Published:Updated:

வீரப்பூர்: கன்னிமாரம்மன் திருத்தேரோட்டம்; லட்சக்கணக்கில் கூடிய பக்தர்கள்!

வெள்ளை யானையில் வலம் வந்த கன்னிமாரம்மன்

மாசி மாதம் சதய நட்சத்திரத்தன்று கொடியேற்றப்பட்டு, தொடர்ந்து 10 நாள்கள் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும்.

வீரப்பூர்: கன்னிமாரம்மன் திருத்தேரோட்டம்; லட்சக்கணக்கில் கூடிய பக்தர்கள்!

மாசி மாதம் சதய நட்சத்திரத்தன்று கொடியேற்றப்பட்டு, தொடர்ந்து 10 நாள்கள் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும்.

Published:Updated:
வெள்ளை யானையில் வலம் வந்த கன்னிமாரம்மன்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் புகழ்பெற்ற கன்னிமாரம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் நடைபெறும் மாசிப் பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. மாசி மாதம் சதய நட்சத்திரத்தன்று கொடியேற்றப்பட்டு, தொடர்ந்து 10 நாள்கள் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டு திருவிழா மார்ச் 2-ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கி, வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கன்னிமாரம்மன் திருத்தேரோட்டம்
கன்னிமாரம்மன் திருத்தேரோட்டம்

அந்தவகையில் திருவிழாவின் 8-வது நாளான நேற்று, பொன்னர் குதிரை வாகனத்தில் சென்று அம்பு போடும் ‘வேடுபறி வைபவம்’ நடைபெற்றது. அப்போது வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயிலில் யானை வாகனத்தின் மீது அருள்மிகு பெரியகாண்டியம்மன் வர, வெண்பட்டு உடுத்தி பொன்னர் குதிரை வாகனத்தில் கையில் அம்பு ஏந்தியபடி, அணியாப்பூர் குதிரை கோயிலுக்கு அம்பு போடச் சென்றார். அம்பு போடும் இடம் வரை வழியெங்கும் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், பெரியகாண்டியம்மன் மீதும், பொன்னர் மீதும் பூக்களைத் தூவி அருள் பெற்றனர்.

கன்னிமாரம்மன் திருத்தேரோட்டத்திற்கு வந்த பக்தர்கள்
கன்னிமாரம்மன் திருத்தேரோட்டத்திற்கு வந்த பக்தர்கள்

அதனையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பெரியகாண்டியம்மன் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற பின்னர், கோயில் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் பெரியகாண்டியம்மன் வீதி உலா சென்றார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்தத் திருவிழாவைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை மாலை மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவுறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism