Published:Updated:

ஆஷஸுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் சொதப்பலுக்குக் காரணம் என்ன? - ஹேசல்வுட் விளக்கம்

ர.பரத் ராஜ்
ஆஷஸுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் சொதப்பலுக்குக் காரணம் என்ன? - ஹேசல்வுட் விளக்கம்
ஆஷஸுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் சொதப்பலுக்குக் காரணம் என்ன? - ஹேசல்வுட் விளக்கம்

ஆஷஸ் டெஸ்ட் தொடரில், இங்கிலாந்தி அணியைத் தவிடுபொடியாக்கி, 5 போட்டிகள்கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. இதையடுத்து ஆரம்பித்த ஐந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளில், இங்கிலாந்து வெற்றிபெற்று கெத்துகாட்டியுள்ளது. ஆஷஸ் தொடரில், தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய ஆஸ்திரேலியாவால், ஒருநாள் தொடரில் சோபிக்க முடியாததுகுறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ஒருநாள் தொடரில் தோல்விக்குக் காரணம் என்ன என்பது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் விளக்கம் அளித்துள்ளார். 

அவர், `நாங்கள் ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து ஒருநாள் தொடருக்குத் தேவையான மாற்றத்தைக் கொண்டுவரவில்லை. ஆனால், இங்கிலாந்து அணி, ஒருநாள் தொடருக்கு பிரத்யேகமாக பௌலர்கள் வைத்துள்ளனர். அது, அவர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. அவர்கள், மிகச் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். எதிரணி பௌலர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்வதற்கேற்ற பேட்ஸ்மேன்கள் அவர்களின் அணியில் அதிகம். எனவேதான், மிகச் சிறந்த ஒருநாள் அணியாக அவர்கள் திகழ்கிறார்கள்' என்றார்.