Published:Updated:

திருப்பதி திருமலையில் இரவில் உலவும் வனவிலங்குகள்... அபூர்வ புகைப்படங்கள் வெளியீடு!

எஸ்.கதிரேசன்

சேஷாத்திரி மலையில் காட்டுச் சேவல், நரி, மான், சிறுத்தை, கரடி மற்றும் முள்ளம்பன்றி ஆகிய வனவிலங்குகள் நடமாடும் படங்கள் பதிவாகியுள்ளன. அவற்றைத் தற்போது தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

 Tirupati
Tirupati

திருவேங்கடமும் பத்மாவதி தாயார் குடியிருக்கும் திருப்பதியும் இரு நகரங்களாக இருந்தாலும், பொதுவாக `திருப்பதி' என்று ஒரே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. மலையின் மேல் உள்ள பகுதியை மேல் திருப்பதி என்றும், அடிவாரத்திலிருக்கும் நகரத்தை கீழ்த்திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.

Tirupati
Tirupati
Tirumala Tirupati Devasthanams Website

திருமலையில் சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகள் இருக்கின்றன. இந்த ஏழுமலைகளுக்கு அதிபதி என்பதால், பெருமாளுக்கு 'ஏழுமலையான்’ என்ற பெயர் வந்தது.

இந்த மலைகளில் அபூர்வமான மரங்களும் விலங்குகளும் இருக்கின்றன. அவை சுதந்திரமாக உலவ ஏற்பாடு செய்துள்ள அதேவேளையில், பக்தர்கள் படியேறிச் சென்று பெருமாளை தரிசனம் செய்யவும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

Tirupati
Tirupati
Tirumala Tirupati Devasthanams Website

திருமலையின் ஏழு மலைகளிலும் தேவஸ்தானத்தின் சார்பில் வனப் பராமரிப்புக்காகப் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சேஷாத்திரி மலையில் காட்டுச் சேவல், நரி, மான், சிறுத்தை, கரடி மற்றும் முள்ளம்பன்றி ஆகிய வனவிலங்குகள் நடமாடும் படங்கள் பதிவாகியுள்ளன.

நரி
நரி
Tirumala Tirupati Devasthanam Website

அவற்றைத் தற்போது தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருமலையில் அவை உலவும் இடங்களில் பெரிய அளவிலான வண்ணப்படங்களாக வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கானகச் செல்வங்களைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும் பக்தர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்

காட்டுச் சேவல்
காட்டுச் சேவல்
Tirumala Tirupati Devasthanam Website

இந்தப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெளியான ஒரு அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.