Published:Updated:

சித்தர்களின் பாதங்கள் புண்ணிய தீர்த்தங்கள்!

சித்தர்களின் பாதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சித்தர்களின் பாதங்கள்

மகேந்திரகிரி தரிசனம்

சித்தர்களின் பாதங்கள் புண்ணிய தீர்த்தங்கள்!

மகேந்திரகிரி தரிசனம்

Published:Updated:
சித்தர்களின் பாதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சித்தர்களின் பாதங்கள்

லைகள் மகேசனின் மறுவடிவங்களே என ஆன்றோர்கள் பலரும் போற்றுவார்கள். முனிவர்களும் சித்தபுருஷர்களும் தவத்துக்காக அடைக்கலம் புகுந்தது மலைகளின் மடியில்தான். காரணம் மலைப் பகுதிகளில் சூழ்ந்து திகழும் தெய்வ சாந்நித்தியமே!

அவ்வகையில் குடகு தொடங்கி தென் பொதிகை வரையிலுமான மேற்கு மலைத் தொடரில் உள்ள மலைத்தலங்கள் பலவும் மகிமை வாய்ந்தவை. அவற்றில் ஒன்றுதான் மகேந்திரகிரி.

சித்தர்களின் பாதங்கள் 
புண்ணிய தீர்த்தங்கள்!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகிலுள்ள ஊர் திருக்குறுங்குடி. புகழ்பெற்ற வைணவத் தலமான இவ்வூரிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது கொடுமுடி அணைக்கட்டு. ஆட்டோ மூலம் பயணித்து இந்தப் பகுதியை அதாவது மகேந்திரகிரி அடிவாரத்தை அடையலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பல அற்புதங்களைத் தன்னகத்தே கொண்ட மலை இது. சிவபெரு மானும் உமையவள் பார்வதியும் வாசம்செய்யும் அற்புத மலை என்கின்றன புராண நூல்கள்.

சித்தர்களின் பாதங்கள் 
புண்ணிய தீர்த்தங்கள்!

இம்மலையில் 18 சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்கிறார்களாம். பத்துக்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் உள்ளன. அவை: அத்தியடி தீர்த்தம், பசுபதி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், சங்கு தீர்த்தம், ரோகிணி தீர்த்தம், பார்வதி தீர்த்தம், கஜேந்திரமோட்ச தீர்த்தம், நயினார் அருவி, பாதானி தீர்த்தம், தேர்க்கல் தெப்ப தீர்த்தம், ராகவர் அருவி குகை தீர்த்தம், காளிக்கோவில் தீர்த்தம், ஆஞ்சநேயர் கோட்டை தீர்த்தம். இவையாவும் பிணி தீர்க்கும் வல்லமை பெற்றன என்கிறார்கள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் `பஞ்சவடி’ என்ற சிறப்பு மிக்க ஐந்து குழிகளை உடைய இடம் ஒன்றும் இங்கு உள்ளது. மகேந்திரகிரி மலையில் பாறைகளில் பல இடங்களில் பாதச் சுவடுகள் திகழ்வதையும் காணலாம். சுப்ரமணியர் பாதம், சிவனடியார் பாதம், பஞ்சவடி, பெரிய பாதம், அகஸ்தியர் பாதம், அம்பிகை சியாயமளாதேவி பாதம், அம்பிகை மனோன்மணி தாயார் பாதம், கிருஷ்ணர் பாதம், தாய் பாதம் என்று பாதச் சுவடுகளின் பெயர்களையும் குறிப்பிடுகிறார் கள், இப்பகுதி மக்கள்.

மொத்தத்தில் `கமன சித்தர் வந்து இங்கு காயசித்தி விளைப்பார்’ என்ற குற்றாலக் குறவஞ்சியின் பாடலுக்குச் சான்றாகத் திகழும் மலைப்பகுதி இது.

சித்தர்களின் பாதங்கள் 
புண்ணிய தீர்த்தங்கள்!

தற்போது, இந்த மலைக்குச் செல்ல வனத் துறையின் அனுமதி கிடையாது; தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆன்மிகப் பெருமக்கள் பலரும் இந்த மலை தீரத்தில் தவம் புரிந்துள்ளனர். வனத் துறையின் தடையை மீறிச் செல்வோருக்கு அபராதமும், சிறைத் தண்டனையும் உண்டு.

எனவே கொடிமுடி ஆறு அணைக்கட்டு அருகில் உள்ள சாதுக்கள் பீடத்தையும், சாதசிவ நிலையத்தையும் பக்தர்கள் தரிசித்து வரலாம். இந்த இடத்திலுள்ள அத்தியடி விநாயகர், சப்தகன்னிகள் போன்ற தெய்வங் களை வணங்குவது சிறப்பு. பௌர்ணமிகளில் அத்தியடியில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

சித்தர்களின் பாதங்கள் 
புண்ணிய தீர்த்தங்கள்!

ஆனையடி தம்பிரான் வாழ்ந்து பிரதிஷ்டை செய்த சதாசிவம் கோயிலை, அணை கட்டும் பணியின்போது இடிக்க முயற்சி செய்தும் இயலவில்லையாம். இங்கு மூலவர் உள்ள இடத்தில் அபூர்வ ஓலைச்சுவடிகள் அடங்கிய பெட்டி வைத்து வணங்கப்படுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism