Published:Updated:

டெண்டுல்கருக்கு காயமில்லை : மும்பை மருத்துவமனை

விகடன் விமர்சனக்குழு

மும்பை, பிப்.21,2011

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று மும்பை மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் முழங்கால்களில் லேசான வலி ஏற்பட்டதால், அவர் அடுத்து வரும் போட்டிகளில் பங்கேற்பாரா என சந்தேகம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் நேற்றிரவு அவருக்கு எம்.ஆ.ஐ. ஸ்கேன் எடுத்து பரிசோதிக்கப்பட்டது.

இந்தச் சோதனையின் முடிவில், எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் தெளிவாக இருக்கிறது என்றும், அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் மருத்துவமனையில் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே சச்சினுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், வரும் 27ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக, சச்சின் டெண்டுல்கர் இன்று மாலை பெங்களூர் செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.