Published:Updated:

அம்பிகையைக் கொண்டாடுவோம்!

அம்பிகை
பிரீமியம் ஸ்டோரி
News
அம்பிகை

தொகுப்பு: நமசிவாயம்

உறையூரில் தில்லைக்காளி!

திருச்சி- உறையூர் சாலை ரோட்டில் அமைந்துள்ளது ஸ்ரீகுங்குமவல்லி சமேத ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயம். காந்திமதி எனும் சிவபக்தை கர்ப்பிணியாக இருந்த வேளையில், ஸ்ரீதாயுமான ஸ்வாமி (ஈஸ்வரன்) சிவலிங்க வடிவமாகக் காட்சி கொடுத்து அவளுக்கு அருள்பாலித்து ரட்சித்த இடத்தில் கோயில் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

கர்ப்பிணிகளும் திருமணமான பெண்களும் இங்கு வந்து வழிபட்டால், சுகப்பிரசவம் நிகழும்; மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்கும் என்பது ஐதிகம். தில்லையில் குடிகொண்டுள்ள ஸ்ரீகாளி, இங்கே தில்லைக்காளியாக அருள்பாலிக்கிறாள். அமாவாசை நாளில், தில்லைக் காளிக்கு 108 திரவியங்களால் அபிஷேகமும் விசேஷ யாகமும் நடைபெறும்.

இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு அம்மனை வேண்டிக்கொண்டால், எதிரிகள் தொல்லை ஒழியும்.

தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; வழக்கில் வெற்றி கிடைக்கும்; சகோதரச் சண்டைகள் தீரும்; தீயசக்திகள் விலகி ஓடும்; கடன் தொல்லை யில் இருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அம்பிகையைக் கொண்டாடுவோம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஊஞ்சல் உற்சவம் கண்டால்...

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மேல்மலையனூர் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம். இந்த அங்காள பரமேஸ்வரி அம்மன், புற்று மண்ணால் சுயம்புவாக உருவானவள். நான்கு திருக்கரங்களுடன், இடக் காலை மடித்து, வலக் காலைத் தொங்கவிட்டபடி, பிரம்ம கபாலத்தை மிதித்தபடி, வடக்கு நோக்கி அருள்காட்சி தருகிறாள்.

அம்மனுக்கு அருகிலேயே மிகப் பெரிய புற்றும் காணப்படுகிறது. புற்று வடிவில் தோன்றியதால், அம்மனுக்கு ‘புற்று தேவி’ என்றும் பெயர் உண்டு. `தண்டேஸ்வரி’ என்ற திருப்பெயரும் உண்டு. இந்தக் கோயிலில், பூஜை நடைபெறும்போது புற்று மண்ணைத் தண்ணீரில் கலந்து பக்தர்களுக்குக் கொடுக்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தை அருந்தினால் புத்திர பாக்கியம் கிடைக்கும், நோய்கள் விலகும் என்பது நம்பிக்கை.

அம்பிகையைக் கொண்டாடுவோம்!

தொடர்ந்து மூன்று அமாவாசை தினங்கள் மேல்மலையனூர் கோயிலுக்குச் சென்று, ‘ஊஞ்சல் உற்சவம்’ விழாவைக் கண்டால் குழந்தைப் பேறு, திருமணப் பேறு உள்ளிட்ட அனைத்துவிதமான பேறுகளும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

பார்வை தந்தாள் புன்னைநல்லூர் மாரி!

தஞ்சைப் பகுதியைத் துளஜ ராஜா ஆட்சிசெய்த காலம். அவரின் மகளுக்கு அம்மை நோய் கண்டு, கண் பார்வை குறையத் தொடங்கியது. இதனால், கடுந்துயரில் மூழ்கினார் மன்னர். செய்வதறியாமல் தவித்த மன்னரின் கனவில் ஓர் அந்தணச் சிறுமியாகத் தோன்றினாள் மாரி.

அம்பிகையைக் கொண்டாடுவோம்!

‘‘துளஜ மன்னா! புன்னைநல்லூரில் இருக்கும் என் சந்நிதியை உன் மகளுடன் வந்து தரிசனம் செய். உன் மனத்துயர் தீரும்!’’ என்று அருளினாள். மன்னர், மறுநாளே மகளுடன் மாரியம்மன் சந்நிதிக்கு விரைந்தார். உள்ளம் உருகத் துதித்து வேண்டினார். குருக்கள் தீபாராதனை காட்டிக் கொண்டிருந்த நேரம், மன்னர் மகளின் கண்களில் இருந்து ஏதோ கருகிப் போய்க் கீழே விழுந்தது. அதே நொடியில், ‘‘அப்பா... கண் தெரிகிறது! கண் தெரிகிறது!’’ என மகிழ்ச்சியில் கூக்குரலிட்டாள் அவள்.

சந்தோஷத்தில் சின்னக் குழந்தை போலத் துள்ளிக் குதித்தார் மன்னர். அம்மனின் அருளை முழுமையாகப் புரிந்து கொண்டார். அவரின் அந்த உள்ளத்தின் வெளிப்பாடாக கூரைக் கொட்டகையை நீக்கி, அழகிய சிறு கோயில் ஒன்றைக் கட்டினார். மன்னருக்கு மேலும் ஒரு விருப்பம் இருந்தது. ‘புற்று வடிவில் அருள் புரியும் இந்த அம்பிகைக்கு, புது வடிவம் கொடுக்க வேண்டும்!’ என எண்ணினார் அவர்.

அப்போது அம்பிகையே அனுப்பி வைத்ததைப் போல, சத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சுவாமிகள் அங்கு வந்தார். அந்த மகா ஞானி, மன்னரின் விருப்பத்தை உணர்ந்து புற்று மண்ணைக் கொண்டே மகா மாரியம்மனின் திருவடிவத்தை அமைத்தார் (கி.பி.1735). அத்துடன் சத்குரு சக்கரத்தையும் பிரதிஷ்டை செய்தார். இந்த அம்மனை வழிபட்டால் நம் வாழ்வு வளமாகும்.