Published:Updated:

99 ரன்னில் ஆட்டமிழந்தார் ஸ்டார்க்: ஆஸ்திரேலியா 408 ரன்னுக்கு அவுட்!

Vikatan Correspondent
99 ரன்னில் ஆட்டமிழந்தார் ஸ்டார்க்: ஆஸ்திரேலியா 408 ரன்னுக்கு அவுட்!
99 ரன்னில் ஆட்டமிழந்தார் ஸ்டார்க்: ஆஸ்திரேலியா 408 ரன்னுக்கு அவுட்!
99 ரன்னில் ஆட்டமிழந்தார் ஸ்டார்க்: ஆஸ்திரேலியா 408 ரன்னுக்கு அவுட்!

மொகாலி: மொகாலியில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 408 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. அபாரமாக விளையாடிய பந்துவீச்சாளர் ஸ்டார்க் ஒரு ரன்னில் சதத்தை தவறிவிட்டார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் வார்னர்- கோவன் ஜோடி நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் குவித்தது. இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார். 71 ரன் எடுத்திருந்த வார்னர், ஜடேஜா பந்தில் ஆட்டம் வெளியேறினார்.

இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் கிளார்க் டக் அவுட் ஆனார். இவரது விக்கெட்டையும் ஜடேஜா கைப்பற்றினார். பின்னர் வந்த ஹக்கீஸ் 2 ரன்னில் வீழ்ந்தார். இதையடுத்து களம் புகுந்த ஸ்மித், கோவனுடன் ஜோடி சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

இந்த ஜோடியை அஸ்வின் பிரி்த்தார். 86 ரன் எடுத்திருந்த கோவன், அஸ்வின் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த ஹெட்டின் 21 ரன்னில் வெளியேறினார். ஹென்றியூக்ஸ், சிடில் வந்த வேகத்தில் டக் அவுட் ஆனார்கள். பின்னர் ஸ்மித்- ஸ்டார்க் ஜோடி அபாரமாக விளையாடி ரன் சேர்த்தது. இந்த ஜோடியை பிரிக்க தோனி எடுத்த முயற்சிகள் தோல்வியே அடைந்தது.

##~~##
இந்த நிலையில் ஓஜாவை பந்துவீச அழைத்த தோனி, ஸ்மித் விக்கெட்டை ஸ்டெம்பிங் முறையில் வீழ்த்தினார். சதம் அடிக்க 8 ரன் இருந்தபோது ஸ்மித் 92 ரன்னில் வெளியேறினார்.
மறுமுனையில் வேகபந்துவீச்சாளர் ஸ்டார்க் அபாரமாக விளையாடி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 99 ரன்னில் இசாந்த் சர்மா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதையடுத்து களம் இறங்கிய டேகர்டி 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 408 ரன்கள்  எடுத்துள்ளது. லயான் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 9 ரன்னில் இருந்தார்.
இந்திய தரப்பில் இசாந்த் சர்மா, ஜடேஜா தலா 3 விக்கெட்டும், அஸ்வின், ஓஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.தற்போது இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது.