Published:Updated:

சச்சின் சாதனையை குக் முறியடிப்பார்: சொல்கிறார் பீட்டர்சன்

விகடன் விமர்சனக்குழு
சச்சின் சாதனையை குக் முறியடிப்பார்: சொல்கிறார் பீட்டர்சன்
சச்சின் சாதனையை குக் முறியடிப்பார்: சொல்கிறார் பீட்டர்சன்
சச்சின் சாதனையை குக் முறியடிப்பார்: சொல்கிறார் பீட்டர்சன்

லண்டன்: இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் முறியடிப்பார் என்று பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் சச்சின், இதுவரை 198 டெஸ்டில் விளையாடி 51 சதம் உள்பட 15,837 ரன்கள் குவித்திருக்கிறார். 28 வயது நிரம்பிய இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் 92 டெஸ்டில் விளையாடி 25 சதம் உள்பட 7,524 ரன்கள் எடுத்துள்ளார்.

அதாவது டெஸ்டில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் இருக்க, குக் 31வது இடத்தில் உள்ளார்.

இந்த நிலையில் சச்சினின் டெஸ்ட் சாதனையை அலஸ்டயர் குக்கால் முறியடிக்க முடியும் என்று இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.


இது தொடர்பாக பீட்டர்சன் கூறுகையில், என்னை பொறுத்தவரை இங்கிலாந்து அணியை வழிநடத்த சரியான நபர் குக் தான் என்றார்.

##~~##
தொடர்ச்சியாக ரன் குவித்து வரும் அவரது ஆட்டம் இன்னும் மென்மேலும் மேம்பட்டுக் கொண்டே இருக்கும் என்று கூறிய குக், அப்போது டெஸ்ட் அரங்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சாதனைகளையும் முறியடிப்பார் என்றார்.
இங்கிலாந்தின் அனைத்து சாதனைகளையும் குக் தகர்த்து விடுவார் என்று கூறிய குக், டெஸ்டில் அவர் இதுவரை எடுத்துள்ள ரன்கள் மற்றும் அவரது வயதை வைத்து பார்க்கும் போது, சச்சினின் அதிக ரன் சாதனையை முறியடிக்க அவருக்கு நல்ல வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.