Published:Updated:

மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழா வைரத்தேரோட்டம் - சிறப்புகள் என்னென்ன?

திருப்பரங்குன்றம் வைரத் தேரோட்டம்
News
திருப்பரங்குன்றம் வைரத் தேரோட்டம்

இதில் பங்கேற்பதற்காகப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதல் பாதயாத்திரையாக திருப்பரங்குன்றம் வந்தடைந்தனர்.

Published:Updated:

மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழா வைரத்தேரோட்டம் - சிறப்புகள் என்னென்ன?

இதில் பங்கேற்பதற்காகப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதல் பாதயாத்திரையாக திருப்பரங்குன்றம் வந்தடைந்தனர்.

திருப்பரங்குன்றம் வைரத் தேரோட்டம்
News
திருப்பரங்குன்றம் வைரத் தேரோட்டம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவாகும். இந்த ஆண்டு கார்த்திகைத் திருவிழா கடந்த நவம்பர் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்கச் சப்பரத்திலும் மாலையில் தங்கமயில் வாகனம், தங்கக் குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், வெள்ளி ஆட்டுக்கடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாகப் பட்டாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

அருள் பாலிக்கும் சுப்ரமணியசுவாமி-தெய்வானை
அருள் பாலிக்கும் சுப்ரமணியசுவாமி-தெய்வானை

திருக்கார்த்திகை விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. முன்னதாக சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிறிய வைரத் தேரில் எழுந்தருளினார்.

இதில் பங்கேற்பதற்காகப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதல் பாதயாத்திரையாகத் திருப்பரங்குன்றம் வந்தடைந்தனர்.

இன்று காலை தேரோட்ட விழாவில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்தச் சிறிய தேர், பெரிய ரதவீதி, மேல ரத வீதி, கீழ ரத வீதி என ரத வீதிகளில் மட்டும் உலா வந்தது.

இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் கோயிலில் பால தீபம் ஏற்றப்பட்டு மலையின் மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காகத் திருவண்ணாமலை பகுதியிலிருந்து வல்லுநர் குழுவினர் வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

தேரோட்டம்
தேரோட்டம்

தொடர்ந்து இரவு 8 மணிக்கு 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கப்பானை கொளுத்தும் விழா நடைபெறும்.

தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளைய தினம் தீர்த்த உற்சவம் நடைபெறும்.