Published:Updated:

திருவட்டாறு பெருமாளுக்கு ஆதிகேசவர் எனப் பெயர் வரக் காரணம் இதுதான்!

அலங்காரத்தில் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில்

பிரம்மாவின் நாக்கை பிறழச் செய்து மந்திரத்தை மாற்றி உச்சரிக்கும்படி செய்தார் சரஸ்வதி தேவி. மந்திரம் தவறாகக் கூறப்பட்டதால் எரிந்துகொண்டிருந்த அக்னி குண்டம் புகை மண்டலமாக மாறியது.

திருவட்டாறு பெருமாளுக்கு ஆதிகேசவர் எனப் பெயர் வரக் காரணம் இதுதான்!

பிரம்மாவின் நாக்கை பிறழச் செய்து மந்திரத்தை மாற்றி உச்சரிக்கும்படி செய்தார் சரஸ்வதி தேவி. மந்திரம் தவறாகக் கூறப்பட்டதால் எரிந்துகொண்டிருந்த அக்னி குண்டம் புகை மண்டலமாக மாறியது.

Published:Updated:
அலங்காரத்தில் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 6-ம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. 418 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.

கும்பாபிஷேக விழாவின்போது தமிழக, கேரள பக்தர்கள் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு வருகைதர உள்ளனர். இன்று கோயில் கொடிமரத்துக்குத் தங்க கவசம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் யாகசாலை, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் ஆகிய திருத்தலங்களுக்கு முந்தைய பழைமையான கோயில் திருவட்டாறு. திருவட்டாறில் 22 அடி நீளத்தில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளுக்கு, 'ஆதிகேசவர்' எனப் பெயர் வந்ததற்கு புராண கால நிகழ்வு ஒன்று கூறப்படுகிறது.

கோயிலுக்குள் அலங்காரம்
கோயிலுக்குள் அலங்காரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரம்மா ஒரு யாகம் செய்யப்போவதாக மகா விஷ்ணுவிடம் கூறினார். அப்போது யாகம் செய்தால் அது கெட்ட விளைவை ஏற்படுத்தும் என்று உணர்ந்த மகாவிஷ்ணு யாகம் நடத்த வேண்டாம் என்று தெரிவித்தார். விஷ்ணு பேச்சை மீறி முனிவர்களை அழைத்து பிரம்மா யாகத்தைத் தொடங்கிவிட்டார். யாக குண்டத்தில் நெருப்பு மூட்டப்பட்டுவிட்டது. அப்போது வாக்குக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை அழைத்த மகா விஷ்ணு, 'பிரம்மாவின் மந்திரத்தை மாற்றி யாகத்தை நிறுத்து' என்று உத்தரவிட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரம்மாவின் நாக்கை பிறழச் செய்து மந்திரத்தை மாற்றி உச்சரிக்கும்படி செய்தார் சரஸ்வதி தேவி. மந்திரம் தவறாகக் கூறப்பட்டதால் எரிந்துகொண்டிருந்த அக்னி குண்டம் புகை மண்டலமாக மாறியது. அதிலிருந்து கேசன், கேசி என்ற அசுரர்கள் தோன்றினர். அவர்கள் பெரும் அட்டகாசம் செய்யத் தொடங்கினர். சிவ பக்தர்களான அவர்களை அமைதியாக இருக்கும்படி பிரம்மா வேண்டினார். யாகசாலையில் அட்டகாசத்தை நிறுத்த வேண்டும் என்றால் சாகா வரம் வேண்டும் என்று கேசனும், கேசியும் கேட்டனர்.

திருவட்டாறு ஶ்ரீஆதிகேசவ பெருமாள்
திருவட்டாறு ஶ்ரீஆதிகேசவ பெருமாள்

முதலில் தயங்கிய பிரம்மா, பின்னர் சாகா வரம் கொடுத்தார். இதனால் மகேந்திரகிரி மலையில் குகைக்குள் சென்று இருந்த கேசன் அடிக்கடி தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தார். தேவர்களால் அந்த அசுரனை எதிர்கொள்ள முடியாததால் மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். மகாவிஷ்ணு கேசனுக்கு எதிராக ஏழு ஆண்டுகள் யுத்தம் செய்தார். சாகாவரம் பெற்ற கேசனை அழிக்க முடியவில்லை. இதுதியில் விஸ்வரூபம் எடுத்தார் மஹாவிஷ்ணு. விஸ்வரூபத்தைப் பார்த்து கேசன் மயங்கி விழுந்தான். தான் பள்ளிகொள்ளும் பாம்பணையான ஆதிசேஷனிடம், கேசனைக் கட்டும்படி கூறினார் மகாவிஷ்ணு. மயங்கிக்கிடந்த கேசனை ஆதிசேஷன் பாம்பு சுற்றிக் கட்டியது. சற்றும் தாமதியாமல் ஆதிசேஷன் மீது பெருமாள் பள்ளிகொண்டுவிட்டார்.

மயக்கம் தெளிந்த கேசன் பன்னிரண்டு கைகளை வெளியே நீட்டித் தொல்லைகள் செய்தான். சிவ பக்தனான கேசனின் கைகளில் 12 சிவ லிங்கங்களைக் கொடுத்தார் மஹாவிஷ்ணு. இதனால் 'ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தைக் கூறியபடி அடங்கிக் கிடக்கிறார் கேசன். சாகாவரம் பெற்று அட்டகாசம் செய்த கேசனை அடக்கிய திருத்தலம் திருவட்டாறு என்றும். கேசனை அடக்கிய பெருமாளுக்கு 'ஆதி கேசவன்' எனப் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

ஆதிகேசவ பெருமாள் கோயில்
ஆதிகேசவ பெருமாள் கோயில்

ஆதிசேஷ சர்ப்பத்தின் மீது புஜங்க சயனத்தில், யோக முத்திரையில் மேற்கு நோக்கிப் பள்ளிகொண்டிருக்கிறார் ஆதிகேசவ பெருமாள். மனிதர்களுக்குள் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்ற கேசனை அடக்கி நல்வழியும், நல் வளமும் அருளும் ஆதிகேசவரை நாமும் வணங்குவோம்.