Published:Updated:

`351 அடி உயரம்... 2,500 டன் ஸ்டீல்...!’ - இறுதிக்கட்டத்தில் உலகிலேயே உயரமான சிவன் சிலை

ராஜஸ்தானில் 351 அடி உயரத்தில் 2,500 டன் ஸ்டீல் கொண்டு உலகின் மிக உயரமான பிரமாண்ட சிவன் சிலை தயாராகி வருகிறது.

சிவன் சிலை
சிவன் சிலை ( Twitter\Statue of Belief )

ராஜஸ்தான் மாநிலம் நாதட்வாராவில் உலகின் மிகப் பெரிய சிவன் சிலை உருவாகி வருகிறது. 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்றைய ராஜஸ்தான் முதலமைச்சர் முன்னிலையில் தொடங்கப்பட்ட இந்தச் சிலையின் பணி இந்த வருடம் முடிவடைய உள்ளது.

சிலை
சிலை
Twitter\Statue of Belief

இச்சிலையை கூர்கானைச் சேர்ந்த நரேஷ் குமார் குமாவட் என்ற பிரபல சிலை வடிவமைப்பாளரின் குழு உருவாக்கி வருகிறது.

இது குறித்து நரேஷ் குமார் குமாவட் பேசுகையில், ``ராஜஸ்தானில் உள்ள நதட்வாரா என்ற பகுதியில் இச்சிலையைத் தற்போது உருவாக்கி வருகிறோம். 351 அடி உயரத்தில் 2,500 டன் ஸ்டீல் கொண்டு இச்சிலை தயாராகி வருகிறது. இது 35 மாடிக் கட்டடத்துக்கு இணையானது. சிவன் உருவத்தின் தோள் பகுதி வரையிலான உயரம் மட்டுமே 260 அடி.

சிவபெருமான் சிலை
சிவபெருமான் சிலை
Twitter\Statue of Belief

20 அடி உயரத்தில் 3 பார்வை மாடங்கள், லிஃப்ட் எனப் பல கட்டுமான வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இச்சிலையானது மிகவும் அமைதியான மற்றும் மகிழ்வான முகபாவம் கொண்ட சிவன் சிலையாக உருவாகி வருகிறது.

சிலை
சிலை
Twitter\Statue of Belief

நான் மட்டுமல்லாமல் 750 பணியாளர்கள் மிகவும் சிரத்தையுடன் இச்சிலையை உருவாக்கி வருகிறோம்.

இச்சிலைக்கு `statue of belief', அதாவது `நம்பிக்கைச் சிலை' எனப் பெயரிடப்பட்டுள்ளது" என்றார். இங்கு சிவனுக்கு முன்பாக 35 அடி அகலமும் மற்றும் 27 அடி நீளமும் கொண்ட மிகப் பெரிய நந்தி சிலை ஒன்றும் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்த சிவன் சிலையானது 20 கிலோமீட்டர் தூரத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

சிவன் சிலை
சிவன் சிலை
Twitter\Statue of Belief

`மாட்ராம் ஆர்ட்' என்ற பெயரில் கூர்கானில் தன்னுடைய நிறுவனத்தை நிறுவியுள்ள நரேஷ் குமார் குமாவட், இதற்கு முன்பு மொரீஸியஸில் 108 அடியில் சிவன் சிலையையும் கனடாவில் 51 அடியில் ஆஞ்சநேயர் சிலையையும் உருவாக்கியுள்ளார். இதற்காக இவர் மொரீசியஸ் மற்றும் கனடா நாட்டு பிரதமர்களிடம் விருதும் பெற்றுள்ளார்.

பாரம்பர்யத் தொழில்நுட்பத்துடன் நவீனத் தொழில்நுட்பத்தைக் கலப்பதில் ஆர்வம் கொண்டுள்ள இவர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 100-க்கும் மேற்பட்ட சிலைகளை வடிவமைத்துள்ளார்.

கடவுள்களின் சிலைகளை வடிவமைப்பது மட்டுமல்லாமல் தேசத் தியாகிகளின் நினைவுநாள் அல்லது பிறந்தநாளின்போது அவர்களின் உருவச் சிற்பங்களைச் செதுக்கி அவர்களை நினைவு கூர்கிறார்.

சிலை
சிலை
Twitter\Statue of Belief

குஜராத்தில் உள்ள ஒற்றுமைக்கான சிலை, சீனாவின் புத்தர் சிலை, மியான்மரின் லேகுன் செக்யா இவற்றைத் தொடர்ந்து அடுத்து உலகின் மிகப் பெரிய சிலையாக ராஜஸ்தான் சிவன் சிலை இருக்கும் எனக் கூறப்படுகிறது.