Published:Updated:

நாடு திரும்பிய சாய்னா நேவாலுக்கு உற்சாக வரவேற்பு!

விகடன் விமர்சனக்குழு
நாடு திரும்பிய சாய்னா நேவாலுக்கு உற்சாக வரவேற்பு!
நாடு திரும்பிய சாய்னா நேவாலுக்கு உற்சாக வரவேற்பு!
நாடு திரும்பிய சாய்னா நேவாலுக்கு உற்சாக வரவேற்பு!

லண்டன்: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாடு திரும்பிய சாய்னா நேவாலுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சாய்னா நேவால் சீன வீராங்கனை வாங் ஜின்னை எதிர்கொண்டார்.

இதன் முதல் செட்டை சாய்னா 18-21 என்ற கணக்கில் இழந்தார்.2 ஆவது செட்டில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தபோது வாங் ஜின் தசைப்பிடிப்பால் போட்டியில் இருந்து வெளியேறினார்.அதனால் சாய்னாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.

லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற 3 ஆவது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே துப்பாக்கி சுடுதலில் ககன்நரங் வெண்கல பதக்கமும் (10 மீட்டர் ஏர் ரைபிள்), விஜய்குமார் வெள்ளிப்பதக்கமும் (25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல்) பெற்றனர்.

##~~##
ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா முதல் முறையாக பதக்கம் பெற்றுள்ளது.அந்த வரலாற்று பெருமை சாய்னாவை சேரும். மேலும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 2 ஆவது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
இந்நிலையில்,சாய்னா லண்டனில் இருந்து டெல்லிக்கு வந்தடைந்தார்.அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.பட்டாசுகள் வெடித்தும், மேளதாளங்களுடன் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை சாய்னா ஏற்றுக் கொண்டார்.