Published:Updated:

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தாழம்பூ குங்குமத்தில் அப்படி என்ன விசேஷம்?

மதுரை மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தாழம்பூ குங்குமத்தில் அப்படி என்ன விசேஷம்?

இன்றைய பஞ்சாங்கம்

21.6. 21 ஆனி 7 திங்கள்கிழமை

திதி: ஏகாதசி பகல் 10.23 வரை பிறகு துவாதசி

நட்சத்திரம்: சுவாதி பகல் 1.12 வரை பிறகு விசாகம்

யோகம்: அமிர்தயோகம் பகல் 1.12 வரை பிறகு மரணயோகம்

ராகுகாலம்: காலை 7.30 முதல் 9 வரை

எமகண்டம்: காலை 10.30 முதல் 12 வரை

நல்லநேரம்: காலை 6.30 முதல் 7.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை

மகாவிஷ்ணு
மகாவிஷ்ணு

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி பகல் 1.12 வரை பிறகு ரேவதி

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தாழம்பூ குங்குமத்தில் அப்படி என்ன விசேஷம்?

குங்குமம் நம் மரபில் மங்கலச் சின்னத்தின் அடையாளமாகக் கருதப்படுவது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அணிந்துகொள்ள விரும்புவார்கள். அதுவும் கோயில்களில் அம்மன் சந்நிதியில் தரும் குங்குமம் என்றால் இன்னும் விசேஷமே. திருநீறு அணிபவர்களும் குங்குமம் அணிந்து கொண்டால் செயல்கள் அனைத்தும் வெற்றியாகும் என்கின்றன ஞானநூல்கள். குங்குமங்களில் பலதரப்பட்ட குங்குமங்கள் காணப்பட்டாலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சென்னை காளிகாம்பாள் கோயில் ஆகியவற்றில் வழங்கப்படும் தாழம்பூ குங்குமம் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. பக்தர்கள் அந்தக் குங்குமத்தை வைத்துக்கொண்டாலும் வீட்டுக்கு எடுத்துச் சென்றாலும் விசேஷம் என்கிறார்கள். தாழம்பூ குங்குமத்தில் அப்படியென்ன விசேஷம் என்னும் கேள்விக்கான விடையை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

நன்மை : வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்தில் முக்கியமான விஷயம் ஒன்றைப்பேசி முடிவெடுப்பீர்கள். நன்மைகள் அதிக அளவில் நடைபெறும். - நாள் நல்ல நாள்!

ரிஷபம்

உற்சாகம் : மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும். புதிய உற்சாகம் பிறக்கும். குடும்பத்தினர் உங்களை ஊக்கப்படுத்துவார்கள். இறைவழிபாட்டில் மனம் செல்லும். - இனி எல்லாம் சுபமே!

மிதுனம்

நம்பிக்கை : நம்பிக்கையோடு செயல்படுவீர்கள். ஓய்வு குறைவாகவும் உழைப்பு அதிகமாகவும் இருக்கும். உறவுகளால் நன்மைகள் உண்டாகும். - நம்பிக்கையே வாழ்க்கை!

கடகம்

வரவு : செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்பப் பணவரவும் வாய்க்கும். உறவினர்களால் செலவு ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிக்கனம் தேவை. - வரவுக்கேற்ற செலவு!

சிம்மம்

நிதானம் : அனைத்தும் அனுகூலமாக இருந்தாலும் செயல்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உறவினர்களிடம் பேசும்போது பொறுமையை அவசியம். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

கன்னி

முயற்சி : நேற்றுவரையிருந்த சோர்வுகள் விலகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சகோதர வகையில் நல்ல பலன்கள் உண்டாகும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்துப் போங்கள். - ஆல் தி பெஸ்ட்!

துலாம்

மகிழ்ச்சி : குடும்ப உறுப்பினர்கள் பாசமழை பொழிவார்கள். சில பிரச்னைகள் தோன்றினாலும் சமாளித்துவிடுவீர்கள். புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

விருச்சிகம்

பொறுமை : சொல்லிலும் செயலிலும் பொறுமை தேவைப்படும் நாள். பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. உடல் நலனிலும் அக்கறை தேவை. - கேர் ஃபுல் ப்ளீஸ்!

தனுசு:

அனுகூலம் : காலைமுதலே சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். மனதில் நம்பிக்கையும் உறுதியும் அதிகரிக்கும். நீண்டநாள்களாக இழுபறியாக இருந்த செயல் இன்று அனுகூலமாகும். - ஆல் இஸ் வெல்!

மகரம்

கவனம் : அனைத்து செயல்களிலும் இன்று கவனம் தேவை. முடிந்தவரை சிக்கனம் தேவை. உணவு விஷயங்களிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது நல்லது. - டேக் கேர் ப்ளீஸ்!

கும்பம்

கலகலப்பு : இன்று வீட்டில் உங்களால் மகிழ்ச்சியும் கலகலப்பும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்களும் வெற்றிகரமாக முடியும். யாரோடும் வம்புக்குப் போக வேண்டாம். - என்ஜாய் தி டே!

மீனம்

பிரச்னை : சிலருக்குத் தேவையற்ற அவப்பெயரும் பிரச்னைகளும் ஏற்படலாம். வார்த்தைகளில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்குவதைத் தவிருங்கள். - இதுவும் கடந்துபோகும்!

அடுத்த கட்டுரைக்கு