Published:Updated:

ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இண்டியன்ஸ் இன்று மோதல்!

விகடன் விமர்சனக்குழு
ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இண்டியன்ஸ் இன்று மோதல்!
ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இண்டியன்ஸ் இன்று மோதல்!
ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இண்டியன்ஸ் இன்று மோதல்!

சென்னை: ஐ.பி.எல் போட்டியில், இரண்டு பலமான அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸும், மும்பை இண்டியன்ஸும் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் மோதுகின்றன.

இரண்டு அணிகளிலும் சிறப்பாக விளையக்கூடிய வீரர்கள் இருப்பதால் யார் வெற்றி பெறுவார்கள்? என்பது ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஏற்கனவே அனைத்து டிக்கெட்களும் விற்று இருப்பதால் மைதானம் ரசிகர்களால் நிரம்பி வழியும். சென்னைக்கு இத முதலாவது ஆட்டம். மும்பைக்கு இரண்டாவது ஆட்டம். பெங்களூரிடம் முதல் ஆட்டத்தில் தோற்றுள்ளதால் மும்பை இந்த போட்டியில் அதிக கவனம் செலுத்தி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணியில் தோனி, மைக்கேல் ஹுஸே, முரளி விஜய், பிராவோ, ரெய்னா ஆகியோரின் ஆட்டங்கள் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல மும்பை அணியில் ரிக்கி பாண்டிங், டெண்டுல்கர், தினேஷ் கார்த்திக் புல் பார்மில் இருப்பதால் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

##~~##
மலிங்கா இல்லாதது குறை என்றாலும் அதை மற்ற வீரர்கள் ஈடுகட்டுவார்கள். இரண்டு அணிகளிலும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்பதால் பவுண்டரி, சிக்ஸர்களை எதிர்பார்க்கலாம். இரு அணிகளிலும் பவுலர்கள் பலவீனமாக இருப்பதால் முதலில் பேட் செய்யும் அணி அதிக ரன்களை குவிக்க வாய்ப்புண்டு.