Published:Updated:

சேலம் சௌடேஸ்வரி அம்மன்: உடலில் கத்தியால் கிழித்து நேர்த்திக் கடன் செலுத்திய வீரக்குமாரர்கள்!

பக்தர்கள்

உலகம் செழிப்பாக இருக்கவும், குடும்பம் சந்தோஷமாகத் திகழவும், திருமண வரம் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் என்று பல்வேறு வேண்டுதல்களை அம்மனுக்கு வைக்கும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் வீரக்குமாரர்கள் தங்கள் உடலில் கத்தி போட்டு அம்மனை வரவேற்றனர்

சேலம் சௌடேஸ்வரி அம்மன்: உடலில் கத்தியால் கிழித்து நேர்த்திக் கடன் செலுத்திய வீரக்குமாரர்கள்!

உலகம் செழிப்பாக இருக்கவும், குடும்பம் சந்தோஷமாகத் திகழவும், திருமண வரம் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் என்று பல்வேறு வேண்டுதல்களை அம்மனுக்கு வைக்கும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் வீரக்குமாரர்கள் தங்கள் உடலில் கத்தி போட்டு அம்மனை வரவேற்றனர்

Published:Updated:
பக்தர்கள்
சேலம், குகை மாரியம்மன், ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஒவ்வொரு தை மாதம் முதல் நாளில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ஐம்பதாம் ஆண்டுப் பொன்விழா நடைபெற்றது.

நேற்று அதிகாலை முதல் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, அஸ்வகஜ பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி குபேர ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உலகம் செழிப்பாக இருக்கவும், குடும்பம் சந்தோஷமாகத் திகழவும், திருமண வரம் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் அம்மனிடம் பல்வேறு வேண்டுதல்களை வைக்கும் பக்தர்களின் வேண்டுதலை வைக்கிறார்கள். அந்த வேண்டுதல்களை நிறைவேற்றியதற்கு நன்றி கூறும் விதமாக வீரக்குமாரர்கள் தங்கள் உடலில் கத்தி போட்டு அம்மனை வரவேற்றனர்.

இந்தக் கத்தி போடுதல் என்பது தன்னுடைய உடம்பில் கத்தியால் குத்திக் காயங்களை ஏற்படுத்தும் நேர்த்திக்கடனாகும். ராமலிங்க செளடேஸ்வரி அம்மனுக்கு, தேவாங்கர் இனத்தினைச் சேர்ந்தவர்கள் இந்த நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள். கத்தி போடுதலின்போது ஆடல், பாடலுடன் மார்பிலும், கையிலும், கத்தியால் காயத்தினை ஏற்படுத்தி ’வேசுகோ தீசுகோ’ என கோஷங்கள் எழுப்பியவாறு, மார்பில் கத்தி போட்டு அம்மனை அழைத்தனர். கத்தி போடுதலின் போது ஏற்படும் காயங்களுக்கு பண்டாரம் எனப்படும் மஞ்சள் மட்டுமே பூசப்படுகிறது.

சேலம் சௌடேஸ்வரி அம்மன்
சேலம் சௌடேஸ்வரி அம்மன்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கத்தி போடும் வீரக்குமாரர்கள் சேலம் செவ்வாய்பேட்டை கரி மார்கெட் பகுதியில் அம்மனை அழைத்து உடலில் கத்திப் போட்டுக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். இந்த ஊர்வலத்தின்போது சிவன் பெருமாள், அம்மன், ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வரூபங்களை தத்ரூபமாக வேடம் தரித்து ஆடி, பாடிச் சென்றனர் பக்தர்கள். இது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

இந்த அம்மன் திருவிழா வருகின்ற 18 - ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மூன்று நாளும் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.