Published:Updated:

மொகாலி டெஸ்ட்: ஆஸ்திரேலியா பேட்டிங்

Vikatan Correspondent
மொகாலி டெஸ்ட்: ஆஸ்திரேலியா பேட்டிங்
மொகாலி டெஸ்ட்: ஆஸ்திரேலியா பேட்டிங்
மொகாலி டெஸ்ட்: ஆஸ்திரேலியா பேட்டிங்

மொகாலி: மொகாலியில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

நேற்று தொடங்க இருந்த 3வது டெஸ்ட் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில், முதல் நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது.

2வது நாளான இன்று மழை நின்றதால் டாஸ் போடப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாக டாஸ் விழுந்தது. இதனால் முதலில் பேட்ங் செய்வதாக கேப்டன் கிளார்க் அறிவித்தார்.

##~~##
அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தொடக்க வீரர்களாக வார்னர், கோவன் களம் இறங்கின்றனர்.
வாட்சன், ஜான்சன், பேட்டின்சன் உள்பட 4 வீரர்கள் நீக்கப்பட்ட நிலையில் ஸ்மித், ஹெட்டின், லயான் இன்றைய போட்டியில் களம் இறங்குகின்றனர்.
இந்திய அணியில் சேவாக் நீக்கப்பட்டு தவான் தொடக்க வீரராக களம் இறங்குகிறார். மற்றபடி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 3வது டெஸ்ட்டிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைவில் இந்திய வீரர்கள் உள்ளனர்.