Published:Updated:

ஸ்பின்னரே இல்லை... ரோகித் ஷர்மா அவுட்... கடைசி டெஸ்ட்டிலாவது இந்தியாவின் மாற்றம் கைகொடுக்கமா?

ர.பரத் ராஜ்
ஸ்பின்னரே இல்லை... ரோகித் ஷர்மா அவுட்... கடைசி டெஸ்ட்டிலாவது இந்தியாவின் மாற்றம் கைகொடுக்கமா?
ஸ்பின்னரே இல்லை... ரோகித் ஷர்மா அவுட்... கடைசி டெஸ்ட்டிலாவது இந்தியாவின் மாற்றம் கைகொடுக்கமா?

இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று கோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங் செய்ய முடிவெடுத்திருக்கிறார். இதையடுத்து, போட்டிக்கான 11 பேரை அறிவித்துள்ளது இந்திய அணி. 


மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முரளி விஜய், லோகேஷ் ராகுல், செத்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ரஹானே, பார்த்திவ் படேல், ஹர்திக் பாண்ட்யா, புவ்னேஷ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் விளையாட உள்ளனர். முதல் இரண்டு போட்டிகளில், அணியில் இடம்பெற்ற சுழற்பந்துவீச்சாளரான அஷ்வின், இந்தப் போட்டியில் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் புவ்னேஷ்வர் குமார் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல, முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய ரோகித் ஷர்மா நீக்கப்பட்டு, ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். கடைசிப் போட்டியிலாவது ஆறுதல் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் களம் கண்டுள்ளது இந்திய அணி.