காஞ்சிபுரம், கோனேரிக்குப்பம், அப்பாராவ் தெருவில் உள்ளடங்கிய ஒரு பகுதியில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்.கமலாட்சன், தாரகாசுரன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களையும் சம்ஹாரம் செய்த ஈஸ்வரன், இங்கு வீரட்டானேஸ்வரர் என்ற பெயரில் கோயில்கொண்டுள்ளார்.

`1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இக்கோயில்' என்கிறார்கள் சிலர். `ராவணன் வழிபட்ட ஆலயம் இது. ஆகவே, கால அளவைக் கணக்கிட முடியாது' என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். சாக்கிய நாயனார் வழிபட்ட தலம் என்பது கூடுதல் சிறப்பு.

இத்தகு சிறப்புகள்கொண்ட இந்த ஆலயத் தில் உழவாரப் பணி செய்வோம் என்று சென்ற இதழில் வெளியான அறிவிப்பைப் பார்த்துவிட்டு, ஏராளமான வாசகர்கள் ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டனர். சங்கரன்பாடி, ராணிப்பேட்டை, வாலாஜா, முசரவாக்கம், தூசிமாமண்டூர் எனப் பல பகுதிகளிலிருந்து சிவனடியார்களும் திரளாக வந்திருந்தார்கள்.

நிறைந்த பெளர்ணமி தினமான அக்டோபர் 13 - ஞாயிறு அன்று காலையில் 7 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2 மணி வரையிலும் நீண்டது உழவாரப் பணி. கடும் அர்ப்பணிப்போடு பணி செய்தார்கள் அடியார்களும் வாசகர்களும். வெயில் சுட்டெரித்தாலும் ஆறு வயது சிறுவர்கள் தொடங்கி 70 வயது பெரியவர்கள் வரை சுறுசுறுப் பாக உழவாரப் பணியை மேற்கொண்டார்கள்.

காலையில் பார்க்கும்போது... `இவ்வளவையும் சுத்தம் செய்வது சாத்தியம்தானா' என்று நம்மை மலைக்கவைத்த அடர்ந்துநிறைந்த புதர்களும் குப்பைகளும் ஆறே மணி நேரத்தில் காணாமல் போயின என்றால், அது இவர்களின் கடுமையான உழைப்பால் விளைந்தது எனலாம்.

கொதிக்கும் வெயிலில் பாதங்கள் புண்ணாக, முட்கள் கீறி கைகள் சிவக்க, சுமைகளைச் சுமந்து கழுத்தும் தோளும் வலித்த நிலையிலும் உற்சாகமாக ஐந்தெழுத்து நாமாவைச் சொல்லிக்கொண்டும் பதிகங்கள் பாடிக்கொண்டும் தொடர்ந்து பணியாற்றினார்கள்.

வளாகத்தில் இடிபாடுகளின் சிதிலங்களாகக் குவிக்கப்பட்டிருந்த கற்குவியலுக்கு நடுவில், பல்லவர் காலத்து சிவனார் சிற்பம் ஒன்று தென்பட, சிலிர்த்துப்போனார்கள் வாசகர்கள். பயபக்தியோடு அந்தச் சிற்பத் திருமேனியை எடுத்துச் சுத்தம் செய்து வழிபட்டார்கள். சிந்தை முழுக்க சிவமே நிறைந்திருக்க, திருமேனியை வியர்வை நனைக்க, எடுத்துக்கொண்ட திருப்பணியை விரைவாகச்செய்து முடித்த அடியார்கள் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள்.

ஜெயமணி அம்மா, தனபால் ஐயா, ராம்குமார் ஐயா, முத்து ஐயா போன்ற வாசகர்கள் அடியார்களுக்கு நிகராகச் சுற்றிச்சுழன்று பணியாற்றினார்கள். வயதில் மூத்தவரான வாசகி தேவியம்மா உடல்நிலை சரியில்லாத நிலையிலும் வந்திருந்து திருப்பணி செய்தது, அனைவரையும் நெகிழவைத்தது.பெங்களூரிலிருந்து தத்தகுரு என்ற வாசகர் தன் குடும்பத்தினருடன் வந்து திருப்பணியில் கலந்துகொண்டார்.

வாசகர் ஒவ்வொருவரும் திருப்பணியில் கலந்து கொண்ட அடியார்களுக்குத் தாங்கள் ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம் என்று கேட்டபடியே இருந்தார்கள். அடியார்களோ `எதுவுமே வேண்டாம்' என்று புன்னகையோடு மறுத்தபடியே இருந்தார்கள். இறைப்பணி இப்படியானதுதான்; எதையும் எதிர்பார்க்காதது!

குறிப்பாக, புண்ணிய புருஷர்கள் தொடரில் இடம்பெற்ற அடியார்கள் ஆறு பேரும் இந்த உழவாரப் பணியில் கலந்துகொள்ள, அவர் களை நேரில் சந்தித்து அளவளாவியதில் பூரித்துபோனார்கள் வாசகர்கள். இந்தப் பணியில் இளைஞர்களும் பெருமளவில் கலந்து கொண்டதைக் கண்டு பெருமிதம்கொண்டோம்.

``ஆலயங்கள் வழிபாட்டு தலங்கள் மட்டுமல்ல. அவை ஒவ்வொன்றும் நம் கலாசாரத்தின், அறத்தின், வீரத்தின், கொடையின், கலைதிறனின் அடையாளம் என்று சக்தி விகடன் இதழ்தோறும் சுட்டிக்காட்டுகிறீர்களே ஐயா... அப்படியிருக்க, இதுபோன்ற ஆலயங்கள் பாழ் படுவதைக் கண்டு நாங்கள் சும்மா இருந்துவிடமுடியுமா...'' என்று அவர்கள் சொன்னபோது நெகிழ்ந்துபோனோம்.

உழவாரத் திருப்பணி, ஒரு திருவிழாவைப் போன்று நடைபெற்றதைக் கண்டு உள்ளூர் மக்களும் வியந்துபோனார்கள்.காலையில் வந்ததும் கேழ்வரகு லட்டு, காலை உணவாக அரிசி, தானியங்கள் கலந்து செய்த கஞ்சியும் ஊறுகாயும், நண்பகலில் மோர்... என்று வந்தவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. மதியம் விரிவான உணவு வகை களோடு கல்யாண விருந்தே வழங்கப்பட்டது. தொடர்ந்து சரவணன் ஐயாவின் சைவ சித்தாந்த விளக்கவுரை, இத்தலம் மற்றும் சாக்கிய நாயனாரின் மகிமை குறித்த ஆலய குருக்கள் சதீஷ்குமாரின் பேச்சு என அற்புதமாக நகர்ந்தது பொழுது.

நிறைவில் வீரட்டானேஸ்வரருக்கான சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தரிசித்த சிலிர்ப்போடும் நிறைவோடும் அனைவரும் விடை பெற்றார்கள்.

உழவாரம் உன்னதமானது. அதைவிடவும் சிறப்பான விஷயம், குறிப்பிட்ட ஆலயம் தொடர்ந்து சிறப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும். ``நிச்சயம் செய்வோம்'' என்று அப்பகுதி மக்கள் உறுதிகூற மனநிறைவோடு நாமும் விடைபெற்றுக் கொண்டோம்.