Published:Updated:

சோதனைகள் முடிந்தன. இனி சாதனைகளே... விருச்சிக ராசிக்கான 2021 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விருச்சிகம் - புத்தாண்டு ராசிபலன்கள்
விருச்சிகம் - புத்தாண்டு ராசிபலன்கள்

சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிக்கும் வல்லமை பிறக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அனுபவ அறிவைப் பயன்படுத்தி சில பிரச்னைகளுக்கு யதார்த்தமான தீர்வு காண்பீர்கள்.

வாழ்க்கையே ஒரு போராட்டம் என்பதை நன்கு உணர்ந்து அதைத் திறமையாக எதிர்கொள்ளும் பண்பு கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே.. கடந்த 8 ஆண்டுகளாக ஒன்று மாற்றி ஒன்று என்று போராட்டமாக இருந்த உங்கள் வாழ்க்கை தற்போது பூ வனமாக மாறும் ஆண்டு இது. உங்கள் ராசிக்கு 9 ம் ராசியில் இந்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பூர்விகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் வாய்க்கும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் இங்கிதமாகவும், இதமாகவும் பேசுவீர்கள். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.

புத்தாண்டு கொண்டாட்டம் 2021
புத்தாண்டு கொண்டாட்டம் 2021

குருபகவான்

இந்த ஆண்டு 5.4.2021 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3 - ம் வீட்டில் நிற்பதால் கடினமாக உழைத்து இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வெளிநாடு செல்லும் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். மகன் அல்லது மகளின் திருமணம் கூடிவரும்.

ஆரோக்கியத்தில் சிறு அக்கறை தேவை. லேசான தலை சுற்றல், சலிப்பு, முன்கோபம், சில காரியங்களில் தடைகள் வந்து செல்லும். உறவினர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். பூர்வீகச் சொத்திலிருந்து வந்த வில்லங்கம் விலகும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனைப் போராடி பைசல் செய்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

ஏப்ரல் 6 - ம் தேதி முதல் செப்டம்பர் 14 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 4 - ம் வீட்டில் அமர்கிறார். எனவே மனஉளைச்சல், மறைமுக எதிர்ப்பு, வீண் விமர்சனம், மூட்டு வலி, சிறுசிறு அவமானங்கள் வரக்கூடும். எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். கடன் தொந்தரவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போதும், சாலையைக் கடக்கும் போதும் கவனம் தேவை.

ராகு - கேது

இந்த ஆண்டு ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7 - ம் வீட்டில் தொடர்வதால் சாதிக்க வேண்டுமென்ற வைராக்கியம் வரும். ஆனால் எதையும் முழுமையாக முடிக்க முடியாமல் அவதிபடுவீர்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வந்துபோகும். மனைவி, பிள்ளைகளை அரவணைத்துப் போங்கள். சிலர் உங்களைப் புகழ்வதைப் போல் பேசி உங்களின் திறமையைப் பயன்படுத்தி முன்னேறுவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து, சிக்கனமாக இருக்கப்பாருங்கள். வெகுநாள்களாகச் செல்ல வேண்டுமென நினைத்த புண்ணிய தலத்திற்குச் சென்று வருவீர்கள். ஆனால் ராசிக்குள் கேது நிற்பதால் எதிலும் ஒரு சலிப்பு, டென்ஷன், தலைச்சுற்றல், சோர்வு, காய்ச்சல், தூக்கமின்மை வந்து போகும். கையிருப்புகள் கரையும். சிலரால் நீங்கள் ஏமாற்றப்படக் கூடும்.

சனிபகவான்
சனிபகவான்

சனிபகவான்

தைரியஸ்தானமான 3 - ம் வீட்டில் சனிபகவான் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் திடீர் யோகங்களை வாய்க்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிக்கும் வல்லமை பிறக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அனுபவ அறிவைப் பயன்படுத்தி சில பிரச்னைகளுக்கு யதார்த்தமான தீர்வு காண்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். வழக்கால் பணம் வரும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வெளிமாநிலத்தவர்களுடன் சேர்ந்து தொழில் செய்யும் யோகம் உண்டாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சிறப்புப் பலன்கள்!

வியாபாரிகளே!

இதுவரை கடினமாக உழைத்தும் பலன் இல்லாமல் நஷ்டத்தில் தவித்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் லாபம் சேரும் ஆண்டாக அமையும். தொட்டதெல்லாம் பொன்னாகும். கடையைப் பெரிதாக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். பர்னிச்சர், ஹோட்டல், லாட்ஜ், ஏற்றுமதி - இறக்குமதி, நீசப்பொருட்களால் ஆதாயமடைவீர்கள். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு லாபம் பார்ப்பீர்கள். மொத்தத்தில் வியாபாரிகளுக்கு மிகவும் பொன்னான ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.

ஐயப்பன்
ஐயப்பன்

உத்தியோகஸ்தர்களே!

அலுவலகத்தில் எவ்வளவு உழைத்தாலும் பலன் இல்லையே என்று புலம்பிக்கொண்டிருந்த உங்களுக்குப் பலன் கொடுக்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும். மேலதிகாரிகள் உங்கள் மீது கரிசனத்தோடு நடந்துகொள்வார்கள். பிடித்திருந்த சம்பளம் மற்றும் பிற சலுகைகளைத் திரும்பத் தருவார்கள். பதவி உயர்வும் சம்பள உயர்வையும் எதிர்பார்க்கலாம். புதிய வாய்ப்புகளும் உருவாகும்.

கடுமையான உழைப்பின் மூலம் சாதனைகளைச் செய்யும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.

பரிகாரம்:

கரூர் மாவட்டம், கருப்பத்து£ரில் வீற்றிருக்கும் ஸ்ரீஐயப்பனை சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். மனவளம் குன்றியவர்களுக்கு உதவுங்கள். சுபிட்சம் உண்டாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு