Published:Updated:

இந்தியாவிடம் வலியுறுத்த கிலானிக்கு கோரிக்கை!

விகடன் விமர்சனக்குழு

கராச்சி, மார்ச் 29,2011

இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் உறவைப் புதுப்பிப்பதற்கு, பிரதமர் கிலானி தனது இந்தியப் பயணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.##~~##

உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை போட்டி புதன்கிழமை நடைபெறுகிறது.

மோஹாலியில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இந்தப் போட்டியை, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் நேரில் காண்கின்றனர். இதையொட்டி, மொஹாலி மைதானத்தையும், அதைச் சுற்றியும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

'அண்மைக்காலமாக, பாகிஸ்தானில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொள்வது இல்லை. இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச அளவில் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகிறது.

இந்தச் சூழலில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானி, இந்திய அணி மீண்டும் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வழிவகுக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.

மன்மோகனின் அழைப்பை ஏற்றுச் செல்லும் கிலானி, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இந்திய - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் உறவை புதுப்பிக்க வேண்டும்,' என்று பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.