Published:Updated:

``இனி இப்படி பேசுவியா?" முறையற்ற ரசிகர் ஒருவருக்கு ICC-யின் அதிரடி பதில்!

சுப தமிழினியன்

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவரின் தரம் தாழ்ந்த ட்விட்டுக்கு ஐ.சி.சி மிகச்சரியான பதிலடி ஒன்றை கொடுத்திருக்கிறது.

``இனி இப்படி பேசுவியா?" முறையற்ற ரசிகர் ஒருவருக்கு ICC-யின் அதிரடி பதில்!
``இனி இப்படி பேசுவியா?" முறையற்ற ரசிகர் ஒருவருக்கு ICC-யின் அதிரடி பதில்!

இந்திய பெண்கள் அணியின் சூப்பர் ஸ்டாரான "ஸ்மிருதி மந்தனா" சமீபத்தில் தெரிவித்த கருத்து ஒன்றை அழகிய மேற்கோளாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது ஐ.சி.சி. 

அந்த ட்வீட்டுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர், இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கேவலமாக விமர்சித்தும் மகளிர் கிரிக்கெட் குறித்தும் வீராங்கனைகள் குறித்தும் தரக்குறைவான கருத்தை பதிவு செய்திருந்தார்.

``இனி இப்படி பேசுவியா?" முறையற்ற ரசிகர் ஒருவருக்கு ICC-யின் அதிரடி பதில்!

அந்த பாகிஸ்தான் ரசிகரின் மோசமான லைனில் வீசப்பட்ட பந்தை மிக அனாயசமாக சிக்ஸர் அடித்திருக்கிறது ஐ.சி.சி

இதோ, அந்த சிக்ஸர்...

இது 2019. திருந்துங்கள். Bye! எனக் குறிப்பிட்டு அவரை பிளாக் செய்திருப்பதாக டிவிட் செய்திருக்கிறது ஐ.சி.சி.  

ஐ.சி.சி-யின் இந்தச் சரியான பதிலடிக்கு ரசிகர்கள் பலரும் கீழே கமென்ட்டில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். பாகிஸ்தான் மானத்தை இப்படியா வாங்குவீர்கள் என ஒரு ரசிகர் அறிவுரை கூற, ``பார்த்து எதாவது செய்யுங்க" என இன்னொரு பாகிஸ்தான் ரசிகர் ட்விட்டரின் அஃபிசியல் ஐடியை டேக் செய்து முறையிட்டிருந்தார். 

பலரின் புகார்களைத் தொடர்ந்து தரக்குறைவான கருத்தை வெளியிட்ட நபரின் ட்விட்டர் கணக்கு தற்போது முடக்கப்பட்டிருக்கிறது. 

``இனி இப்படி பேசுவியா?" முறையற்ற ரசிகர் ஒருவருக்கு ICC-யின் அதிரடி பதில்!

ஐ.சி.சி-யின் இந்த அற்புதமான பதிலடி பற்றிய உங்களின் கருத்தை கமென்ட் செய்யுங்கள்.

Vikatan