Published:Updated:

உயிர்மூச்சு முதல் திருவாரூர் ஈசன் வரை...சொல்லப்படாத ரகசியம்! - அதிகாலை சுபவேளை!

திருவாரூர் தேர் விழா!
திருவாரூர் தேர் விழா!

உயிர்மூச்சு முதல் திருவாரூர் ஈசன் வரை...சொல்லப்படாத ரகசியம்! - அதிகாலை சுபவேளை!

இன்றைய பஞ்சாங்கம்

14.6. 21 வைகாசி 31 திங்கள்கிழமை

திதி: சதுர்த்தி இரவு 8.37 வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம்: பூசம் இரவு 7.05 வரை பிறகு ஆயில்யம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 முதல் 9 வரை

எமகண்டம்: காலை 10.30 முதல் 12 வரை

நல்லநேரம்: காலை 6.30 முதல் 7.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை

விநாயகர்
விநாயகர்

சந்திராஷ்டமம்: மூலம் இரவு 7.05 வரை பிறகு பூராடம்

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்

இன்று: சதுர்த்தி விரதம்.

உயிர்மூச்சு முதல் திருவாரூர் ஈசன் வரை...சொல்லப்படாத ரகசியம்!

நம் மூச்சை சொல்லப்படாத ரகசியம் என்று சொல்வார்கள். அதாவது மூச்சை உள்ளிழுத்து நுரையீரலில் நிறைத்துப் பின் வெளியேவிடும் செயலே மூச்சுவிடுதல் ஆகும். இதற்கு அஜபா என்று பெயர். ஜபா என்றால் ஜபம். அதாவது சொல்லப்படும் மந்திரம். அஜபா என்றால் சொல்லப்படாத மந்திரம் என்று பொருள்படும். பொதுவாக மந்திரங்கள் என்பது ஆசாரியன் மூலம் உபதேசம் கேட்டுப் பின் உச்சாடனம் செய்வதற்குப் பெயர் ஜபம் என்றால் அந்தப் பெருமானே உயிர்கள் அனைத்துக்கும் உபதேசம் செய்து வைத்திருக்கும் மந்திரமே மூச்சு. நம் மூச்சுக்காற்றுக்கும் திருவாரூர் தியாகேசப் பெருமானுக்கும் தொடர்பு உண்டு என்கின்றன ஞான நூல்கள். அது என்ன தொடர்பு? சொல்லப்படாத ரகசியத்தின் மகிமை என்ன என்பன குறித்த கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ளக் கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

மகிழ்ச்சி : குடும்பத்தில் ஏற்பட்டிருந்த வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும் நாள். அனைவரும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். - என்ஜாய் தி டே

ரிஷபம்

தாமதம் : செயல்கள் சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகு அனுகூலமாகும். நண்பர்களிடம் கேட்டிருந்த உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். - தாமதமாகலாம் ஆனால் தவிர்க்கப்படாது!

மிதுனம்

உற்சாகம் : காலை முதலே உற்சாகம் அதிகரிக்கும். உங்கள் பொறுப்புகளை விரைந்துமுடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கண்டிப்புக் காட்ட வேண்டாம். - ஆல் தி பெஸ்ட்!

கடகம்

குழப்பம் : தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் நாள். உறவினர்களால் சிக்கல்கள் உண்டாகும். சொல்லிலும் செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

சிம்மம்

அனுகூலம் : புதிய முயற்சிகள் சாதகமாகும். செயல்களும் அனுகூலமாக முடியும். என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது நல்லது. - டேக் கேர் ப்ளீஸ்!

கன்னி

வரவு : பணவரவு ஏற்படும் நாள். கொடுத்துத் திரும்ப வராது என்று நினைத்திருந்த தொகை கைக்குவரும். நண்பர்கள் உங்களை உற்சாகப் படுத்துவார்கள். - ஜாலி டே!

துலாம்

துணிவு : முயற்சிகள் அனைத்தும் சாதகமாகும். எதிர்பாராத பணவரவும் ஏற்படும். சில முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். அதனால் நன்மையே உண்டாகும். - துணிவே துணை!

விருச்சிகம்

நற்செய்தி : செயல்களில் அதிக கவனம் கொள்ள வேண்டிய நாள். அக்கம்பக்கத்தில் சில சங்கடங்கள் ஏற்படலாம். பிற்பகலுக்கு மேல் நல்ல செய்திகள் வந்து சேரும். - ஆல் இஸ் வெல்!

தனுசு:

கவனம் : இன்று சிந்தித்துச் செயல்படுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களும் அதனால் அவப் பெயரும் ஏற்படலாம். பேச்சில் கவனம் தேவை. இறைவழிபாடு அவசியம். - நா காக்க!

மகரம்

ஆதரவு : முயற்சிகளுக்குக் குடும்பத்தினரின் ஆதரவு பூரணமாகக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்திருக்கும். செலவுகளில் கவனம் தேவை - நாள் நல்ல நாள்!

கும்பம்

பிரச்னை : சிறு சிறு பிரச்னைகள் உண்டாகி மறையும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களோடு பேசும்போது கவனம் தேவை. விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. - நோ ஆர்கியுமென்ட்ஸ் ப்ளீஸ்!

மீனம்

அலைச்சல் : பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றச் சிறிது அலைச்சலை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அவசரப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

அடுத்த கட்டுரைக்கு