Published:Updated:

`செங்கல் வடிவில் எங்கள் குலதெய்வம்!’ - மேலக்கடம்பூர் வீரபத்திர சுவாமி

மேலக்கடம்பூர் வீரபத்திர சுவாமி
பிரீமியம் ஸ்டோரி
News
மேலக்கடம்பூர் வீரபத்திர சுவாமி

கடம்பூர் விஜய்

கடலூர் மாவட்டத்தின் தென்புறத்தில் ஓடும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ளது அணைக்கரை.

இங்கு கீழ் அணையிலிருந்து பிரிந்துசென்று வீராணம் ஏரியை நிரப்பும் கால்வாய் வடவாறு. இந்த வடவாற்றின் கரையோர கிராமம்தான் கடம்பூர். மேலக்கடம்பூர், கீழக்கடம்பூர் என இரு பகுதிகளாகப் பிரிந்துள்ளது இந்த ஊர்.

இங்குள்ள திருக்கோயிலின் இறைவன் அருள்மிகு அமிர்த கடேஸ்வரரைத் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இருவரும் தம் பதிகங்களால் பாடியுள்ளமையால் இந்தத் தலத்தின் மகிமையை நாம் அறியலாம். நெடிதுயர்ந்த தென்னை மரங்கள் அதற்கு ஒப்பாக உயர்ந்து நிற்கும் மாட மாளிகைகள், அதில் படபடக்கும் கொடிகள், மீன்கள் துள்ளி விளையாடும் நீர்நிலைகள், பச்சை நிலமாகப் பரந்து விரிந்து திகழும் வயல்வெளிகள் எனப் பதிகங்களில் காட்டும் கடம்பூரின் எழில் மிக அற்புதமானது!

மேலக்கடம்பூர் வீரபத்திர சுவாமி
மேலக்கடம்பூர் வீரபத்திர சுவாமி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சுந்தரச் சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன், கி.பி 969-ல் கடம்பூர் சம்புவராயர் மாளிகையில் வஞ்சக மாகக் கொல்லப்பட்டார். இதனால் சம்புவராயர் வகையறாக்கள் அனைவரும் சோழ நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் புதிய குடியேற்றமாக, காஞ்சிப்பகுதியிலிருந்து இங்கு குடியேறியவர்கள் வேளாளர்கள். இதில் சைவர்களாக வாழ்ந்தவர்கள் சைவ வெள்ளாளர் – சைவப் பிள்ளை என அழைக்கப்பட்டனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தச் சைவ வெள்ளாளர்களின் குல தெய்வம்தான் வீரபத்திரர். அவருக்கான சந்நிதி மேலக்கடம்பூர் பெரிய கோயிலின் வடப்புறத்தில் உள்ளது. தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம், குலதெய்வம். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளைத் தந்தருளும். மேலும், மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களும் வேண்டுமெனில், குலதெய்வ வழிபாடு முக்கியம்.

மேலக்கடம்பூர் வீரபத்திர சுவாமி
மேலக்கடம்பூர் வீரபத்திர சுவாமி

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே திகழும் என்பது ஐதிகம். ஆனால், அதன் சக்தியை அளவிட முடியாது. யமன்கூட ஒருவரது குலதெய்வத்தின் அனுமதி பெற்றுத்தான் உயிரை எடுக்க முடியும். குலதெய்வங்கள், கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்குக் கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கின்றனவோ, அவருக்குக் குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

மற்ற நாள்களில் குலதெய்வத்தை வழிபடுவதைவிட, பெளர்ணமி தினத்தன்று விரதமிருந்து வழிபடுவதுதான் நூறு சதவிகிதப் பலனைப் பெற்றுத் தரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. மேலும் வருடத்தின் முதல் நாளன்று அதாவது சித்திரை முதல் நாளில், குலதெய்வத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும் என்பது உறுதி.

மேலக்கடம்பூர் வீரபத்திர சுவாமி
மேலக்கடம்பூர் வீரபத்திர சுவாமி

இனி, எங்கள் குலதெய்வத்தின் திருக்கதை யைப் பார்ப்போம்.

தட்சன், சிவனை மதியாமலும் அவருக்குக் கொடுக்க வேண்டிய அவிர்பாகத்தைக் கொடுக்காமலும் யாகத்தை நிகழ்த்தினான். நியாயம் கேட்டு நின்ற தாட்சாயினியையும் மதிக்காமல் பேசவே, தாட்சாயினியாகத் தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக்கொள்ள முயன்றாள். இதைக் கண்டு ஆவேசமுற்று ருத்திர தாண்டவடிய சிவனின் உடலெங்கும் தோன்றிய வியர்வைத் துளிகள் ஆயிரம் வீரபத்திரராகத் தோன்றி, பின் அவை ஒன்றாகின. அந்த வீரபத்திரர் கடுங்கோபத்துடன் தட்சனின் யாகசாலைக்குச் சென்று அங்கிருந்த தேவர்கள், முனிவர்கள் எனச் சகலரையும் துவம்சம் செய்தார். தட்சனின் சிரசைத் தம் கைவாளினால் அறுக்க அவன் ஆட்டுக்கடா வடிவெடுத்து வீரபத்திரரிடம் மன்னிப்புக் கேட்டு நின்றான் எனப் புராணங்கள் கூறும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீரபத்திரர் என்னும் திருநாமத்தில் ‘வீரம்’ என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. இங்கே வீரம் என்பதற்கு ‘நேர்மை’ என்றும், ‘பத்திரம்’ என்பதற்கு ‘காப்பவர்’ என்றும் பொருள் கொண்டு ‘நேர்மையைக் காக்கும் கடவுள்’ என வீரபத்திரரைப் போற்றிக் கொண்டாடுகின்றனர், அவரைக் குலதெய்வமாகக் கொண்ட சைவ வெள்ளாளர்கள்.

