Published:Updated:

கேப்டன் பொறுப்பில் இருந்து பான்டிங் விலகல்

விகடன் விமர்சனக்குழு

சிட்னி, மார்ச் 29,2011

உலகக் கோப்பை காலிறுதியின் இந்தியாவிடம் தோல்வியுற்று வெளியேறதன் எதிரொலியாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரிக்கி பான்டிங் விலகினார். ##~~##

இதுகுறித்து சிட்னியில் இன்று நிருபர்களிடம் அவர் கூறுகையில், "ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து உடனடியாக விலகிக் கொள்கிறேன்.

ஆனால், என்னை ஒரு ஆட்டக்காரராக தேர்வு செய்ய வேண்டும். அணிக்காக தனிப்பட்ட முறையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்," என்றார் ரிக்கி பான்டிங்.

கடந்த 9 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்து வந்த ரிக்கி பான்டிங், அண்மையில் ஆஷஸ் தொடரை இழந்தது, உலக கோப்பை வாய்ப்பை நழுவ விட்டது என தொடர் தோல்விகளால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது என முடிவு எடுத்துள்ளார்.