Published:Updated:

முத்தரப்பு கிரிக்கெட்: மேற்கிந்திய தீவு- இலங்கை இன்று மோதல்

விகடன் விமர்சனக்குழு
முத்தரப்பு கிரிக்கெட்: மேற்கிந்திய தீவு- இலங்கை இன்று மோதல்
முத்தரப்பு கிரிக்கெட்: மேற்கிந்திய தீவு- இலங்கை இன்று மோதல்
முத்தரப்பு கிரிக்கெட்: மேற்கிந்திய தீவு- இலங்கை இன்று மோதல்

கிங்ஸ்டன்: 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மேற்கிந்திய தீவு - இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவின் கிங்ஸ்டனில் இன்று தொடங்குகிறது.

இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

கிங்ஸ்டனில் இன்று (28ஆம் தேதி) நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் -இலங்கை அணிகள் மோதுகின்றன. மேற்கிந்திய தீவுகள் அணியில் சர்வான், ஜாசன் ஹோல்டர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேட்ச் செய்யாமல் பிடித்தது போல் நடித்து அப்பீல் செய்ததால் 2 ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் ராம்டின் இந்த போட்டியில் அணியினருடன் இணைகிறார்.

##~~##
இலங்கை அணியில் காயம் காரணமாக தில்சான் இடம் பெறவில்லை. அந்த அணி பேட்டிங்கில் மஹேலா ஜெயவர்த்தனே, சங்கக்கரா ஆகியோரையே அதிகம் நம்பி இருக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்கள் அஜந்தா மென்டிஸ், செனநாயகே, ஹெராத் ஆகியோர் மேற்கிந்திய தீவு பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி டென் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மேற்கிந்திய தீவுகள் : வெய்ன் பிராவோ (கேப்டன்), டேரன் பிராவோ, கிறிஸ் கெய்ல், பொல்லார்ட், ரவி ராம்பால், டேரன் சேமி, டேவோன் சுமித், டினோ பெஸ்ட், ஜான்சன் சார்லஸ், சுனில் நரின், தினேஷ் ராம்டின், கெமார் ரோச், மர்லோன் சாமுவேல்ஸ்.
இலங்கை: ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), தில்ஹரா லோகுகெட்டிஜ், ஹெராத், குலசேகரா, அஜந்தா மென்டிஸ், குசால் பெரேரா, செனநாயகே, திரிமன்னே, தினேஷ் சன்டிமால், ஷமிந்தா எரங்கா, மஹேலா ஜெயவர்த்தனே, மலிங்கா, ஜீவன் மென்டிஸ், சங்கக்கரா, உபுல் தரங்கா.