Published:Updated:

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... மாடவீதிகளில் வாகனசேவை நடைபெறும்!

திருப்பதி
திருப்பதி

திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவம் கோவிட் அச்சம் காரணமாக பக்தர்கள் யாரும் தரிசிக்க அனுமதியின்றி ஏகாந்தமாக நடைபெற்றது. இந்நிலையில் நவராத்திரி பிரம்மோற்சவமாவது வாகன சேவைகளோடு பக்தர்கள் தரிசிக்கும் வண்ணம் நடைபெற வேண்டும் என்பது பக்தர்கள் வேண்டுதலாக இருந்தது.

திருமலை திருப்பதியில் ஓராண்டில் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறும். அதில் ஒன்றான புகழ்பெற்ற புரட்டாசி பிரம்மோற்சவம் கடந்த மாதம் நடைபெற்றது. வழக்கமாக லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் இந்த பிரம்மோற்சவம் கோவிட் அச்சம் காரணமாக பக்தர்கள் யாரும் தரிசிக்க அனுமதியின்றி ஏகாந்தமாக நடைபெற்றது. இந்நிலையில் நவராத்திரி பிரம்மோற்சவமாவது வாகன சேவைகளோடு பக்தர்கள் தரிசிக்கும் வண்ணம் நடைபெற வேண்டும் என்பது பக்தர்கள் வேண்டுதலாக இருந்தது. அதற்கேற்ப திருமலை திருப்பதி தேவஸ்தானம் நவராத்திரி பிரம்மோற்சவம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திருப்பதி
திருப்பதி

இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவம் 15.10.2020 முதல் 24.102020 வரை நடைபெற உள்ளது. இந்த பிரம்மோற்சவம் வழக்கம்போல் மாடவீதிகளில் நடைபெறும். இதில் குறைந்த அளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதாவது 300 ரூபாய் சிறப்பு தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் இந்த வாகன சேவைகளை சமூக இடைவெளியோடு நின்று தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஒத்திகையும் நேற்று திருமலையில் நடைபெற்றது. 6 அடி இடைவெளியோடு பக்தர்களை நிற்கவைத்து தேவஸ்தான ஊழியர்கள் ஒத்திகை பார்த்தனர். பக்தர்கள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு உடல் வெப்பம் முதலிய பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படுவர்.

நவராத்திரி பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிரல்

15.10.2020 – அங்குரார்பணம் - மாலை 7 - 8மணிக்குள்

16.10.2020 – பங்காரு திருச்சி உற்சவம் - காலை - 9 - 11 மணிக்குள்

பெரிய சேஷ வாகனம் - மாலை 7 - 9 மணிக்குள்

17.10.2020 – சின்ன சேஷ வாகனம் - காலை - 8 - 10 மணிக்குள் -

ஹம்ஸ் வாகனம் - மாலை 7 - 9 மணிக்குள் -

18.10.2020 – சிம்ஹ வாகனம் - காலை 8 - 10 மணிக்குள் -

முத்துப் பல்லக்கு - மாலை - 7 - 9 மணிக்குள் -

19.10.2020 – கற்பக விருட்ச வாகனம் - காலை - 8 -10 மணிக்குள் -

சர்வபூபால வாகனம் - மாலை 7 - 9 மணிக்குள்

திருப்பதி வேங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயில்
திருப்பதி வேங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயில்

20.10.2020 - மோகினி அவதாரம் - காலை : 8 - 10

கருட வாகனம் - மாலை 7 மணி முதல்

21.10.2020 – ஹனுமந்த வாகனம் - காலை - 8 - 10 மணிக்குள்

புஷ்பக விமானம் - பிற்பகல் 3 - 5 மணிக்குள் -

யானை வாகனம் - மாலை 7 - 9 மணிக்குள்-

22.10.2020 – சூர்ய பிரபை வாகனம் - காலை 8 - 10 மணிக்குள்

சந்திரப்பிரபை வாகனம் - மாலை 7 - 9 மணிக்குள்

23.10.2020 - தங்கரதம் - காலை 8 மணிக்கு மேல்

குதிரை வாகனம் - மாலை 7 - 9 மணிக்குள்

24.10.2020 - பலக்கு உற்சவம் - அதிகாலை 3- 5 மணிக்குள்

ஸ்நபன திருமஞ்சனம் மற்றும்

சக்கர நானம் - மாலை - 6 - 9 மணிக்குள்

6.10.2020 அன்று 18669 பேர் பெருமாளை தரிசனம் செய்தனர். இந்த நிலையில் பிரம்மோற்சவத்தை ஒட்டி இன்னும் அதிகமான அளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கருதப்படுகிறது.

ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னரே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

அடுத்த கட்டுரைக்கு