யமன்கூட ஒருவரது குலதெய்வத்தின் அனுமதி பெற்றுத்தான் உயிரை எடுக்க முடியும். குலதெய்வங்கள், கர்மவினைகளை நீக்க வல்லவை.

அவர்கள் காஞ்சிப் பகுதியிலிருந்து வந்த போது தங்கள் குலதெய்வத்தை மூன்று செங்கற்களில் ஆவாஹனம் செய்து எடுத்து வந்தனர். அதைக் கடம்பூரில் சிவாலயத்தின் வடக்குப் பகுதியில் பிரதிஷ்டை செய்தனர். பல நூறு ஆண்டுகளாக இன்றும் அந்த மூன்று செங்கற்களையே வீரபத்திரராக பாவித்து வழிபட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாது, வீரபத்திரர் ஒதிய மரத்தின் கீழ் வாழ்வதாக ஐதிகம். இந்த மூன்று செங்கற்களுக்கு நிழலாக ஓர் ஒதியமரம் நிற்கிறது. சைவ வெள்ளாளர், தங்களது திருமணத்தில் அரசாணிக்கால் நடும் சடங்கின்போது, ஒதிய மரக்கிளையொன்றையே நிறுத்திவைப்பர்

மேலக்கடம்பூர் வீரபத்திர சுவாமி
மேலக்கடம்பூர் வீரபத்திர சுவாமி

இந்தக் குலதெய்வத்துக்கு நித்திய பூஜைகள் உண்டு. இதே இனத்தைச் சேர்ந்த ஒருவர் நித்தியப்படி பூஜை செய்வது வழக்கம். வீரபத்திரர் மாசி பிரதமை பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தார். அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களது வீட்டில் நடக்கும் சுபகாரியத்துக்கு முன்னர் இக்கோயிலுக்கு வந்து சிறப்பு அபிஷேகம் செய்து குலதெய்வத்தின் துணைவேண்டி வணங்கிச் செல்வது வழக்கம்.

வருடமெல்லாம் நன்மை பயக்க வேண்டுமென வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில், அனைத்து மருளாளிகளும் குடும்பத்துடன் இங்கு வந்து பெரும் அபிஷேகம் ஒன்றினை நடத்தி அன்னப்பாவாடை செய்து, வேண்டுதல் மாவிளக்கு ஏற்றிக் கூட்டு வழிபாடு நடத்துவர். இதற்காக மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தக் கிணற்றிலிருந்து புனிதநீரைக் கலசத்தில் எடுத்து ஊரைச் சுற்றி வந்து வீரபத்திரருக்கு அபிஷேகம் செய்வர்.

அப்போது மட்டும் வீரபத்திரர் போன்ற உருவ மரப்பதுமை ஒன்றை வைத்து அதற்கு அலங்காரம் செய்வித்து வழிபடுவார்கள். எடுக்க உள்ள காரியம் வெற்றிபெறுமா எனவும் இங்கே திருவுளச்சீட்டு போட்டு எடுப்பது உண்டு.

இந்தக் குலதெய்வத்துக்குத் தனித்த கோயில் கட்ட இத்தெய்வம் அனுமதி அளித்ததில்லை. அதனால் மேற்கூரையின்றி ஒதிய மரத்தின் கீழ் பல ஆண்டுகளாக இருந்த இந்தப் பீடத்துக்கு, சில வருடங்களின் முன்னர் நீளவாக்கில் மண்டபம் கட்டப்பட்டு குடமுழுக்கும் செய்யப்பட்டது. ஆயினும் இன்றும் இந்தப் பீடத்துக்கு மேற்கூரை என எதுவும் கிடையாது. அதுபோல் வீரபத்திரரை சிலை ரூபம் ஆக்க முயன்றபோதும் இத்தெய்வம் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

ஆக, செங்கல் உருவிலேயே எங்கள் குலதெய்வத்தை வழிபட்டு வருகிறோம். எங்கள் வாழ்வு செழிக்கவும் குலம் தழைக்கவும் காலம் காலமாக அருள்பாலித்து வருகிறார், அருள்மிகு வீரபத்திரர். நீங்களும் உங்கள் குலதெய்வத்தைத் தவறாமல் வழிபடுங்கள். கிராமங்களிலிருந்து வெளியேறி நகர்ப்பகுதிகளில் குடியேறியவர் களுக்குக் குலதெய்வக் கோயிலுக்குச் செல்ல முடியாத சூழல் இருக்கலாம். அதற்காக, அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அதற்கு ஒரு பரிகாரம் உள்ளது.

உங்கள் வீட்டிலேயே குலதெய்வப் படத்தை அலங்கரித்து, உங்கள் வீட்டு முறைப்படி வழக்கமான வகையில் படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குலதெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்குக் கிடைக்கும்.