ளனர்.

ராசிப் படிகள், பஞ்சாட்சரப் படிகள், நவதான்யப் படிகள், நவ உலோகப் படிகள், பதினாறு பேறுகளைக் குறிக்கும் படிகள், நவரத்னப் படிகள் என்று குடைவரைக்குச் செல்லும் படிக்கட்டுகள் சிறப்புப் பெயருடன் திகழ்கின்றன.

சிறு மலையின் மீது மூன்று நிலைகளில் அமைந்துள்ளன குடைவரைக் கோயில்கள். சுமார் 1400 ஆண்டுகளுக்குமுன் நிர்மாணிக் கப்பட்டவை. படிகளில் ஏறிச் சென்றால், முதலில் வருவது கரிவரதராஜ பெருமாள் கோயில். பல்லவப் பேரரசன் மகள் கொம்மை என்பவள் எடுப்பித்ததாக இங்குள்ள கல்வெட்டு கூறுகின்றது.

ஸ்ரீதேவி-பூதேவியுடன் அருள்கிறார் பெருமாள். துவாரபாலர்கள் கரங்களில் ஆயுதங்கள் இல்லாமல், ஒரு கரத்தை இடுப்பில் ஊன்றி, மறு கரத்தால் கவரி வீசுகின்றனர். வேறெங்கும் காண்பதற்கரிய கோலம் இது!

இந்தப் பெருமாள் சந்நிதிக்கு அருகில் விஷ்ணுதுர்கை புடைப்புச் சிற்பமாக அருள்கிறாள். திருமுகத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள் இந்த தேவி.

சித்தர்கள் அளித்த பாதரசக் கொலுசு!

குன்றின் நடு பாகத்தில் ஒரு தியான மண்டபம் உள்ளது. இங்குள்ள குடை வரையில் ஆவுடை இல்லாமல், நெடிய உருவமாக ஒரு தூண் போன்று விசேஷமாய்க் காட்சி தருகிறது ஒரு லிங்க மூர்த்தம். ‘லக்கச்சோமாசியார் மகள் அமைத்த தேவகுலம் இது’ என்கிறது கல்வெட்டு ஒன்று. தேவகுலம் என்றால் ஆலயம். எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த பெண் எடுப்பித்த கோயில் இது.

குன்றின் உச்சியில் அமைந்திருக்கிறது, வேதாந்தீஸ்வரர் கோயில். நுழைவாயிலில் புடைப்புச் சிற்பமாய்த் திகழும் பிரமாண்ட கணபதி, மிக அழகு. இவருக்கு 13 திருப் பெயர்களாம். கோஷ்ட மூர்த்தமாக சேஷ்டாதேவியும் அருள்கிறாள்.

கருவறையில் வேதாந்தீஸ்வரர் கம்பீரமாக ருத்ராட்ச பந்தலின் கீழ் அருள் கிறார். பல்லவர் காலத்தில் சிற்றரசனாக விளங்கிய வயந்தப்பிரியனின் மகன் கந்த சேனன் என்பவனால் இக்கோயில் அமைக்கப்பட்டது என்கிறது கல்வெட்டு.

சித்தர்கள் அளித்த பாதரசக் கொலுசு!

இக்கோயிலின் கருவறைத் தூண்களில் பகாப்பிடுகு, லளிதாங்குரன், சத்ருமல்லன், குணபரன் போன்ற மகேந்திரவர்மனின் சிறப்புப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஈசனின் துவார பாலகர்கள் இருவரும் மழு அடியார், சூல அடியார் என்ற திருப் பெயரில் வித்தியாச வடிவில் காட்சி அளிக்கின்றனர்.

சிவனின் இடப்புறமாக ஞானாம்பிகை அருள்கிறாள். முக்கண் தேவியாக சித்த புருஷியாக அம்பிகை விளங்குகிறாள். இவள் அணியும் பாதரசக் கொலுசு சித்தர்கள் அளித்த அதிசயப் புதையல் என்கிறார்கள். விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் சந்நிதிகளும் உள்ளன.

அரசன், அரசன் மகள், எளிய குடிமகள் என மூவரும் இணைந்து அமைத்த குடை வரைகளுடன் திகழும் இந்தக் குன்றும் தலமும் `வசந்தீஸ்வரம்’ என்று சிறப்பிக்கப் பட்டனவாம்.

சித்தர்கள் அளித்த பாதரசக் கொலுசு!

மொத்தத்தில்... ஏழு சித்தர்கள் தினமும் வழிபடும் ஆலயம், சிவகங்கா புஷ்கரணி, மலைக்குமேல் பாறையில் திகழும் சிவனார் பாதம், சனிப் பரிகாரத் தலம், குழந்தை வரம் அருளும் கணபதி என்று பல அற்புதங்களைத் தன்னகத்தே கொண்டு, அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய புண்ணிய க்ஷேத்திரமாகத் திகழ்கிறது, இந்த வல்லம் வசந்தீஸ்வரம்!

வல்லம் குடைவரையை வீடியோ வடிவில் காண...