Published:Updated:

சமூக அந்தஸ்தை உயர்த்தப்போகும் 2021... துலாம் ராசிக்காரர்களுக்கான ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
துலாம் புத்தாண்டு ராசிபலன்கள்
துலாம் புத்தாண்டு ராசிபலன்கள்

கல்வியாளர்கள், ஆன்மிகவாதிகளின் நட்பு கிடைக்கும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடன் இருந்து வந்த கருத்து மோதல்களும் விலகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதைக் கூடும்.

மென்மையான குணமும், நீதிமானின் மனமும் கொண்ட துலா ராசிக்காரர்களே... மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்ட உங்களுக்கு 2021 எப்படிப் பட்ட ஆண்டாக இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

உங்கள் ராசிக்கு 10 வது வீட்டான கடகராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வாழ்வில் பல முன்னேற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் பேச்சுத் திறமையால் காரியங்களை முடிப்பீர்கள். கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள். நீங்கள் வாங்கியிருந்த கடனை கணிசமாக இந்த ஆண்டு திருப்பிச் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். உங்களின் ராசி அதிபதியான சுக்கிரன் சாதகமாக இருக்கும்போது 2021 ம் ஆண்டு பிறப்பதால் பெற்றோரின் ஆதரவுப் பெருகும். சொத்துப் பிரச்னைகள் நீங்கும். புதிய வண்டி, வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

குருபகவான்
குருபகவான்

குருபகவான் தரும் பலன்கள்

இந்த ஆண்டில் 05.04.2021 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 4 - ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் இனந்தெரியாத கவலைகள் வந்துப் போகும். ஆனால் உங்களுக்குப் பகை கிரகமான குருபகவான் நீசமடைந்திருப்பதால் பல நன்மைகள் உண்டாகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். சித்தர்களை சந்தித்து அருள் ஆசி பெறுவீர்கள். செலுத்த வேண்டிய வரிகளை தாமதப்படுத்த வேண்டாம். புதியவர்களை நம்பி பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வாகனத்தை கொஞ்சம் கவனமாக இயக்குங்கள்.

ஏப்ரல் 6 - ம் தேதி முதல் செப்டம்பர் 14 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5 - ம் வீட்டில் தொடர்வதால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். காலியாக இருந்த பணப்பை கொஞ்சம் நிரம்பும். நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். கல்வியாளர்கள், ஆன்மிகவாதிகளின் நட்பு கிடைக்கும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடன் இருந்து வந்த கருத்து மோதல்களும் விலகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதைக் கூடும்.

அவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மகளுக்கு ஏதோ ஒரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்பொழுது கூடிவரும். மகன் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார். விலகிச் சென்ற சொந்த - பந்தங்கள் மனம்மாறி வலிய பேசுவார்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள்.

ராகு - கேது

இந்தாண்டு முழுக்க ராசிக்கு 2 - வீட்டில் கேது நிற்பதால் பேச்சில் நிதானம் தேவை. முன்கோபத்தை முற்றிலு தவிர்த்துவிடுங்கள். இல்லையேல் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். ராசிக்கு 8 - ம் வீட்டில் ராகு நிற்பதால் கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து போகும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. காய்கறி, கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை.

அர்த்தாஷ்டம சனி பகவான்

சனிபகவான் உங்கள் சுகஸ்தானமான 4 - ம் வீட்டிலேயே இந்த ஆண்டுமுழுவதும் இருக்கிறார். ஆனால் அர்த்தாஷ்டம மாயிற்றே என்று அஞ்சவேண்டியதில்லை. அவர் அனுகூலமான பலன்களையே தருவார் என்றாலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாகனம் அடிக்கடி பழுதாகும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். தாயாருக்கு சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வேற்றுமதத்தினர்கள் உதவுவார்கள். கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள்.

சனிபகவான்
சனிபகவான்

18.3.2021 முதல் 11.4.2021 வரை ராசிநாதன் சுக்ரன் 6 - மறைவதால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வீட்டில் கருத்து மோதல்களும் வரும். மின் சாதனங்கள், மின்னணு சாதனங்களையெல்லாம் கவனமாக கையாளுங்கள்.

8.2.2021 முதல் 13.4.2021 வரை செவ்வாய் 8 - ல் மறைவதால் சகோதரர்களால் நிம்மதியிழப்பீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உங்கள் சக்தி மீறி எந்த உறுதிமொழியும், யாருக்கும் தர வேண்டாம். கூடுதல் செலவுகளால் திணறுவீர்கள். நெடுநாள் பழகிய நண்பர் ஒருவரின் நட்பை இழக்க நேரிடும். வீடு, மனை வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சிறப்புப் பலன்கள்

வியாபாரிகளே!

தேங்கிய சரக்குகளை இனி விற்றுத் தீர்ப்பீர்கள். சந்தை நிலவரங்களை விரல்நுனியில் வைத்துக் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்வீர்கள். பர்னிச்சர், மருந்து, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. அரசு கெடுபிடியெல்லாம் தளரும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தப் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். வேலையாள்கள் மற்றும் கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது குடைச்சல் தருவார்கள். என்றாலும் பழைய பங்குதாரர்களும் தேடி வருவார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும்.

புத்தாண்டு பலன்கள்
புத்தாண்டு பலன்கள்

உத்தியோகஸ்தர்களே!

அலுவலகத்தில் இருந்த மோசமான சூழ்நிலை இனி மாறும். உங்களின் மதிப்பு மரியாதை கூடும். பழைய பிரச்சனைகளை கிளறிவிட்டு சிலர் வேடிக்கை பார்ப்பார்கள். முக்கிய கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதி தருவதாக இருக்கும். பதவியுயர்வையும் எதிர்பார்க்கலாம்.

இந்த 2021 - ம் ஆண்டு ஆரோக்கியக் குறைவையும், போராட்டத்தையும் தந்தாலும் ஓரளவு அந்தஸ்தையும் அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மலைவையாவூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீநர்த்தன அனுமனை சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்றவர்களுக்கு ஆடை கொடுங்கள். நல்லது நடக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு